What is soil? மண் என்றால் என்ன?
Soil is the uppermost layer of the land surface, made of minerals, organic matter, living organisms, air and water. Its grains are of three kinds: clay, silt and sand. Soils are generally formed by the weathering of rocks.
மண் என்பது நிலப்பரப்பின் மேல் அடுக்கு; இதில் கனிமங்கள், கரிமப் பொருட்கள், உயிரினங்கள், காற்று, நீர் உள்ளன. களிமண், வண்டல், மணல் என மூன்று வகைத் துகள்கள் உள்ளன. பாறைகள் சிதைவதால் பொதுவாக மண் உருவாகிறது.
ICAR: 8 soil groups ICAR: 8 மண் பிரிவுகள்
The Indian Council of Agricultural Research (ICAR), set up in 1953, divides the soils of India into eight major groups.
1953-ல் அமைக்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) இந்திய மண்ணை 8 முக்கிய பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
Share of each soil in India இந்தியாவில் ஒவ்வொரு மண்ணின் பரப்பு சதவீதம்
As per the chart in the 10th Geography book. Some other sources put alluvial soil first (about 40%); for the exam, follow your source book.
10-ஆம் வகுப்பு புவியியல் புத்தகத்தின் வரைபடப்படி. சில நூல்கள் வண்டல் மண்ணை முதலிடத்தில் (சுமார் 40%) வைக்கின்றன; தேர்வுக்கு உங்கள் பாடநூலைப் பின்பற்றுங்கள்.
The four major soils நான்கு முக்கிய மண் வகைகள்
Alluvial soil வண்டல் மண் 22.16% of India
- Formed from sediments deposited by streams and rivers.சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும்போது படிய வைக்கப்படும் படிவுகளால் உருவாகிறது.
- Khadar: new, light coloured, more siliceous. Bhangar: older alluvium with lime nodules, clayey, dark.காதர்: வெளிர் நிறமுடைய புதிய, மணற்பாங்கான மண். பாங்கர்: சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவு, அடர் நிறம் உடையது.
- Rich in potash, phosphoric acid, lime and carbon compounds; poor in nitrogen.பொட்டாசியம், பாஸ்பாரிக் அமிலம், சுண்ணாம்பு, கார்பன் கலவைகள் அதிகம்; நைட்ரஜன் குறைவு.
- Where: Ganga and Brahmaputra valleys; plains of UP, Uttarakhand, Punjab, Haryana, West Bengal, Bihar; river mouths of the east coast.பரவல்: கங்கை, பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள்; உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், பீகார் சமவெளிகள்; கிழக்குக் கடற்கரை ஆற்று முகத்துவாரங்கள்.
- Crops: rice, wheat, sugarcane, oilseeds.பயிர்கள்: நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள்.
Black soil (Regur) கரிசல் மண் 29.69% of India
- Derived from the basalts of the Deccan trap.தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளிலிருந்து உருவானது.
- Black colour due to titanium and iron. Sticky when wet; high moisture retentivity.டைட்டானியம், இரும்புத் தாதுக்களால் கருப்பு நிறம். ஈரமாக இருக்கும்போது சேறாகும்; ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைக்கும்.
- Rich in potash, lime, aluminium, calcium and magnesium; poor in nitrogen, phosphoric acid and humus.பொட்டாஷ், சுண்ணாம்பு, அலுமினியம், கால்சியம், மக்னீசியம் அதிகம்; நைட்ரஜன், பாஸ்பாரிக் அமிலம், இலைமட்கு குறைவு.
- Where: Maharashtra and Malwa plateaus, Kathiawar peninsula, Telangana and Rayalaseema, northern Karnataka.பரவல்: மகாராஷ்டிரா, மாளவப் பீடபூமி, கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ராயலசீமா, வடக்கு கர்நாடகா.
- Crops: cotton (also called black cotton soil), millets, tobacco, sugarcane.பயிர்கள்: பருத்தி (எனவே கருப்பு பருத்தி மண்), தினை வகைகள், புகையிலை, கரும்பு.
Red soil செம்மண் 28% of India
- Formed by the decomposition of ancient crystalline rocks like granites and gneisses.கிரானைட், நைஸ் போன்ற பழமையான படிகப் பாறைகள் சிதைவடைவதால் உருவாகிறது.
- Iron oxide gives the red colour. Rich in iron and magnesium.இரும்பு ஆக்சைடு சிவப்பு நிறத்தைத் தருகிறது. இரும்பு, மக்னீசியம் அதிகம்.
- Deficient in nitrogen, humus, phosphoric acid and lime. Light, porous and friable.நைட்ரஜன், இலைமட்கு, பாஸ்பாரிக் அமிலம், சுண்ணாம்பு குறைவு. லேசானது, நுண்துளைகள் கொண்டது, எளிதில் உதிரும்.
- Where: eastern Deccan plateau, Kerala, Tamil Nadu, Karnataka, Chota Nagpur plateau.பரவல்: தக்காணப் பீடபூமியின் கிழக்குப் பகுதி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, சோட்டா நாக்பூர் பீடபூமி.
- Crops: wheat, rice, cotton, sugarcane, pulses.பயிர்கள்: கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, பருப்பு வகைகள்.
Laterite soil சரளை மண் 2.62% of India
- Formed where alternate wet and hot dry conditions prevail, by the process of leaching.ஈரமும் வறண்ட வெப்பமும் மாறி மாறி நிலவும் இடங்களில், மண்சுவரல் (leaching) மூலம் உருவாகிறது.
- Mainly hydrated oxides of iron and aluminium.இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் ஆனது.
- More acidic on higher areas and cannot retain moisture there.உயரமான பகுதிகளில் அமிலத்தன்மை அதிகம்; அங்கு ஈரப்பதத்தைத் தக்க வைப்பதில்லை.
