← All free notes
Keyword: PERIYAR

Self-Respect Movement: Periyar E.V. Ramasamy, Aims, Journals, Dravidar Kazhagam

சுயமரியாதை இயக்கம்
Daily One Topic #6 - Prelims: Unit VIII TN History and Socio-Political Movements
PDF
Download the notes PDF8 pages, English and Tamil, free
Download PDF ↓

Why Periyar left the Congress and started the Self-Respect Movement in 1925, its aims (casteless society, rationality, self-respect marriage, women's emancipation), his journals led by Kudi Arasu, Vaikom Virar, the 1929 conferences on women's rights and the birth of Dravidar Kazhagam in 1944. Bilingual notes with 8 practice MCQs.

பெரியார் காங்கிரஸை விட்டு விலகி 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது ஏன், அதன் நோக்கங்கள் (சாதியற்ற சமூகம், பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணம், பெண் விடுதலை), குடிஅரசு உள்ளிட்ட இதழ்கள், வைக்கம் வீரர், 1929 மாநாடுகளில் பெண்களின் உரிமைகள், 1944இல் திராவிடர் கழகம். 8 பயிற்சி வினாக்களுடன்.

What was the Self-Respect Movement? சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?

The Self-Respect Movement (Suyamariyathai Iyakkam), started by Periyar E.V. Ramasamy in 1925, critiqued the social, political and economic relations of the time and introduced a programme of non-Brahmin uplift in Tamil Nadu.

பெரியார் ஈ.வெ. ராமசாமி 1925இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், அன்று நிலவிய சமூக, அரசியல், பொருளாதார உறவுகளில் இருந்த சீர்கேடுகளை விமர்சனம் செய்ததோடு, தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்தது.

It was concerned with the marginalised sections of society.

சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் மீது இவ்வியக்கம் அக்கறை கொண்டிருந்தது.

Periyar E.V. Ramasamy (1879-1973): timeline பெரியார் ஈ.வெ. ராமசாமி (1879-1973): காலவரிசை

Yearஆண்டுEventநிகழ்வு
1879Born in Erode; son of Venkatappa and Chinna Thayammalஈரோட்டில் பிறந்தார்; வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகன்
1918-1919Chairman of the Erode Municipal Councilஈரோடு நகரசபைத் தலைவர்
1920-1922Resigned government posts for the Non-Cooperation Movement; sold khadi; cut down 500 coconut trees for prohibitionஒத்துழையாமை இயக்கத்திற்காக அரசுப் பொறுப்புகளை ராஜினாமா செய்தார்; கதர் விற்றார்; மது விலக்கிற்காக 500 தென்னை மரங்களை வெட்டினார்
Vaikomவைக்கம்Led the Vaikom protest after local leaders were arrested; jailed; hailed as Vaikom Virarஉள்ளூர் தலைவர்கள் கைதான பின் வைக்கம் போராட்டத்திற்குத் தலைமையேற்று சிறை சென்றார்; "வைக்கம் வீரர்" எனப் பாராட்டப்பட்டார்
1925Reservation resolution failed at the Kanchipuram session of the Tamil Nadu Congress Committee; quit the Congress; started the Self-Respect Movementகாஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் குழுவின் மாநாட்டில் இட ஒதுக்கீடு தீர்மானம் தோல்வி; காங்கிரஸை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்
1929Self-Respect Conferences begin to voice the plight of womenசுயமரியாதை மாநாடுகளில் பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கினார்
1936Got Ambedkar's Annihilation of Caste translated into Tamilஅம்பேத்கரின் "சாதி ஒழிப்பு" நூலைத் தமிழில் பதிப்பித்தார்
1937-1939Anti-Hindi agitation against compulsory Hindi in schools; jailedபள்ளிகளில் கட்டாய இந்தியை எதிர்த்து இந்தி எதிர்ப்புப் போராட்டம்; சிறை
1944Justice Party merged with the movement and renamed Dravidar Kazhagam (DK)நீதிக்கட்சி இயக்கத்துடன் இணைந்து திராவிடர் கழகம் (தி.க) எனப் பெயர் பெற்றது
1973Died at 94; buried at Periyar Thidal, Madrasதொண்ணூற்று நான்காவது வயதில் இயற்கை எய்தினார்; சென்னை பெரியார் திடலில் நல்லடக்கம்

Why he left the Congress: caste discrimination in the dining hall of the Cheranmadevi Gurukulam (run by V.V. Subramaniam with Congress money), and the failure of his resolution for reservation for non-Brahmins in representative bodies.

