பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு IV - இந்திய அரசியலமைப்பு
பின்னணி
- முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
- குழு மார்ச் மாதம் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டது.
முக்கிய பரிந்துரைகள்
- மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம்.
- அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை.
- இரண்டு கட்ட அமலாக்கம்:
- மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒன்றாக.
- 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள்.
- தொங்கு பாராளுமன்றம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானங்களுக்கான ஏற்பாடுகள்.
- முதல் ஒருங்கிணைந்த தேர்தலுக்கு சில சட்டசபைகளின் பதவிக்காலம் நீட்டிப்பு.
- ஒற்றை வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டைகள்.
அரசின் நடவடிக்கைகள்
- ஒரே நாடு ஒரே தேர்தல் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
- அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல்.
- நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள்
- ஒருங்கிணைந்த தேர்தல்களுக்கான புதிய உறுப்பு 324A.
- உறுப்புகள் 83, 172, மற்றும் 327 திருத்தங்கள்.
- யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர்) தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள்.
அமலாக்க சவால்கள்
- கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.
- பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை.
- உள்ளாட்சித் தேர்தல்களை சேர்க்க 50% மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவை.
அரசியல் நிலவரம்
- மக்களவையில் NDA கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் (மொத்தம் 543, தேவை 362).
- ராஜ்யசபாவில் NDA கூட்டணிக்கு 122 எம்.பி.க்கள் (மொத்தம் 243, தேவை 162).
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு அறிக்கை.
- கூட்டாட்சி முறை மற்றும் மாநில சுயாட்சி பாதிப்பு குறித்த கவலைகள்.