What is the pH scale? pH அளவீடு என்றால் என்ன?
A scale for measuring the hydrogen ion concentration in a solution is called the pH scale.
கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே pH அளவீடு எனப்படும்.
The "p" in pH stands for potenz in German, meaning power.
pH-இல் உள்ள p என்பது ஜெர்மன் மொழியில் உள்ள "பொட்டன்ஸ்" என்ற வார்த்தையைக் குறிக்கிறது; இதன் பொருள் "அதிக ஆற்றல்".
The pH scale is a set of numbers from 0 to 14, which shows whether a solution is acidic, basic or neutral.
pH அளவீட்டில் 0 முதல் 14 வரை அளவிடப்படும்; இது ஒரு கரைசல் அமிலமா, காரமா, நடுநிலையா என்பதைக் காட்டுகிறது.
It was introduced by S.P.L. Sorensen. Formula: pH = -log10[H+].
இதை அறிமுகப்படுத்தியவர் எஸ்.பி.எல். சோரன்சன். சூத்திரம்: pH = -log10[H+].
Acid, neutral, base அமிலம், நடுநிலை, காரம்
| pH valuepH மதிப்பு | Natureதன்மை | Exampleஎடுத்துக்காட்டு |
|---|---|---|
| Less than 77-க்குக் குறைவு | Acidicஅமிலத்தன்மை | Lemon juice 2.5, vinegar 3.0, coffee 5.0எலுமிச்சை சாறு 2.5, வினிகர் 3.0, காபி 5.0 |
| Equal to 77-க்குச் சமம் | Neutralநடுநிலை | Pure water 7.0தூய நீர் 7.0 |
| More than 77-க்கு அதிகம் | Basicகாரத்தன்மை | Sea water 8.5, toothpaste 9.0, milk of magnesia 10.5கடல் நீர் 8.5, பற்பசை 9.0, மெக்னீசியா பால் 10.5 |
The lower the pH, the stronger the acid; the higher the pH, the stronger the base.
pH குறைந்தால் அமிலத்தன்மை அதிகம்; pH அதிகரித்தால் காரத்தன்மை அதிகம்.
pH of some common liquids சில பொதுவான திரவங்களின் pH மதிப்பு
Red: acidic, green: neutral, violet: basic.
சிவப்பு: அமிலம், பச்சை: நடுநிலை, ஊதா: காரம்.
Acid-base indicators அமில கார நிறங்காட்டிகள்
| Indicatorநிறங்காட்டி | Colour in acidஅமிலத்தில் நிறம் | Colour in baseகாரத்தில் நிறம் |
|---|---|---|
| Litmusலிட்மஸ் | Blue to redநீலம் - சிவப்பு | Red to blueசிவப்பு - நீலம் |
| Phenolphthaleinபினாப்தலீன் | Colourlessநிறமற்றது | Pinkஇளஞ்சிவப்பு |
| Methyl orangeமெத்தில் ஆரஞ்சு | Pinkஇளஞ்சிவப்பு | Yellowமஞ்சள் |
pH in everyday life அன்றாட வாழ்வில் pH
Human body மனித உடல்
- Stomach fluid: pH about 2.0; it is essential for the digestion of food.இரைப்பை திரவம்: pH சுமார் 2.0; உணவு செரிமானத்திற்கு அவசியம்.
- Blood: pH range 7.35 to 7.45; the ideal pH is 7.4 (slightly basic). Any change leads to diseases.இரத்தம்: pH 7.35 முதல் 7.45 வரை; சிறந்த மதிப்பு 7.4 (லேசான காரம்). இதில் மாற்றம் ஏற்பட்டால் நோய்கள் வரும்.
- Skin: a healthy skin has pH 4.5 to 6. Saliva: pH 6.5 to 7.5.தோல்: ஆரோக்கியமான தோலின் pH 4.5 முதல் 6. உமிழ்நீர்: pH 6.5 முதல் 7.5.
Teeth பற்கள்
- Tooth enamel is calcium phosphate, the hardest substance in our body; it does not dissolve in water.பல் எனாமல் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனது; உடலின் மிகக் கடினமான பொருள்; நீரில் கரையாது.
- If the pH of the mouth falls below 5.5, the enamel gets corroded.வாயின் pH 5.5-க்குக் கீழ் குறைந்தால் எனாமல் அரிக்கப்படும்.
- Toothpastes are generally basic; they neutralise the excess acid and prevent tooth decay.பற்பசைகள் பொதுவாகக் காரத்தன்மை உடையவை; அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பல் சொத்தையைத் தடுக்கின்றன.
Soil and rain மண் மற்றும் மழை
- Rice needs acidic soil, sugarcane needs neutral soil, citrus fruits need slightly alkaline soil.நெல்லுக்கு அமில மண், கரும்புக்கு நடுநிலை மண், சிட்ரஸ் பழங்களுக்கு லேசான கார மண் தேவை.
- Rain water has pH about 7. If it is polluted by SO2 and NO2, acid rain occurs.மழைநீரின் pH சுமார் 7. அது SO2, NO2 ஆகியவற்றால் மாசுபட்டால் அமில மழை பெய்யும்.
Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள
| Pointகுறிப்பு | Key wordமுக்கியச் சொல் |
|---|---|
| Scaleஅளவு | 0 to 14; below 7 acid, 7 neutral, above 7 base0 முதல் 14; 7-க்குக் கீழ் அமிலம், 7 நடுநிலை, 7-க்கு மேல் காரம் |
| Nameபெயர் | p = potenz (power); Sorensenp = பொட்டன்ஸ் (ஆற்றல்); சோரன்சன் |
| Bodyஉடல் | Stomach 2, blood 7.4, enamel below 5.5இரைப்பை 2, இரத்தம் 7.4, எனாமல் 5.5-க்குக் கீழ் |
| Soilமண் | Rice acidic, sugarcane neutral, citrus alkalineநெல் அமிலம், கரும்பு நடுநிலை, சிட்ரஸ் காரம் |
Practice MCQs பயிற்சி வினாக்கள்
Sources: 9th Science, Unit 14 Acids, Bases and Salts, p.167 to 168; Government of Tamil Nadu, Department of Employment and Training, Group II study material, Chemistry: Acids, Base and Salts, p.7 to 8.
ஆதாரம்: 9-ஆம் வகுப்பு அறிவியல், அலகு 14 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள், பக்கம் 168 முதல் 169; தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, குரூப் II பாடக் குறிப்பு, வேதியியல்: அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள், பக்கம் 7 முதல் 8.

