The Sangam Age at a glance சங்க காலம்: ஒரே பார்வையில்
| Featureஅம்சம் | Detailவிவரம் |
|---|---|
| Time spanகால அளவு | 3rd century BCE to 3rd century CEகி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை |
| Tamizhagamதமிழகத்தின் பரப்பு | Vengadam (Tirupati hill) in the north to Kanyakumari in the south; sea on the east and westவடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை; கிழக்கிலும் மேற்கிலும் கடல் |
| Age and cultureகாலம், பண்பாடு | Iron Age; Megalithic cultureஇரும்புக் காலம்; பெருங்கற்காலப் பண்பாடு |
| Polityஅரசுமுறை | Kingshipமுடியாட்சி |
| Dynastiesஅரச வம்சங்கள் | Cheras, Cholas, Pandyasசேரர், சோழர், பாண்டியர் |
Muvendar (Three Great Kings): the Tamil word Vendar referred to the three dynasties, the Cheras, Cholas and Pandyas, who controlled Tamizhagam in the Sangam Age.
மூவேந்தர்: வேந்தர் எனும் சொல் சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூன்று அரச வம்சங்களைக் குறிக்கிறது.
Muvendar: emblem, capital, port, garland மூவேந்தர்: சின்னம், தலைநகர், துறைமுகம், மாலை
| Muvendarமூவேந்தர் | Emblemசின்னம் | Capitalதலைநகர் | Portதுறைமுகம் | Garlandமாலை |
|---|---|---|---|---|
| Cherasசேரர் | Bow and arrowவில், அம்பு | Vanchi / Karurவஞ்சி / கரூர் | Muziri / Tondiமுசிறி / தொண்டி | Palmyra flowerபனம்பூ மாலை |
| Cholasசோழர் | Tigerபுலி | Uraiyur / Puharஉறையூர் / புகார் | Puharபுகார் | Fig (Athi) flowerஅத்திப்பூ மாலை |
| Pandyasபாண்டியர் | Two fishஇரண்டு மீன்கள் | Maduraiமதுரை | Korkaiகொற்கை | Margosa (neem) flowerவேப்பம்பூ மாலை |
Titles of the Muvendar மூவேந்தர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்
| Kingஅரசர் | Titlesபட்டங்கள் |
|---|---|
| Cheranசேரன் | Adhavan, Kuttuvan, Vanavan, Irumporaiஆதவன், குட்டுவன், வானவன், இரும்பொறை |
| Cholanசோழன் | Senni, Sembiyan, Killi, Valavanசென்னி, செம்பியன், கிள்ளி, வளவன் |
| Pandiyanபாண்டியன் | Maran, Valuthi, Sezhiyan, Tennarமாறன், வழுதி, செழியன், தென்னர் |
Royal insignia: sceptre (kol), drum (murasu) and white umbrella (venkudai) were the symbols of royal authority.
அரச அதிகாரச் சின்னங்கள்: செங்கோல், முரசு, வெண்கொற்றக்குடை.
The three dynasties மூன்று அரச வம்சங்கள்
The Cheras சேரர் Emblem: Bow and arrow
- Ruled central and north Travancore, Cochin, south Malabar and the Kongu region of Tamil Nadu.மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர்.
- Pathitrupathu gives information about the Chera kings.பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகிறது.
- Cheran Senguttuvan went on an expedition to North India and brought stones from the Himalayas for the idol of Kannagi. He introduced the Pattini cult.சேரன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்து, கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தார். பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார்.
- His younger brother Ilango Adigal was the author of Silappathikaram.அவரது தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்.
- Cheral Irumporai issued coins in his name; some Chera coins bear the bow and arrow emblem.சேரல் இரும்பொறை தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்; சில சேர நாணயங்களில் வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.
- Rulers: Udayan Cheralathan, Imayavaramban Nedun Cheralathan, Cheran Senguttuvan, Cheral Irumporai.அரசர்கள்: உதயன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை.
The Cholas சோழர் Emblem: Tiger
- The kingdom extended up to the Venkatam (Tirupati) hills; the Kaveri delta was its centre, later called Cholamandalam.சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது; காவிரி கழிமுகப் பகுதி அதன் மையம், பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது.
