பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு IV - இந்திய அரசியலமைப்பு
வழிபாட்டுத் தலங்கள் ஆய்வு குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு
- எந்த நீதிமன்றமும் வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் மற்றும் தர்காக்களில் ஆய்வு குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது.
- இது தொடர்பான புதிய வழக்குகளை விசாரிக்கக் கூடாது.
- உச்சநீதிமன்றத்தின் அடுத்த அறிவுறுத்தல் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.
பிரச்சனையின் பின்னணி
- பழைய இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாக இந்து குழுக்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளன:
- வாரணாசியில் ஞானவாபி மசூதி
- மதுராவில் ஈத்கா மசூதி
- சம்பலில் ஜாமா மசூதி
வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991
- முஸ்லிம் குழுக்கள் இந்த சட்டத்தை மேற்கோள் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
- 1947 ஆகஸ்ட் 15 அன்று இருந்த வழிபாட்டுத் தலங்களின் மத தன்மையை மாற்றுவதை தடை செய்கிறது.
- வழிபாட்டுத் தலங்களின் மத தன்மையை பராமரிக்க உரிமைகளை வழங்குகிறது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்
- 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, இதில் அடங்குபவை:
- மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு.
- பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு.
உச்சநீதிமன்ற விசாரணை
- சிறப்பு அமர்வில் பங்கேற்றவர்கள்:
- தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா
- நீதிபதி சஞ்சய் குமார்
- நீதிபதி கே.வி.விஸ்வநாதன்
- 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் முடிவு.
நீதிமன்றத்தின் உத்தரவுகள்
- மற்ற நீதிமன்றங்கள் மசூதி ஆய்வு குறித்த இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகளை பிறப்பிக்க தடை.
- மத்திய அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய 4 வார அவகாசம்.
- எதிர் மனுதாரர்களுக்கு அரசின் பதிலுக்கு கருத்து தெரிவிக்க மேலும் 4 வார அவகாசம்.