- Where: Assam hills, hill summits of Kerala and Karnataka, Eastern Ghats, Odisha.பரவல்: அசாம் குன்றுகள், கேரளா மற்றும் கர்நாடகா மலைப் பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், ஒடிசா.
- Crops: coffee, rubber, cashewnut, tapioca.பயிர்கள்: காபி, ரப்பர், முந்திரி, மரவள்ளிக் கிழங்கு.
The other four soils மற்ற நான்கு மண் வகைகள்
| Soilமண் | Key pointமுக்கியக் குறிப்பு | Whereபரவல் | Cropsபயிர்கள் |
|---|---|---|---|
| Forest and mountain soilகாடு மற்றும் மலை மண் 7.94% | Mechanical weathering by snow, rain and temperature change; rich in humus, acidicபனி, மழை, வெப்பநிலை மாற்றத்தால் பௌதீகச் சிதைவு; இலைமட்கு அதிகம், அமிலத்தன்மை | J&K, Himachal, Uttarakhand, Sikkim; Eastern and Western Ghatsஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம்; கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் | Tea, coffee, spices, maize, potatoதேயிலை, காபி, வாசனைப் பொருட்கள், மக்காச்சோளம், உருளைக் கிழங்கு |
| Arid and desert soilவறண்ட பாலை மண் 6.13% | Dry climate, high evaporation; high soluble salts, low humus, rich in phosphateவறண்ட காலநிலை, அதிக ஆவியாதல்; உப்பு அதிகம், இலைமட்கு குறைவு, பாஸ்பேட் உண்டு | Rajasthan, northern Gujarat, southern Punjabஇராஜஸ்தான், வடக்கு குஜராத், தெற்கு பஞ்சாப் | Millets, barley, cotton (with irrigation)தினை வகைகள், பார்லி, பருத்தி (நீர்ப்பாசனத்துடன்) |
| Saline and alkaline soilஉப்பு மற்றும் காரமண் 1.29% | Poor drainage and water logging; salts rise by capillary actionவடிகால் இல்லாமை, நீர் தேக்கம்; நுண்புழை நுழைவால் உப்புகள் மேற்பரப்புக்கு வருகின்றன | Drier parts of Bihar, UP, Haryana, Punjab, Rajasthan, Maharashtraபீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான், மகாராஷ்டிராவின் வறண்ட பகுதிகள் | Crops do not grow (excess salts)அதிக உப்பால் பயிர்கள் வளராது |
| Peaty and marshy soilகளிமண் மற்றும் சதுப்பு நில மண் 2.17% | Organic matter in heavy rainfall, humid areas; black, heavy, highly acidicஅதிக மழை, ஈரப் பகுதிகளில் உயிரினப் பொருட்களிலிருந்து உருவாகிறது; கருமை நிறம், அதிக அமிலத்தன்மை | Kottayam and Alappuzha (Kerala), coastal Odisha and Tamil Nadu, Sundarbansகோட்டயம், ஆலப்புழை (கேரளா), ஒடிசா, தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், சுந்தரவனம் | Paddy, juteநெல், சணல் |
Soils of Tamil Nadu தமிழ்நாட்டின் மண்
Red soil covers over two-thirds of the total area of Tamil Nadu, mainly in the central districts. Iron oxide gives the colour; poor in nitrogen, phosphorus and humus. Crops: paddy, ragi, tobacco, vegetables.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் செம்மண் உள்ளது; குறிப்பாக மத்திய மாவட்டங்களில். இரும்பு ஆக்சைடு நிறத்தைத் தருகிறது; நைட்ரஜன், பாஸ்பரஸ், இலைமட்கு குறைவு. பயிர்கள்: நெல், கேழ்வரகு, புகையிலை, காய்கறிகள்.
Black soil (regur) is found in Coimbatore, Madurai, Virudhunagar, Tirunelveli and Thoothukudi. Crops: cotton, sorghum, cumbu, fodder crops.
கரிசல் மண் கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. பயிர்கள்: பருத்தி, சோளம், கம்பு, தீவனப் பயிர்கள்.
Remember in one line ஒரே வரியில் நினைவில் கொள்ள
| Soilமண் | Key wordமுக்கியச் சொல் |
|---|---|
| Alluvial soilவண்டல் மண் | Rivers: Ganga plains, rice and wheatஆறுகள்: கங்கைச் சமவெளி, நெல், கோதுமை |
| Black soilகரிசல் மண் | Deccan basalt: holds water, cotton, regurதக்காணப் பசால்ட்: ஈரம் தங்கும், பருத்தி, ரீகர் |
| Red soilசெம்மண் | Iron oxide: red colour, two-thirds of Tamil Naduஇரும்பு ஆக்சைடு: சிவப்பு நிறம், தமிழ்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு |
| Laterite soilசரளை மண் | Leaching: wet and dry seasons, coffee and rubberமண்சுவரல்: ஈர, வறண்ட பருவங்கள், காபி, ரப்பர் |
Practice MCQs பயிற்சி வினாக்கள்
Sources: 10th Social Science, Geography Unit 3 India Agriculture, p.154 to 156; 10th Geography Unit 6 Physical Geography of Tamil Nadu, p.96; 8th Geography Unit 1 Rocks and Soils, p.89.
ஆதாரம்: 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல், புவியியல் அலகு 3 இந்தியா வேளாண்மை, பக்கம் 163 முதல் 165; 10-ஆம் வகுப்பு புவியியல் அலகு 6 தமிழ்நாடு இயற்கை அமைப்பு; 8-ஆம் வகுப்பு புவியியல் அலகு 1 பாறைகளும் மண்ணும்.