- Karikal Valavan (Karikalan) defeated the Cheras, Pandyas and eleven Velir chieftains at Venni (Thanjavur region).கரிகால் வளவன் (கரிகாலன்) சேரர், பாண்டியர், பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தஞ்சாவூர் பகுதியிலுள்ள வெண்ணியில் தோற்கடித்தார்.
- He converted forests into cultivable land and built Kallanai (a dam of stone) across the Kaveri.காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்; காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டினார்.
- Port Puhar drew merchants from across the Indian Ocean; Pattinappalai describes trade under Karikalan.புகார் துறைமுகம் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை ஈர்த்தது; கரிகாலன் ஆட்சியின் வணிகத்தை பட்டினப்பாலை விவரிக்கிறது.
- Rulers: Ilanchetsenni, Karikal Valavan, Kocengannan, Killi Valavan, Perunarkilli.அரசர்கள்: இளஞ்சேட்சென்னி, கரிகால் வளவன், கோச்செங்கணான், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி.
The Pandyas பாண்டியர் Emblem: Two fish
- Ruled present-day southern Tamil Nadu and patronised Tamil poets and scholars.இன்றைய தென் தமிழகத்தை ஆண்டனர்; தமிழ்ப் புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர்.
- Nedunchezhiyan defeated the Cheras, Cholas and five Velir chieftains at Talayalanganam; praised as the lord of Korkai.நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தலையாலங்கானத்தில் தோற்கடித்தார்; கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகிறார்.
- Pandya country was well known for pearl hunting.பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ்பெற்றது.
- Pandya coins: elephant on one side, fish on the other. Mudukudumi Peruvazhuthi issued coins for his Vedic rituals.பாண்டிய நாணயங்கள்: ஒருபுறம் யானை, மறுபுறம் மீன். முதுகுடுமிப் பெருவழுதி வேத வேள்விகளைக் கொண்டாட நாணயங்களை வெளியிட்டார்.
- Rulers: Nediyon, Nanmaran, Mudukudumi Peruvazhuthi, Nedunchezhiyan.அரசர்கள்: நெடியோன், நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, நெடுஞ்செழியன்.
Kallanai: a dyke built with stones across the Kaveri to divert water through the delta for irrigation. When it was built, it irrigated about 69,000 acres.
கல்லணை: பாசனத்திற்காக கழிமுகப் பகுதி வழியாக நீரைத் திருப்ப காவிரியின் குறுக்கே கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை. கட்டப்பட்டபோது 69,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கியது.
Minor chieftains குறுநில மன்னர்கள்
Ay: from the old Tamil word Ayar (shepherd). Important Ay chiefs: Anthiran, Titiran, Nannan.
ஆய்: ஆயர் (ஆநிரை மேய்ப்போர்) என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது. முக்கிய ஆய் மன்னர்கள்: அந்திரன், திதியன், நன்னன்.
Velir: the ruling and land-owning class. The famous Velirs were the seven patrons, Kadaiyezhu Vallalgal: Pari, Kari, Ori, Pegan, Ay, Adiyaman and Nalli.
வேளிர்: ஆட்சி செய்த நிலவுடைமைப் பிரிவினர். புகழ்பெற்ற வேளிர்கள் கடையெழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி.
Kizhar was the village chief.
கிழார் என்பவர் கிராமத் தலைவர்.
Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள
| Dynastyவம்சம் | Key wordமுக்கியச் சொல் |
|---|---|
| Cherasசேரர் | Bow, Vanchi, Muziri, Senguttuvan, Kannagi stoneவில், வஞ்சி, முசிறி, செங்குட்டுவன், கண்ணகி கல் |
| Cholasசோழர் | Tiger, Uraiyur, Puhar, Karikalan, Kallanaiபுலி, உறையூர், புகார், கரிகாலன், கல்லணை |
| Pandyasபாண்டியர் | Two fish, Madurai, Korkai, pearlsஇரண்டு மீன்கள், மதுரை, கொற்கை, முத்து |
Practice MCQs பயிற்சி வினாக்கள்
Source: 6th Social Science, Term III, History Unit 1 Society and Culture in Ancient Tamizhagam: The Sangam Age, p.88 to 91.
ஆதாரம்: 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல், மூன்றாம் பருவம், வரலாறு அலகு 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம், பக்கம் 96 முதல் 99.

