What are vitamins? வைட்டமின்கள் என்றால் என்ன?
Vitamins are vital nutrients needed in minute quantities to perform specific physiological and biochemical functions.
குறிப்பிட்ட உடலியல், உயிர்வேதியியல் செயல்களைச் செய்ய மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் இன்றியமையாத ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள்.
Dr. Funk introduced the term vitamin. Vitamin A got the first letter of the alphabet because it was the first vitamin discovered.
வைட்டமின் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் டாக்டர் ஃபங்க். முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் வைட்டமின் A-க்கு ஆங்கில அகரவரிசையின் முதல் எழுத்து வழங்கப்பட்டது.
Vitamin D: the sunshine vitamin வைட்டமின் D: சூரிய ஒளி வைட்டமின்
Human skin can make Vitamin D when exposed to sunlight, especially in the early morning: the sun rays turn dehydrocholesterol in the skin into Vitamin D. So Vitamin D is called the sunshine vitamin.
சூரிய ஒளி (குறிப்பாக அதிகாலை வெயில்) தோலில் படும்போது, தோலில் உள்ள டிஹைட்ரோ கொலஸ்ட்ரால் வைட்டமின் D ஆக மாறுகிறது. எனவே வைட்டமின் D சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படுகிறது.
Vitamin D improves bone strength by helping the body to absorb calcium.
கால்சியத்தை உடல் உறிஞ்ச உதவுவதன் மூலம் வைட்டமின் D எலும்புகளை வலுவாக்குகிறது.
Two groups இரண்டு வகைகள்
| Groupவகை | Vitaminsவைட்டமின்கள் | Memory trickநினைவில் கொள்ள |
|---|---|---|
| Fat solubleகொழுப்பில் கரையும் | A, D, E, K | Say "ADEK" (அடேக்)"அடேக்" என்று சொல்லிப் பாருங்கள் |
| Water solubleநீரில் கரையும் | B group and CB தொகுதி மற்றும் C | B and C go with waterB, C நீரில் கரையும் |
Fat soluble vitamins கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
| Vitaminவைட்டமின் | Sourcesகிடைக்கும் உணவுகள் | Deficiency diseaseகுறைபாட்டு நோய் | Symptomsஅறிகுறிகள் |
|---|---|---|---|
| Vitamin A (Retinol)வைட்டமின் A (ரெட்டினால்) | Carrot, papaya, leafy vegetables, fish liver oil, egg yolk, liver, dairy productsகேரட், பப்பாளி, இலை வகைக் காய்கறிகள், மீன் கல்லீரல் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால் பொருட்கள் | Xerophthalmia; Nyctalopia (night blindness)சீரோப்தால்மியா; நிக்டலோபியா (மாலைக்கண் நோய்) | Dry cornea, unable to see in dim light, scaly skinஉலர்ந்த கார்னியா, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை, செதில் போன்ற தோல் |
| Vitamin D (Calciferol)வைட்டமின் D (கால்சிஃபெரால்) | Egg, liver, dairy products, fish; made by the skin in sunlightமுட்டை, கல்லீரல், பால் பொருட்கள், மீன்; சூரிய வெளிச்சத்தில் தோலில் உருவாகிறது | Rickets (in children)ரிக்கெட்ஸ் (குழந்தைகளில்) | Bow legs, defective ribs, pigeon chestகவட்டைக் கால்கள், குறைபாடுள்ள மார்பெலும்புகள், புறா போன்ற மார்பு |
| Vitamin E (Tocopherol)வைட்டமின் E (டோகோஃபெரால்) | Whole wheat, meat, vegetable oil, milkமுழு கோதுமை, இறைச்சி, தாவர எண்ணெய், பால் | Sterility in rats, reproductive abnormalitiesஎலிகளில் மலட்டுத்தன்மை, இனப்பெருக்கக் கோளாறுகள் | Sterilityமலட்டுத்தன்மை |
