← All free notes
Keyword: INDUS

Indus Valley Civilisation: Which City, Which Find

சிந்து சமவெளி நாகரிகம்: எந்த நகரம், என்ன கண்டுபிடிப்பு
Daily One Topic #10 - Prelims: History of India (Indus Valley Civilisation)
PDF
Download the notes PDF31 pages, English and Tamil, free
Download PDF ↓

The six Harappan cities on a map (Harappa and Mohenjo-daro in Pakistan; Lothal, Dholavira, Kalibangan and Rakhigarhi in India), a site / place / find table (Great Bath, dockyard, ploughed fields, granary), key facts, all 49 Indus Valley questions from recent TNPSC exams with answers, and 8 practice MCQs. Bilingual notes.

வரைபடத்தில் ஆறு ஹரப்பா நகரங்கள் (பாகிஸ்தானில் ஹரப்பா, மொகஞ்சதாரோ; இந்தியாவில் லோத்தல், தோலாவிரா, காலிபங்கன், ராக்கிகர்ஹி), நகரம் / இடம் / கண்டுபிடிப்பு அட்டவணை (பெருங்குளம், கப்பல் துறை, உழுத வயல், களஞ்சியம்), முக்கியச் செய்திகள், சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்ட 49 சிந்து சமவெளி வினாக்கள் விடையுடன், 8 பயிற்சி வினாக்கள். இருமொழிக் குறிப்புகள்.

Why this topic matters இந்த topic ஏன் முக்கியம்?

49 questions on the Indus Valley in 37 recent TNPSC exams (Group 1, 1-B/1-C, 2/2A, 4, CTS and more). Most ask: which site, which find, which state or country.

சமீபத்திய 37 TNPSC தேர்வுகளில் சிந்து சமவெளி பற்றி 49 வினாக்கள். பெரும்பாலானவை: எந்த நகரம், என்ன கிடைத்தது, எந்த மாநிலம் / நாடு.

The sites on the map வரைபடத்தில் நகரங்கள்

Major Harappan sites (Pakistan side: Harappa, Mohenjo-daro; India side: Lothal, Dholavira, Kalibangan, Rakhigarhi)
முக்கிய ஹரப்பா நகரங்கள் (பாகிஸ்தான்: ஹரப்பா, மொகஞ்சதாரோ; இந்தியா: லோத்தல், தோலாவிரா, காலிபங்கன், ராக்கிகர்ஹி)

Site, place, find நகரம், இடம், கண்டுபிடிப்பு

Siteநகரம்Today inஇன்றுFamous forசிறப்பு
Harappaஹரப்பாPunjab, Pakistanபஞ்சாப், பாகிஸ்தான்Granaries; first described by Charles Masson; bricks taken for the Lahore-Karachi railway (1856)தானியக் களஞ்சியங்கள்; முதலில் விவரித்தவர் சார்லஸ் மேசன்; லாகூர்-கராச்சி ரயில் பாதைக்கு செங்கற்கள் எடுக்கப்பட்டன (1856)
Mohenjo-daroமொகஞ்சதாரோSindh, Pakistanசிந்து மாகாணம், பாகிஸ்தான்Great Bath (water-tight, natural bitumen), Assembly Hall, dancing girl, priest-king statue; UNESCO World Heritage Siteபெருங்குளம் (இயற்கை பிற்றுமின், நீர் கசியாதது), சபைக் கூடம், நடனமாடும் பெண் சிலை, மதகுரு சிலை; யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னம்
Lothalலோத்தல்Gujarat, India (tributary of the Sabarmati)குஜராத், இந்தியா (சபர்மதியின் கிளையாறு)Naval dockyard; ivory scale; carnelian beadsகப்பல் துறை (dockyard); தந்த அளவுகோல்; கார்னிலியன் மணிகள்
Kalibanganகாலிபங்கன்Rajasthan, Indiaராஜஸ்தான், இந்தியாPloughed fieldsஉழுத வயல்கள்
Rakhigarhiராக்கிகர்ஹிHaryana, Indiaஹரியானா, இந்தியாGranary with mud-brick walls (Mature Harappan phase)மண் செங்கல் சுவர்களுடன் தானியக் களஞ்சியம் (முதிர்ந்த ஹரப்பா காலம்)
DholaviraதோலாவிராGujarat, Indiaகுஜராத், இந்தியாOne of the major planned cities (11th Std)முக்கிய திட்டமிட்ட நகரங்களுள் ஒன்று (11-ஆம் வகுப்பு)

Key facts முக்கியச் செய்திகள்

Time: 3300 to 1900 BCE (radiocarbon dating); Bronze Age; an urban civilisation.

காலம்: கி.மு. 3300 முதல் 1900 வரை (ரேடியோ கார்பன் முறை); வெண்கலக் காலம்; நகர நாகரிகம்.

In 1924 Sir John Marshall, Director General of the ASI, found common features between Harappa and Mohenjo-daro and called it one large civilisation.

1924-இல் தொல்லியல் துறைத் தலைமை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் ஹரப்பா, மொகஞ்சதாரோ இரண்டிலும் பொதுவான அம்சங்களைக் கண்டு இது ஒரே பெரிய நாகரிகம் என்றார்.

The ASI was started in 1861 with Alexander Cunningham as Surveyor.

இந்தியத் தொல்லியல் துறை 1861-இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் தலைமையில் தொடங்கப்பட்டது.

