What is a writ? நீதிப்பேராணை என்றால் என்ன?
A writ is an order or command issued by a court in writing under its seal.
நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் எழுத்து வடிவில் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
Constitutional basis அரசியலமைப்பு அடிப்படை
| Courtநீதிமன்றம் | Articleசட்டப்பிரிவு | Noteகுறிப்பு |
|---|---|---|
| Supreme Courtஉச்ச நீதிமன்றம் | Article 32சட்டப்பிரிவு 32 | Right to constitutional remedies, itself a Fundamental Right. Lets a person seek redress when Fundamental Rights are violated.அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை; இதுவே ஒரு அடிப்படை உரிமை. அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது தீர்வு பெற உதவுகிறது. |
| High Courtஉயர் நீதிமன்றம் | Article 226சட்டப்பிரிவு 226 | Can issue the same five writs, and also other directions and orders in the interests of justice.அதே ஐந்து நீதிப்பேராணைகளையும், நீதியின் நலன் கருதி பிற வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளையும் வெளியிடலாம். |
Dr. B.R. Ambedkar: Article 32 is "the heart and soul of the Constitution".
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கூற்றுப்படி சட்டப்பிரிவு 32, இந்திய அரசியலமைப்பின் "இதயம் மற்றும் ஆன்மா" ஆகும்.
Because it issues writs to protect people's rights, the Supreme Court is called the "Guardian of the Constitution".
இத்தகைய ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளைக் காப்பதால், உச்ச நீதிமன்றம் "அரசியலமைப்பின் பாதுகாவலன்" என அழைக்கப்படுகிறது.
Also note: The Magna Carta (England, 1215) is the first written document relating to the Fundamental Rights of citizens.
மகாசாசனம் (இங்கிலாந்து, 1215) குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணமாகும்.
Five kinds of writs ஐந்து வகை நீதிப்பேராணைகள்
Habeas Corpus ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- Meaning: "Produce the person in body"பொருள்: "ஆளை நீதிமன்றத்தில் கொண்டு வா"
- Issued when a person is illegally detained.ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாகக் காவலில் வைக்கப்பட்டால் வெளியிடப்படுகிறது.
- Safeguards the personal liberty of every individual.ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.
Mandamus கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
- Meaning: "We command"பொருள்: "நாங்கள் கட்டளையிடுகிறோம்"
- Directs a public authority, officer or Government to perform its legal duty.ஒரு அதிகாரி, அலுவலர் அல்லது அரசு தனது சட்டப்படியான கடமையைச் செய்ய உத்தரவிடுகிறது.
- Used when a public duty is refused or not done.பொதுக் கடமையைச் செய்ய மறுக்கும்போது அல்லது செய்யாதபோது பயன்படுகிறது.
Prohibition தடையுறுத்தும் நீதிப்பேராணை
- Meaning: "To forbid"பொருள்: "தடை செய்"
- A higher court stops a lower court or tribunal from exceeding its jurisdiction.கீழ் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் தனது சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதை மேல் நீதிமன்றம் தடுக்கிறது.
- Only against judicial or quasi-judicial bodies.நீதித்துறை அல்லது பகுதி நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டுமே.
Certiorari ஆவணக் கேட்பு நீதிப்பேராணை
- Meaning: "To be informed"பொருள்: "தெரிவிக்கப்பட வேண்டும்"
- Quashes an order already passed by a lower court or tribunal beyond its jurisdiction.கீழ் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் தனது எல்லையை மீறிப் பிறப்பித்த ஆணையை ரத்து செய்கிறது.
- Only against judicial or quasi-judicial bodies.நீதித்துறை அல்லது பகுதி நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டுமே.
Quo Warranto தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
- Meaning: "By what authority or warrant?"பொருள்: "எந்த அதிகாரத்தின் அடிப்படையில்?"
- Asks a person holding a public office to show the authority for it.அரசுப் பதவியில் இருப்பவர், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அப்பதவியில் இருக்கிறார் என வினவுகிறது.
- Prevents illegal occupation of a public office.அரசுப் பதவியை சட்டத்திற்குப் புறம்பாகக் கைப்பற்றுவதைத் தடுக்கிறது.
Prohibition vs Certiorari தடையுறுத்தும் மற்றும் ஆவணக் கேட்பு: வேறுபாடு
| Prohibitionதடையுறுத்தும் | Certiorariஆவணக் கேட்பு | |
|---|---|---|
| Whenஎப்போது | While the case is going on, BEFORE the orderவழக்கு நடக்கும்போதே, ஆணைக்கு முன் | AFTER the order is passedஆணை பிறப்பிக்கப்பட்ட பின் |
| Effectவிளைவு | Stops the lower courtகீழ் நீதிமன்றத்தைத் தடுக்கிறது | Cancels (quashes) the orderஆணையை ரத்து செய்கிறது |
| Againstயாருக்கு எதிராக | Judicial and quasi-judicial bodies onlyநீதித்துறை மற்றும் பகுதி நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டும் | |
Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள
| Writநீதிப்பேராணை | Key wordமுக்கியச் சொல் |
|---|---|
| Habeas Corpusஆட்கொணர்வு | Body: illegal detentionஉடல்: சட்டவிரோதக் காவல் |
| Mandamusகட்டளையுறுத்தும் | Duty: do your legal dutyகடமை: சட்டப்படியான கடமையைச் செய் |
| Prohibitionதடையுறுத்தும் | Stop: before the orderதடை: ஆணைக்கு முன் |
| Certiorariஆவணக் கேட்பு | Cancel: after the orderரத்து: ஆணைக்குப் பின் |
| Quo Warrantoதகுதிமுறை வினவும் | Office: by what authority?பதவி: எந்த அதிகாரத்தில்? |
Practice MCQs பயிற்சி வினாக்கள்
Sources: 10th Social Science, Unit 1 Indian Constitution, p.172 to 173; 12th Political Science Vol I, Unit 4 Indian Judiciary, p.90 to 91.
ஆதாரம்: 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல், அலகு 1 இந்திய அரசியலமைப்பு, பக்கம் 172 முதல் 173; 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் தொகுதி I, அலகு 4 இந்திய நீதித்துறை, பக்கம் 90 முதல் 91.