காங்கிரஸை விட்டு விலகக் காரணம்: காங்கிரஸ் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தின் உணவு அறையில் நிலவிய சாதிப் பாகுபாடு; சட்டசபை போன்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய தீர்மானம் தோல்வி.

Aims of the movement இயக்கத்தின் நோக்கங்கள்

1. A casteless society சாதியற்ற சமூகம்

  • Advocated a casteless society devoid of rituals and differences based on birth.சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற, சாதிகளற்ற சமூகத்தை ஆதரித்தது.

2. Rationality and self-respect பகுத்தறிவும் சுயமரியாதையும்

  • Declared rationality and self-respect as the birthright of all human beings, more important than self-rule.பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்து, சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது.
  • Deplored superstitions and questioned superstitious beliefs in society.சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்தியது; மூடநம்பிக்கைகளை நீக்கக் கோரியது.

3. Women's emancipation and education பெண் விடுதலையும் கல்வியும்

  • Declared illiteracy a source of women's subordination; promoted compulsory elementary education for all.பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்து, அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.

4. Self-respect marriage சுயமரியாதைத் திருமணம்

  • Advocated reform marriage or self-respect marriage, inter-caste and without rituals.சடங்குகளற்ற, சாதிமறுப்பு சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.

Journals started by Periyar பெரியார் தொடங்கிய இதழ்கள்

Yearஆண்டுJournal (meaning)இதழ் (பொருள்)
1925Kudi Arasu (Democracy): official newspaper of the movementகுடிஅரசு: இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள்
1928Revoltரிவோல்ட்
1933Puratchi (Revolution)புரட்சி
1934Paguththarivu (Rationalism)பகுத்தறிவு
1935Viduthalai (Liberation)விடுதலை

Kudi Arasu brought out the voices of non-Brahmins, women and religious minorities. Periyar often wrote under the pen name Chitraputtiran.

குடிஅரசு பிராமணரல்லாதோர், பெண்கள், சமயச் சிறுபான்மையினர் ஆகியோரின் எண்ணங்களை வெளிக்கொணர்ந்தது. பெரியார் அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் எழுதினார்.

Exam trap (Group 4, 2025): "[R] New India was the official newspaper of the Self-Respect Movement" is FALSE. The official newspaper was Kudi Arasu (1925). Key: [A] true, [R] false.

தேர்வு ட்ரேப் (குரூப் 4, 2025): "சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா" என்பது தவறு. அதிகாரபூர்வ செய்தித்தாள் குடிஅரசு (1925). விடை: [A] சரி, [R] தவறு.

Periyar, a feminist பெரியார், ஒரு பெண்ணியவாதி

Condemned child marriage and the devadasi system.

குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.

From 1929, at the Self-Respect Conferences, he insisted on women's right to divorce and to property.

1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என வலியுறுத்தினார்.

Rejected "giving in marriage" (it treats a woman as a thing); used valkaithunai (companion), a word from the Tirukkural.

"திருமணம் செய்து கொடுப்பது" என்ற சொற்கள் பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என மறுத்து, திருக்குறளில் உள்ள "வாழ்க்கைத் துணை" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டினார்.

His most important work on women: Why the Woman is Enslaved?

பெண்ணியம் குறித்த மிக முக்கியமான நூல்: பெண் ஏன் அடிமையானாள்?

Result: the Hindu Succession Tamil Nadu Amendment Act, 1989 gave women equal rights to ancestral property; it led to similar laws at the national level.

விளைவு: 1989 தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டம் முன்னோர்களின் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமையை உறுதி செய்தது; தேசிய அளவிலும் இதுபோன்ற சட்டங்களுக்கு அடிப்படையானது.

Also note: Periyar opposed Rajaji's vocational scheme as Kula Kalvi Thittam (caste-based education); Rajaji resigned and K. Kamaraj became Chief Minister of Madras State.