Town planning, covered drains with a gentle slope, burnt bricks, standardised weights and measures.

நகரத் திட்டமிடல், சாய்வுடன் மூடிய கழிவுநீர் வடிகால்கள், சுட்ட செங்கற்கள், சீரான எடைகளும் அளவுகளும்.

Trade with Mesopotamia: the Indus region is called Meluhha in cuneiform inscriptions.

மெசபடோமியாவுடன் வணிகம்: கியூனிஃபார்ம் கல்வெட்டுகளில் சிந்துப் பகுதி மெலுஹா எனப்படுகிறது.

The horse was not known to them; their cattle are called Zebu.

அவர்களுக்குக் குதிரை தெரியாது; அவர்களின் காளைகள் ஜெபு எனப்படும்.

After Partition, Harappa and Mohenjo-daro went to Pakistan; Kalibangan, Lothal, Rakhigarhi and Dholavira were excavated on the Indian side.

பிரிவினைக்குப் பிறகு ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் பாகிஸ்தானுக்குச் சென்றன; காலிபங்கன், லோத்தல், ராக்கிகர்ஹி, தோலாவிரா இந்தியப் பகுதியில் அகழ்வாய்வு செய்யப்பட்டன.

Indus Valley PYQs from recent TNPSC exams சமீபத்திய TNPSC தேர்வுகளில் சிந்து சமவெளி வினாக்கள்