| Vitamin K (from quinone)வைட்டமின் K (குயினோனிலிருந்து) | Leafy vegetables, soyabeans, milkஇலை வகைக் காய்கறிகள், சோயாபீன்ஸ், பால் | Blood clotting is preventedஇரத்தம் உறைதல் நடைபெறாது | Excessive bleeding due to delayed clottingஇரத்தம் தாமதமாக உறைவதால் அதிக இரத்தப்போக்கு |
Water soluble vitamins நீரில் கரையும் வைட்டமின்கள்
| Vitaminவைட்டமின் | Sourcesகிடைக்கும் உணவுகள் | Deficiency diseaseகுறைபாட்டு நோய் | Symptomsஅறிகுறிகள் |
|---|---|---|---|
| Vitamin B1 (Thiamine)வைட்டமின் B1 (தயமின்) | Whole grains, yeast, eggs, liver, sprouted pulsesமுழு தானியங்கள், ஈஸ்ட், முட்டை, கல்லீரல், முளைகட்டிய பருப்பு வகைகள் | Beriberiபெரிபெரி | Nerve damage, weak muscles, paralysisநரம்புச் சிதைவு, தசைகள் வலிமை இழத்தல், பக்கவாதம் |
| Vitamin B2 (Riboflavin)வைட்டமின் B2 (ரிபோஃபிளேவின்) | Milk, eggs, liver, green vegetables, whole grainsபால், முட்டை, கல்லீரல், பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள் | Ariboflavinosis (Cheilosis)அரிபோஃபிளேவினோசிஸ் (கீலியாசிஸ்) | Eye irritation, dry skin, cracks at the corners of the mouthகண் எரிச்சல், உலர்ந்த தோல், வாயின் ஓரங்களில் வெடிப்பு |
| Vitamin B3 (Niacin)வைட்டமின் B3 (நியாசின்) | Milk, eggs, liver, lean meat, groundnuts, branபால், முட்டை, கல்லீரல், கொழுப்பற்ற இறைச்சி, நிலக்கடலை, தவிடு | Pellagraபெல்லாக்ரா | Skin inflammation, loss of memory, diarrhoeaதோல் அழற்சி, நினைவாற்றல் இழப்பு, வயிற்றுப்போக்கு |
| Vitamin B6 (Pyridoxine)வைட்டமின் B6 (பைரிடாக்சின்) | Meat, fish, eggs, germs of grains, rice polishingsஇறைச்சி, மீன், முட்டை, தானியங்களின் முளை, அரிசி தவிடு | Dermatitisடெர்மடைட்டிஸ் (தோல் அழற்சி) | Scaly skin, nervous disordersசெதில் போன்ற தோல், நரம்புக் கோளாறுகள் |
| Vitamin B12 (Cyanocobalamin)வைட்டமின் B12 (சயனோகோபாலமின்) | Milk, meat, liver, pulses, cereals, fishபால், இறைச்சி, கல்லீரல், பருப்பு வகைகள், தானியங்கள், மீன் | Pernicious anaemiaபெர்னீசியஸ் இரத்தசோகை | Fewer red blood cells, damage to the spinal cordஇரத்த சிவப்பணு உற்பத்தி குறைதல், தண்டுவடச் சிதைவு |
| Vitamin C (Ascorbic acid)வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) | Leafy vegetables, sprouts, gooseberry (amla), lemon, orangeஇலை வகைக் காய்கறிகள், முளைகட்டிய பயறு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு | Scurvyஸ்கர்வி | Swollen, bleeding gums; slow healing of wounds; malformed teeth and bonesவீங்கிய, இரத்தம் கசியும் ஈறுகள்; காயங்கள் தாமதமாக ஆறுதல்; பற்கள், எலும்புகள் சரியாக வளராமை |
Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள
| Vitaminவைட்டமின் | Diseaseநோய் |
|---|---|
| A | Night blindnessமாலைக்கண் நோய் |
| D | Ricketsரிக்கெட்ஸ் |
| K | Blood does not clotஇரத்தம் உறையாது |
| B1 | Beriberiபெரிபெரி |
| B3 | Pellagraபெல்லாக்ரா |
| B12 | Pernicious anaemiaபெர்னீசியஸ் இரத்தசோகை |
| C | Scurvyஸ்கர்வி |
Practice MCQs பயிற்சி வினாக்கள்
Source: 9th Science, Unit 21 Nutrition and Health, p.248 and 249 (Table 21.2).
ஆதாரம்: 9-ஆம் வகுப்பு அறிவியல், அலகு 21 ஊட்டச்சத்தும் உடல்நலமும், பக்கம் 248, 249 (அட்டவணை 21.2).