கூடுதல் குறிப்பு: ராஜாஜியின் தொழில் கல்வித் திட்டத்தைப் பெரியார் குலக்கல்வித் திட்டம் என விமர்சித்து எதிர்த்தார்; ராஜாஜி பதவி விலக, கு. காமராஜ் சென்னை மாநில முதலமைச்சரானார்.

Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள

Pointகுறிப்புKey wordமுக்கியச் சொல்
Startedதொடக்கம்1925, after the Kanchipuram session1925, காஞ்சிபுரம் மாநாட்டிற்குப் பின்
Official paperஅதிகாரபூர்வ இதழ்Kudi Arasu (1925)குடிஅரசு (1925)
Titleபட்டம்Vaikom Virarவைக்கம் வீரர்
Dravidar Kazhagamதிராவிடர் கழகம்1944, Justice Party + Self-Respect Movement1944, நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம்
Women's propertyபெண்களின் சொத்துரிமைTamil Nadu Act, 1989தமிழ்நாடு சட்டம், 1989

Practice MCQs பயிற்சி வினாக்கள்

1. In which year did Periyar start the Self-Respect Movement?
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு
(A) 1925(B) 1920(C) 1929(D) 1944
2. The official newspaper of the Self-Respect Movement was
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள்
(A) Viduthalaiவிடுதலை(B) Kudi Arasuகுடிஅரசு(C) Revoltரிவோல்ட்(D) Puratchiபுரட்சி
3. Periyar was hailed as "Vaikom Virar" for his role in
பெரியார் "வைக்கம் வீரர்" எனப் பாராட்டப்பட்டது
(A) The anti-Hindi agitationஇந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக(B) The Non-Cooperation Movementஒத்துழையாமை இயக்கத்திற்காக(C) The Vaikom protest against denial of temple streetsகோவில் வீதிகளில் நுழைய மறுத்ததை எதிர்த்த வைக்கம் போராட்டத்திற்காக(D) The Salt Satyagrahaஉப்புச் சத்தியாகிரகத்திற்காக
4. The Justice Party and the Self-Respect Movement together were renamed Dravidar Kazhagam in
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகம் எனப் பெயர் பெற்ற ஆண்டு
(A) 1925(B) 1937(C) 1939(D) 1944
5. Periyar wrote columns under the pen name
பெரியார் கட்டுரைகள் எழுதிய புனைப்பெயர்
(A) Chitraputtiranசித்திரபுத்திரன்(B) Kalkiகல்கி(C) Bharathidasanபாரதிதாசன்(D) Thathaதாத்தா
6. Periyar's most important work on women is
பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல்
(A) Annihilation of Casteசாதி ஒழிப்பு(B) Why the Woman is Enslaved?பெண் ஏன் அடிமையானாள்?(C) Jeeviya Saritha Surukkamஜீவிய சரித சுருக்கம்(D) Kudi Arasuகுடிஅரசு
7. Periyar called the vocational education scheme of Rajaji (1952-54)
ராஜாஜியின் (1952-54) தொழில் கல்வித் திட்டத்தைப் பெரியார் அழைத்த பெயர்
(A) Nai Talimநயி தாலிம்(B) Samacheer Kalviசமச்சீர் கல்வி(C) Kula Kalvi Thittamகுலக்கல்வித் திட்டம்(D) Basic Educationஅடிப்படைக் கல்வி
8. The Hindu Succession Tamil Nadu Amendment Act, 1989 gave women
1989 தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டம் பெண்களுக்கு வழங்கியது
(A) The right to voteவாக்குரிமை(B) Reservation in jobsவேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு(C) Free educationஇலவசக் கல்வி(D) Equal rights to ancestral propertyமூதாதையர் சொத்தில் சம உரிமை
Answer key / விடைகள்: 1 A, 2 B, 3 C, 4 D, 5 A, 6 B, 7 C, 8 D

Source: 10th Social Science, History Unit 10 Social Transformation in Tamil Nadu, p.74 to 76.

ஆதாரம்: 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல், வரலாறு அலகு 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், பக்கம் 82 முதல் 85.

PDF
Save these notes as a PDF8 pages, English and Tamil, free
Download PDF ↓

What is inside

Get the next notes first

A new topic and notes PDF every day.

Sources: 10th Social Science, History Unit 10 Social Transformation in Tamil Nadu, p.74 to 76