1. [Group I-B/I-C Prelims 2024 (Q1-100)] Which fertile region is known as the garden of Sindh?
‘
சிந்துவின் தோட்டம்’ என்று அழைக்கப்பட்ட செழிப்பான பகுதி எது?
A) Mohenjadaro / மொகஞ்சதாரோB) Harrappa / ஹரப்பாC) Punjab / பஞ்சாப்D) Lahore / லாகூர்
Answer / விடை: A) Mohenjadaro
2. [Asst Agricultural Officer & Asst Horticultural Officer (07/02/2024)] It was used by the Harappans for making stone blades and tools. /
ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.
A) Rohri chert / ரோரி செர்ட்B) Steatite / ஸ்டீட்டைட்C) Lapis lazuli / வைடூரியம்D) Carnelian / கார்னிலியன்
Answer / விடை: A) Rohri chert
3. [Combined Accounts Services Exam (05-06/02/2024)] Name the four animals found in the Pasupati Seal of Mohenjodaro /
மொகஞ்சதாரோவின் பசுபதி முத்திரையில் காணப்படும் நான்கு விலங்குகளின் பெயரைக் குறிப்பிடுக.
A) Lion, Tiger, Hippopotamus, Elephant / சிங்கம், புலி, நீர்யானை, யானைB) Rhinoceros, Bull, Horse, Tiger / காண்டாமிருகம், காளை, குதிரை, புலிC) Lion, Deer, Buffalo, Cat / சிங்கம், மான், எருமை, பூனைD) Elephant, Tiger, Rhinoceros, Buffalo / யானை, புலி, காண்டாமிருகம், எருமை
Answer / விடை: D) Elephant, Tiger, Rhinoceros, Buffalo
4. [Hostel Superintendent cum PTO (21/01/2024)] Which of the following statements are true about original inhabitants
and their culture?
(i) Indus civilisation had more than one group of people.
(ii) Several groups including farmers past oralists and hunter- gatherers, lived in the Indus region.
(iii) Indus civilisation had more than five group of people. /
ஹரப்பா மக்களும், பண்பாடும் என்ற தலைப்பின் கீழ்க்கண்ட கூற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க :
(i) சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிககமான குழுக்கள் இருந்தன.
(ii) சிந்துவெளியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வேட்டையாடுவோர் உணவு சேகரிப்போர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
(iii) சிந்துவெளி நாகரீகத்தில் ஒன்றுக்கும் அதிகமான ஐந்து குழுக்கள் இருந்தன.
A) (i) only / (i) மட்டும்B) (i) and (ii) only / (i), (ii) மட்டும்C) (i) and (iii) only / (i), (iii) மட்டும்D) (ii) and (iii) only / (ii), (iii) மட்டும்
Answer / விடை: B) (i) and (ii) only
5. [Executive Officer Grade-I HR&CE (06-07/01/2024)] Which tree was considered as supreme deity during the Indus Valley Civilization? /
சிந்து சமவெளி நாகரீகத்தின் போது எந்த மரம் உச்ச தெய்வமாக கருதப்பட்டது
A) Banyan / ஆலமரம்B) Neem / வேப்பமரம்C) Palm / பனை மரம்D) Pipal / அரசமரம்
Answer / விடை: D) Pipal
6. [Combined Engineering Services (06-07/01/2024)] Which one of the Statement is incorrect regarding Lothal, the Indus city
1. It found at Gulf of Cambay
2. It found with a dock yard 216 meter wide and 37 metre long
3. The dock yard connected with Bhogava river
4. It was a port city and where foreign trade was carried /
கீழ்கண்ட லோதல் என்ற சிந்து நதி நகரத்தை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. லோதல் காம்பே வளைகுடாவில் காணப்படுகிறது
2. இது ஒரு துறைமுக நகரமாகும், இதன் நீளம் 37 மீட்டர் அகலம் 216 மீட்டர்
3. இந்நகரம் போகாவா என்ற ஆற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது
4. இத்துறைமுக நகரத்தில் இருந்து வெளிநாட்டு வர்த்தகம் நடந்தது
A) 1 only / 1 மட்டும்B) 2 only / 2 மட்டும்C) 3 only / 3 மட்டும்D) 4 only / 4 மட்டும்
Answer / விடை: B) 2 only
7. [Combined Engineering Services (06-07/01/2024)] Match the harappan sites with their archaeological remains
(a) Mohenjodaro 1. Cemetry H
(b) Harappa 2. Bronze statue of dancing girl
(c) Lothal 3. Terracotta plough
(d) Banawali 4. Ivory scale /
ஹரப்பா இடங்களை அதன் தொல்லியல் எச்சங்களோடு பொருத்துக
(a) மொகஞ்சதாரோ 1. இடுகாடு H
(b) ஹரப்பா 2. வெண்கல நடனமாடும் பெண் சிலை
(c) லோதல் 3. டெரகோட்டா கலப்பை
(d) பனாவாலி 4. தந்தத்தால் ஆன அளவுகோல்
A) 1243B) 3124C) 2143D) 4321
Answer / விடை: C) 2143
8. [Mass Interviewer & Social Case Work Expert (09-10/12/2023)] Point out the wrong statement of the following:
I. The Indus Seals have not been deciphered so far.
II. Indus civilization was a notable urban culture.
III. Indus people used large number of weights.
IV. Indus people knew the art of using the metal iron. /
பின்வருவனவற்றுள் தவறான கருத்தை குறிப்பிடுக :
I. சிந்து முத்திரைகள் இதுவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
II. சிந்து சமவெளி நாகரிகம் ஒரு குறிப்பிடத்தக்க நகர கலாச்சாரம் ஆகும்
III. சிந்து சமவெளி மக்கள் அதிக அளவிலான அளவை முறைகளை பயன்படுத்தினர்.
IV. சிந்து சமவெளி மக்கள் இரும்பை பயன்படுத்தும் கலையை அறிந்திருந்தனர்.
A) IB) IIC) IIID) IV
Answer / விடை: D) IV
9. [Junior Analyst, Drugs Testing Lab (05/12/2023)] The evidence of the disposal of the dead at Harappa was named as______ /
ஹரப்பாவில் இறந்தவர்களை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் ஆதாரத்தை ______ என பெயரிடப்பட்டுள்ளது.
A) Cemetery R - 37 / கல்லறை R - 37B) Cemetery S - 77 / கல்லறை S - 77C) Cemetery T - 67 / கல்லறை T - 67D) Cemetery U - 87 / கல்லறை U - 87
Answer / விடை: A) Cemetery R - 37
10. [Asst Training Officer & Jr Technical Asst (05-06/10/2023)] _____ had a planned town, built on a planned town, built on a platform.
_____
ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம்.
