பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு IV - இந்திய அரசியலமைப்பு
நிறுவுதல் மற்றும் நோக்கம்
- தமிழ்நாடு அரசு "ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம்" அமைக்க உத்தரவிட்டது.
- மனிதர், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்துக்கான சவால்களை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது.
- உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த நல்வாழ்வு (One Health) அணுகுமுறையுடன் இணைந்தது.
முக்கிய சவால்கள்
- விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள்.
- நோய்க்கடத்திகள் மூலம் பரவும் நோய்கள்.
- நுண்ணுயிர் எதிர்ப்பு.
- பல்லுயிர் இழப்பு.
- காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்:
- வெப்பநிலை உயர்வு.
- கடலோரப் பகுதிகளின் பாதிப்புகள்.
நோக்கங்கள்
- காலநிலை மாற்றத்தால் உண்டாகும் சுகாதார அபாயங்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல்.
- காலநிலை உணர்திறன் கொண்ட நோய்களைப் பற்றிய கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துதல்.
- துறை இணைப்பை ஊக்குவித்தல் (சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை).
- ஒருங்கிணைந்த நல்வாழ்வு அணுகுமுறைக்கு திறன் மேம்பாடு.
- பசுமை சுகாதார உள்கட்டமைப்பை ஊக்குவித்தல்.
- புதுமை மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஆதரித்தல்.
- நுண்ணுயிர் எதிர்ப்பு சவால்களை தீர்த்தல்.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை வரைபடம் செய்யுதல்.
- நவீன ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைத்தல்.
முக்கிய செயல்பாடுகள்
- கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை உருவாக்குதல்.
- வலுவான கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுதல்.
- முன்னெச்சரிக்கை முறைகளை உருவாக்குதல்.
- பயிற்சி மற்றும் பட்டறைகளை நடத்துதல்.
- மருத்துவமனைகளை காலநிலை நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுதல்.
- ஆரோக்கியம்-காலநிலை தொடர்புகள் குறித்த ஆய்வுகள்.
- செயற்கை நுண்ணறிவு மூலம் முன்னறிவிப்பு மாதிரிகளை உருவாக்குதல்.
- மாநில அளவிலான தரவுத்தளங்களை உருவாக்கி புதுப்பித்தல்.
- கண்டறிந்தவற்றை பங்குதாரர்களுக்கு பரப்புதல்.
- மாவட்ட மற்றும் மாநில அளவிலான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளை ஏற்படுத்துதல்.
நிர்வாக அமைப்பு
- தலைமை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.
உறுப்பினர்கள்:
- PD TNHSP, MD NHM, DPH, DME, DMS.
- சிறப்பு ஆலோசகர்களைக் கொண்ட செயலகம் ஆதரவளிக்கும்.
முக்கியத்துவம்
- இந்தியாவில் சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒருங்கிணைந்த உத்திகள் உருவாக்கப்பட்ட முதல் முயற்சி.
- காலநிலை மாற்றத்தால் உண்டாகும் சுகாதார சவால்களுக்கு தமிழ்நாட்டின் தயார்நிலையை மேம்படுத்துகிறது.
- நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- தேசிய காலநிலை மாற்றம் மற்றும் மனித சுகாதார திட்டத்துடன் (NPCCHH) இணைந்து செயல்படுகிறது.