A) Lothal / லோத்தல்B) Harappa / ஹரப்பாC) Mohenjo daro / மொகஞ்சதாரோD) Kalibangan / காலிபங்கன்
Answer / விடை: C) Mohenjo daro
11. [Combined Research Assistant (09-10/09/2023)] Harrappan deals how the picture of
1. Rhinoceroses
2. Elephants
3. Tiger
4. Camel /
ஹரப்பா முத்திரைகளில் காணப்படும் முத்திரைகள்
1. நீர் யானைகள்
2. யானைகள்
3. புலிகள்
4. ஒட்டகம்
A) 1 only / 1 மட்டும்B) 1, 2 only / 1, 2 மட்டும்C) 1, 2, 3 only / 1, 2, 3 மட்டும்D) 1, 2, 3, 4 / 1, 2, 3, 4
Answer / விடை: D) 1, 2, 3, 4
12. [Junior Scientific Officer (23/07/2023)] In connection with Indus valley civilization which of the following is incorrect?
Material Site
(i) Shell -Nageshwar
(ii) Lapis Lazuli - Shortughai
(iii) Carnelian - Oman
(iv) Steatite -Rajasthan /
சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக எது தவறான பொருத்தம்
பொருள் நகரம்
(i) சங்கு -நாகேஷ்வர்
(ii) வைடூரியம் -ஷார்டுகை
(iii) கார்னீலியன் -ஓமன்
(iv) ஸ்டீட்டைட் -ராஜஸ்தான்
A) (i) only / (i) மட்டும்B) (i) and (ii) / (i) மற்றும் (ii)C) (iii) only / (iii) மட்டும்D) (i), (ii) and (ii) / (i), (ii) மற்றும் (ii)
Answer / விடை: C) (iii) only
13. [Assistant Jailor (01/07/2023)] What is the meaning of ‘Loth’ in Lothal in Gujarat language? /
குஜராத் மொழியில் லோத்தல் என்பதில் உள்ள “லோத்' என்பதன் பொருள் என்ன?
A) Mound / மேடுB) Black Bangles / கருப்பு வளையல்கள்C) Dead / இறந்தD) Articles / பொருட்கள்
Answer / விடை: C) Dead
14. [Assistant Jailor (01/07/2023)] Which metal was not used during the Harappan civilization? /
ஹரப்பா நாகரீகத்தில் பயன்படுத்தப்படாத உலோகம் எது?
A) Gold / தங்கம்B) Copper / செப்பு/தாமிரம்C) Iron / இரும்புD) Bronze / வெங்கலம்
Answer / விடை: C) Iron
15. [Combined Engineering Subordinate Services (27/05/2023)] Harappa was first visited by _____ in 1826 CE (AD) /
ஹரப்பாவிற்கு முதன்முதலில் பொ.ஆ. 1826-இல் வருகை தந்தவர்
A) Amri / அம்ரிB) Charles Mason / சார்லஸ் மேசன்C) Alexander Burnes / அலெக்ஸாண்டர் பர்ன்ஸ்D) Sir John Marshal / சர் ஜான் மார்ஷல்
Answer / விடை: B) Charles Mason
16. [Road Inspector RD&PR (07/05/2023)] Match correctly the following Indus Valley Civilization sites with its locations.
(a) Harappa 1. Sindh
(b) Mohenjadaro 2. Gujarath
(c) Kalibangan 3. Punjab
(d) Lothal 4. Rajasthan /
சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களை அதன் இருப்பிடத்துடன் சரியாக பொருத்துக.
(a) ஹரப்பா 1. சிந்து
(b) மொலஹெஞ்சதாரோ 2. குஜராத்
(c) காளிபங்கன் 3. பஞ்சாப்
(d) லோத்தல் 4. ராஜஸ்தான்
A) 2413B) 3142C) 3421D) 2143
Answer / விடை: B) 3142
17. [Agricultural Officer Extension / ADA / HO (20-21/05/2023)] Under whose guidance the sites of Mohenjodaro and Harappa were excavated? /
யாருடைய வழிகாட்டுதலின் படி மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.
A) Mortimer Wheeler / மார்டிமர் வீலர்B) Sir. J. Marshall /சர். ஜே. மார்ஷல்C) Alexander Cunningham / அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்D) S.R.Rao / எஸ். ஆர். ராவ்
Answer / விடை: B) Sir. J. Marshall /சர். ஜே. மார்ஷல்
18. [Agricultural Officer Extension / ADA / HO (20-21/05/2023)] Which among the following scholars was the first to discover the traces of the Harappan Civilization? /
ஹரப்பன் நாகரிகத்தின் தடயங்களை முதலில் கண்டறிந்த அறிஞர் யார்?
A) Martimer Wheeler / மார்டிமர் வீலர்B) R.D. Banerjee / ஆர்.டி. பானர்ஜிC) A. Cunnihgham / அ. கன்னிங்ஹாம்D) Daya Ram Sahni / தயா ராம் சாஹ்னி
Answer / விடை: C) A. Cunnihgham
19. [Group 1 Prelims 2024 (Q101-200)] Which of the following statements about the Harappan Civilisation is not correct? /
பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
A) Pipal and Acacia trees were regarded as celestial plants / அரச மரமும் அக்கேஷியா மரமும் புனித மரமாகக் கருதப்பட்டனB) Terracotta female figures are considered to be representation of mother goddess / களிமண் பெண் உருவங்கள் பெண் தெய்வங்களின் பிரதிநிதித்துவமாக கருதப்பட்டனC) The people of Harappan Civilisation never disposed of their dead by the method of cremation / ஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லைD) Indus people worshipped the prototype of siva / சிவனின் ஆதி வடிவத்தை வழிபட்டனர்
Answer / விடை: C) The people of Harappan Civilisation never disposed of their dead by the method of cremation
20. [Group I-B/I-C Prelims 2024 (Q1-100)] The Harappans mainly settled on the banks of rivers. Match the following settlemenets with the bank of rivers on which they are located:
a) Lothal 1. Indus
b) Kalibangan 2. Sutlej
c) Ropar 3. Ravi
d) Harappa 4. Ghaggar
e) Mohenja-daro 5. Bhogwa /
ஹரப்பா மக்கள் ஆற்றுப்படுக்கையில் தங்கி இருந்தனர். அவர்களின் இருப்பிடம் எந்த ஆற்றுப்படுக்கையில் தங்கியிருந்தனர் என்பதைக் குறிப்பிடுக
a) லோத்தல் 1. சிந்து
b) காலிபங்கன் 2. சட்லெஜ்
c) ரூப்பர் 3. ராவி
d) ஹரப்பா 4. காகர்
e) மொகஞ்சதரோ 5. போகாவா
A) 54231B) 25143C) 45231D) 54321
Answer / விடை: A) 54231
21. [Group I-B/I-C Prelims 2024 (Q1-100)] _____ is located on Khadir Island in the Rann of Kutch at Gujarat.
_____
என்ற இடம் குஜராத்தில், ராண் ஆப் கட்ச் பகுதியில் காதிர் தீவில் அமைந்துள்ளது
A) Dholvira / தொலாவிராB) Lothal / லோத்தல்C) Kalibangan / காலிபங்கன்D) Rakhigarhi / ராக்கிகார்கி
Answer / விடை: A) Dholvira
22. [Group 2/2A Prelims 2024 (14/09/2024)] Which one of the following is not correct about Harappan culture?
கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?
(A) All Harappan sites are urban character / ஹரப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது(B) The Harappan cities depended on villages for food and labourers / ஹரப்பா நகரங்கள் உணவுக்காகவும், பணியாளர்களுக்காகவும் கிராமங்களை சார்ந்திருந்தது(C) Harappan remains discovered even at small village sites / ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்கள் சிறிய கிராமங்களிலும் கிடைக்கின்றது(D) The most distinctive feature of Lothal is dockyard / லோத்தலின் சிறப்பம்சம் துறைமுகம் ஆகும்
Answer / விடை: not marked in the bank
23. [Group 2/2A Prelims 2024 (14/09/2024)] Which of the following Harappan sites are not in India?
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹரப்பா நாகரீகத் தளங்கள் தற்பொழுது இந்தியாவில் இல்லை?
(A) Mohenjodara and Harappa / மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா(B) Lothal and Kalibangan / லோத்தல் மற்றும் காலிபங்கன்(C) Bhanwali and Ropar / பனவாலி மற்றும் ரூபார்(D) Surkotada and Dholavira / சுர்கோடாடா மற்றும் தோலாவிரா
Answer / விடை: (A) Mohenjodara and Harappa
24. [Combined Technical Services 2024 - Interview Posts (Aug 2024)] Who has done the Excavation work at Mohenjodaro? /
மொகஞ்சதரோவில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர் யார்?
A) Sir John Marshall / சர் ஜான் மார்ஷல்B) M.S. Watts / எம்.எஸ். வாட்ஸ்C) Sir Mortimer wheeler / சர். மார்டிமர் வீலர்D) B.B. Lal / பி.பி. லால்
Answer / விடை: C) Sir Mortimer wheeler
25. [Combined Technical Services 2024 - Non-Interview Posts (Oct 2024)] In which language described Mohenjadaro means "mount of the dead"? /
மொகஞ்சதாரோ என்றால் "இறந்தவர்களின் மேடு" என்று எந்த மொழியில் அழைக்கப்படுகிறது?
A) Pali / பாலிB) Sindhi / சிந்திC) Sanskrit / சமஸ்கிருதம்D) Prakritham / பிராஹிருதம்
Answer / விடை: B) Sindhi
26. [Group 1 Prelims 2025 (15/06/2025)] In the Indus Valley civilization the major commodities in Internal trade consist of
சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்நாட்டு வாணிபத்தில் கருதப்படுவது
(1) Cotton
பருத்தி
(2) Lumber
மரம்
(3) Grain and food stuffs
உணவு தானியங்கள்
(4) Livestock
கால்நடைகள்
A) (1), (2), (3) only correct / (1), (2), (3) மட்டும் சரிB) (1), (2), (4) only correct / (1), (2), (4) மட்டும் சரிC) (1), (2), (3), (4) correct / (1), (2), (3), (4) சரிD) (1), (4) only correct / (1), (4) மட்டும் சரி
Answer / விடை: C) (1), (2), (3), (4) correct
27. [Group 1 Prelims 2025 (15/06/2025)] Which of the following statements are true about the Houses at Mohenjo-daro?
மொஹஞ்சதாரோவிலுள்ள வீடுகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?(i) It was discovered in Montgomery District of Punjab
இது பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது(ii) Mohenjo-daro the houses were made of Kiln-burnt bricks
மொஹஞ்சதாரோவில் வீடுகள் சுட்ட செங்கற்களால் ஆனவை(iii) Kiln-burnt bricks in large quantities were used for drains
சுட்ட செங்கற்கள் அதிக அளவில் வடிகால்களுக்குப் பயன்படுத்தப்பட்டன
(A) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்(B) (i) only / (i) மட்டும்(C) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்(D) (ii) only / (ii) மட்டும்
Answer / விடை: (C) (ii) and (iii) only
28. [Group 4 2025 (12/07/2025)] Which of the following statements are true about the Indus Civilisation?
சிந்து நாகரிகம் பற்றிய பின்வரும் கூற்றுகள் எவை சரியானவை?1. In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites
1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்2. The longest text has about twenty-six signs
மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது3. The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region
பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது4. The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro
ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது
A) 1 and 2 only / 1 மற்றும் 2 மட்டும்B) 1 and 3 only / 1 மற்றும் 3 மட்டும்C) 2 and 3 only / 2 மற்றும் 3 மட்டும்D) 2 and 4 only / 2 மற்றும் 4 மட்டும்
Answer / விடை: D) 2 and 4 only
29. [Assistant Public Prosecutor Grade-II (14/12/2024 & 22/02/2025)] The weapons of the Indus valley people were mostly made of
சிந்து வெளி மக்களின் ஆயுதங்கள் பெரிதும் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன?
A) Copper and bronze / செம்பு மற்றும் வெண்கலம்B) Gold and silver / தங்கம் மற்றும் வெள்ளிC) Iron and copper / இரும்பு மற்றும் செம்புD) Stone and Bricks / கல் மற்றும் செங்கல்
Answer / விடை: A) Copper and bronze
30. [Assistant Public Prosecutor Grade-II (14/12/2024 & 22/02/2025)] The Great Public Bath was located in which place?
எந்த இடத்தில் பெரிய பொது குளியல் குளம் அமைந்துள்ளது?
A) Mohenjodaro / மொஹஞ்சதாரோB) Harappa / ஹரப்பாC) Lothal / லோத்தல்D) Chanhudaro / சன்ஹுதாரோ
Answer / விடை: A) Mohenjodaro
31. [CTS Diploma/ITI Level] The Indus civilisation and the contemporary cultures covered nearly how many million sq.km area in India and Pakistan?
இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக சிந்து நாகரிகமும் அதன் சமகாலப் பண்பாடுகளும் மொத்தம் எத்தனை மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன?
A) 1.4 million sq.km / 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டர்B) 1.5 million sq.km / 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்C) 1.3 million sq.km / 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்D) 1.2 million sq.km / 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர்
Answer / விடை: B) 1.5 million sq.km
32. [CTS Interview Posts-II (18-19/11/2024)] The site of Indus valley civilization discovered with stone rubble fortification is
கல் கோட்டை இடிபாடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீக நகரம்
A) Surkotada / சுர்கோதடாB) Lothal / லோதல்C) Mohenjo-Daro / மொகஞ்ச-தாரோD) Harappa / ஹரப்பா
Answer / விடை: A) Surkotada
33. [Combined Technical Services 2025] Consider the following statements /
பின்வரும் கூற்றுகளை ஆராய்க
Assertion [A]: Indus Civilization was the ancient seals of Indian origin found in Western Asia
கூற்று [A]: சிந்து நாகரீகம் என்பது மேற்கு ஆசியாவில் காணப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பழைய முத்திரைகள் ஆகும்.
Reason [R]: Indus civilization not represented a perfect Bronze Age
காரணம் [R]: சிந்து நாகரீகம் ஒரு சரியான வெண்கல யுகத்தை குறிக்கவில்லை
A) [A] is false, but [R] is true / [A] தவறு ஆனால் [R] சரிB) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் உண்மை [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்C) [A] is true but [R] is false / [A] சரி ஆனால் [R] தவறுD) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல
Answer / விடை: C) [A] is true but [R] is false
34. [Combined Technical Services 2026 - Non-Interview Posts (Aug-Sep 2026)] Match List I with List II correctly and select your answer using the codes given below :
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I — List II
பட்டியல் I — பட்டியல் II
(a) Harappa — 1. Great bath
(a) ஹரப்பா — 1. பெரிய குளம்
(b) Mohenjadharo — 2. Workmen's quarters
(b) மொகஞ்சதாரோ — 2. தொழிலாளர்களின் குடியிருப்பு
(c) Lothal — 3. Rajasthan
(c) லோத்தல் — 3. இராஜஸ்தான்
(d) Kalibangan — 4. Dockyard
(d) காலிபங்கன் — 4. கப்பல்துறை
Codes :
குறியீடுகள் :
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3(B) 4 2 1 3(C) 2 1 4 3(D) 2 1 3 4
Answer / விடை: (C) 2 1 4 3
35. [CTS Examination (ITI Level)-II 2025 (16/11/2025)] Arrange the following excavated sites in Chronological Order :
கீழ்க்கண்ட நகரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கால வரிசையின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்
1. Mohenjodaro
மொகஞ்சதாரோ
2. Nippoor
நிப்பூர்
3. Harappa
ஹரப்பா
4. Ur
ஊர்
(A) 4, 2, 3, 1(B) 2, 3, 1, 4(C) 1, 2, 4, 3(D) 3, 1, 4, 2
Answer / விடை: (A) 4, 2, 3, 1
36. [Special Competitive Exam 2024 - Typist (08/02/2025)] The bronze image of dancing girl obtained from /
வெண்கலத்தால் ஆன நடனமாடும் பெண்ணின் சிலை கிடைத்த இடம்
A) Harappa / ஹரப்பாB) Dholavira / தோலாவிராC) Kalibangan / கலிபங்கன்D) Mohenjo-Daro / மொகஞ்சதாரோ
Answer / விடை: D) Mohenjo-Daro
37. [Group 2/2A Prelims 2022 (21/05/2022)] Match List-I with List-II and select the correct answer :
List-I (Place) List-II (Excavated by)
(a) Chanhudharo 1. Aurel Stein
(b) Kulli 2. J.P. Joshi
(c) Rakhigarhi 3. Majumdar
(d) Dholavira 4. Amrendranath /
பட்டியல்-I ஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I (இடம்) பட்டியல் -II (தோண்டப்பட்டது
(a) சான்ஹீதாரோ 1. ஆரல் ஸ்டீன்
(b) குல்லி 2. J.P.ஜோஷி
(c) ராகிகாரஹி) 3. மஜீம்தார்
(d) தோலவிரா4. அமரேந்திரநாத்
A) 2134B) 3124C) 3142D) 4312
Answer / விடை: C) 3142
38. [Group 4 2022 (24/07/2022)] Match the following :
Indus Sites Excavated by
(a) Chanhu-Daro 1. Suraj Bhan
(b) Lothal 2. N.G. Majumdar
(c) Banavali3. S.R. Rao
(d) Mitathal4. Bisht /
பொருத்துக:
சிந்து சமவெளி நகரங்கள் அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹூ-தாரோ 1. சூரஜ் பான்
(b) லோத்தல் 2. என்.ஜி. மஜும்தார்
(c) பனாவளி 3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல் 4.பிஷ்ட்
A) 2143B) 2341C) 1324D) 1432
Answer / விடை: B) 2341
39. [Executive Officer Grade-I HR&CE 2022 (23-24/04/2022)] Match List I with List II and select your answer using the codes given below:
List I List II
(a) Mohenjadaro 1.Measurement scale
(b) Harappa 2.Lord Shiva
(c) Trimukha Pose 3.Great bath
(d) Bronze bar 4. D.R. Sahani /
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
(a) மொகஞ்சதாரோ 1. அளவை முறை
(b) ஹரப்பா 2. சிவன்
(c) திரிமுகம் 3.பெருங்குளியல்
(d) வெண்கலக் கோல் 4.டி.ஆர்.சஹானி
A) 3421B) 2314C) 4321D) 1234
Answer / விடை: A) 3421
40. [Executive Officer Grade-I HR&CE 2022 (23-24/04/2022)] Which one of the statement is correct regarding the Indus Valley Civilization?
1. Harappa and Mohenjodaro the houses were made of Kiln burnt bricks
2. On Kalibangan and Lothal mud bricks were used for the residential houses
3. The kiln-burnt bricks used in large quantities in the construction
drains, wells and bathing platform.
4.An average house consist of courtyard and four to six living room /
சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது ?
1. ஹரப்பா மொகஞ்சதாரோவில் வீடுகள் கட்ட செங்கற்கள் கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது
2.காலிபங்கன் மற்றும் லோதலில் சுடாத செங்கற்கள்
பயன்படுத்தப்பட்டு உள்ளது
3. சுட்ட செங்கற்கள், சாக்கடைகள், கிணறுகள், குளியலறைகள், நடைபாதைகள், கட்ட பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு உள்ளன
4. சிந்து சமவெளி நாகரீகத்தில் வீடுகளில் ஒரு முற்றமும் அதை சுற்றி நான்கு மற்றும் ஆறு தங்கும் அறைகள் அமைந்திருந்தன
A) 1 only/1 மட்டும்B) 1, 2 only/1, 2 மட்டும்C) 1, 2, 3 only/1, 2, 3 மட்டும்D) 1, 2, 3, 4/1, 2, 3, 4
Answer / விடை: D) 1, 2, 3, 4/1, 2, 3, 4
41. [Combined Engineering Services 2022 (02/07/2022)] Name the only Indus site with an artificial brick dockyard /
செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்துசமவெளி நகரத்தின் பெயர்
A) Lothal/லோத்தல்B) Kalibangan/கலிபங்கன்C) Chanhudaro/சான்குதாரோD) Surkotoda/சர்கோடோடா
Answer / விடை: A) Lothal/லோத்தல்
42. [Combined Engineering Services 2022 (02/07/2022)] In which sites of the Indus Valley had no citadel? /
கோட்டை இல்லாத ஒரே சிந்துசமவெளி நகரம் எது?
A) Chanhudaro/சான்குதாரோB) Lothal/லோத்தல்C) Kalibangan/கலிபங்கன்D) Rangpur/ரங்பூர்
Answer / விடை: A) Chanhudaro/சான்குதாரோ
43. [Asst Director of Co-operative Audit (30/04/2022)] Harappa is situated in the Montgomery District of
'
ஹரப்பா' அமைந்துள்ள மாண்ட்கோமரி மாவட்டம் எங்கு உள்ளது?
A) Persia/பாரசீகம்B) Pakistan/பாகிஸ்தான்C) India/இந்தியாD) Iran/ஈரான்
Answer / விடை: B) Pakistan/பாகிஸ்தான்
44. [District Child Protection Officer (19/06/2022)] Which one of the following was not cultivated by the Harappan people? /
ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?
A) Barley /பார்விB) Wheat /கோதுமைC) Cotton /பஞ்சுD) Sugarcane /கரும்பு
Answer / விடை: D) Sugarcane /கரும்பு
45. [Asst Director of Town & Country Planning (2022)] Indicate whether the following statements are correct regarding the religious faiths and beliefs of the people of Indus Valley Civilization
(i) The cult of the Divine Mother seems to have been widely prevalent (ii) Many figurines of the Mother - Goddess have come to light /
சிந்து சமவெளி மக்களின் சமய நம்பிக்கையில் கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை?
(i) தாய் வழிபாடு கலாச்சாரம் சமுதாயத்தில் உள்ளது.
(ii) உருவ வழிபாட்டில் தாய் கடவுள் வழிபாடு என்று வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.
A) (i) and (ii)/(i) மற்றும் (ii)B) ( i )/(i)C) (ii)/(ii)D) Neither (i) nor (ii)/(i)ம் அல்ல (ii)ம் அல்ல
Answer / விடை: A) (i) and (ii)/(i) மற்றும் (ii)
46. [Asst Director of Town & Country Planning (2022)] Which of the following statements about Harappa are false?
(i) The walls of Harappa were not strengthened
(ii) Tectonic disturbance caused the ruin
(iii) Short-headed Armenoid skulls were found
(iv) Harappa disappeared by about 1750 B.C. /
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹரப்பா பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
(i) ஹரப்பாவின் சுவர்கள் வலிமையற்றவை.
(ii) டெக்டானிக் குளறுபடிகளால் நகரம் அழிவுற்றது.
(iii) சிறிய தலையையுடைய அர்மீனிய மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
(iv) ஹரப்பா கி.மு. 1750-க்குப் பிறகு அழிவுற்றது
A) (i) and (ii) true (iii) and (iv) false/(i) மற்றும் (ii) சரி (iii) மற்றும் (iv) தவறுB) (i) is true (ii), (iii) and (iv) are false/(i) சரி (ii), (iii) மற்றும் (iv) தவறுC) (i) is false (ii), (iii) and (iv) are true/(i) தவறு (ii), (iii) மற்றும் (iv) சரிD) (i), (ii) and (iii) are false (iv) is true/(i), (ii) மற்றும் (iii) தவறு (iv) சரி
Answer / விடை: C) (i) is false (ii), (iii) and (iv) are true/(i) தவறு (ii), (iii) மற்றும் (iv) சரி
47. [Asst Professor of Psychology-cum-Clinical Psychologist (14/03/2023)] Which factor caused the end of Indus Valley Civilization?
சிந்துவெளி நாகரிகத்தின் முடிவிற்கு எது காரணமாக அமைந்தது?
A) Climatic change /வானியல் மாற்றம்B) Earthquake /நில நடுக்கம்C) Flood /வெள்ளம்D) Invasion /படையெடுப்பு
Answer / விடை: B) Earthquake /நில நடுக்கம்
48. [Architectural Assistant / Planning Assistant - Town & Country Planning (08/01/2022)] ____ was an important source of subsistence of the Harappans. /
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக ____ இருந்தது.
A) Fishery/மீன் பிடித்தல்B) Agriculture/வேளாண்மைC) Pottery/மட்பாண்டம் செய்தல்D) Craft production/கைவினைத்தொழில்கள்
Answer / விடை: B) Agriculture/வேளாண்மை
49. [Group 1 Prelims 2025 (15/06/2025)] Match correctly:
பின்வருவனவற்றைப் பொருத்துக
(a) Kolliporai coins
கொல்லிப்பொறை நாணயங்கள்
1. Pandya Kings
பாண்டியர்கள்
(b) Peruvaluthi coins
பெருவழுதி நாணயங்கள்
2. Chera Kings
சேரர்கள்
(c) Bead Making Industry
மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
3. Kangayam
காங்கேயம்
(d) Textile Industry
துணி உற்பத்தித் தொழிற்சாலை
4. Mohenjodaro
மொகஞ்சதாரோ | (a) Kolliporai coins
கொல்லிப்பொறை நாணயங்கள் | 1. Pandya Kings
பாண்டியர்கள் | (b) Peruvaluthi coins
பெருவழுதி நாணயங்கள் | 2. Chera Kings
சேரர்கள் | (c) Bead Making Industry
மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை | 3. Kangayam
காங்கேயம் | (d) Textile Industry
துணி உற்பத்தித் தொழிற்சாலை | 4. Mohenjodaro
மொகஞ்சதாரோ
A) 2 1 3 4B) 3 2 1 4C) 2 1 4 3D) 4 2 1 3
Answer / விடை: A) 2 1 3 4

Practice MCQs பயிற்சி வினாக்கள்

1. Where was a naval dockyard of the Indus people found?
சிந்து மக்களின் கப்பல் துறை (dockyard) எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
(A) Harappaஹரப்பா(B) Lothalலோத்தல்(C) Kalibanganகாலிபங்கன்(D) Rakhigarhiராக்கிகர்ஹி
2. Ploughed fields have been found at
உழுத வயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
(A) Kalibanganகாலிபங்கன்(B) Mohenjo-daroமொகஞ்சதாரோ(C) Lothalலோத்தல்(D) Dholaviraதோலாவிரா
3. The Great Bath is at
பெருங்குளம் உள்ள இடம்
(A) Harappaஹரப்பா(B) Rakhigarhiராக்கிகர்ஹி(C) Mohenjo-daroமொகஞ்சதாரோ(D) Lothalலோத்தல்
4. Rakhigarhi is in
ராக்கிகர்ஹி உள்ள மாநிலம்
(A) Gujaratகுஜராத்(B) Rajasthanராஜஸ்தான்(C) Punjabபஞ்சாப்(D) Haryanaஹரியானா
5. The Indus civilisation belongs to the
சிந்து நாகரிகம் சேர்ந்த காலம்
(A) Stone Ageகற்காலம்(B) Iron Ageஇரும்புக் காலம்(C) Bronze Ageவெண்கலக் காலம்(D) Vedic Ageவேதகாலம்
6. Lothal is on a tributary of the
லோத்தல் எந்த ஆற்றின் கிளையாற்றின் கரையில் உள்ளது?
(A) Sabarmatiசபர்மதி(B) Narmadaநர்மதை(C) Raviராவி(D) Ghaggarகாகர்
7. Who concluded in 1924 that Harappa and Mohenjo-daro were part of one large civilisation?
1924-இல் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஒரே பெரிய நாகரிகத்தின் பகுதிகள் என்று முடிவு செய்தவர்
(A) Alexander Cunninghamஅலெக்சாண்டர் கன்னிங்காம்(B) John Marshallஜான் மார்ஷல்(C) Charles Massonசார்லஸ் மேசன்(D) Mortimer Wheelerமார்டிமர் வீலர்
8. Which animal was not known to the Harappans?
ஹரப்பா மக்களுக்குத் தெரியாத விலங்கு
(A) Horseகுதிரை(B) Sheepசெம்மறி ஆடு(C) Zebu cattleஜெபு காளை(D) Goatவெள்ளாடு
Answer key / விடைகள்: 1 B, 2 A, 3 C, 4 D, 5 C, 6 A, 7 B, 8 A

Sources: 6th Std Social Science Term I, History Unit 3 Indus Civilisation; 11th Std History Vol I, Lesson 1. PYQs: TNPSC papers 2022 to 2026 (answers as marked in the ArivArk PYQ bank). Map: Natural Earth.

ஆதாரம்: 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1, வரலாறு அலகு 3; 11-ஆம் வகுப்பு வரலாறு தொகுதி 1, பாடம் 1. வினாக்கள்: TNPSC 2022-2026.

PDF
Save these notes as a PDF31 pages, English and Tamil, free
Download PDF ↓

What is inside

Get the next notes first

A new topic and notes PDF every day.

Sources: 6th Std Social Science Term I, History Unit 3 Indus Civilisation; 11th Std History Vol I, Lesson 1