TNPSC · Group 1 · General Studies · 2025

TNPSC Group 1 Question Paper 2025: Official General Studies Paper with Answer Key

All 200 General Studies and Aptitude questions from the official TNPSC Group 1 Preliminary Examination 2025, in English and Tamil. Try each question first, then tap Show Answer - every answer follows TNPSC's official answer key.

1 student is reading now 15 read so far
Share WhatsApp Telegram My List
200Questions 175 + 25GS + Aptitude English + TamilBilingual OfficialTNPSC answer key
Question 1
Which of statements are True? (i) Octane number increases with chain length (ii) Cycloalkanes have higher Octane number than straight chain alkanes (iii) Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes (iv) Branched chain alkanes have lower octane number than straight chain alkanes
கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று? (i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் எண் உயர்கிறது (ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் எண் உண்டு (iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் எண் கொண்டது (iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் எண் கொண்டது
Correct answer: (C) (ii) and (iii) / (ii) மற்றும் (iii)
Question 2
Match the following hormone with the disorder caused:
(a) Insulin1. Cushing's syndrome
(b) Thyroxine2. Diabetes insipidus
(c) Glucocorticoids3. Acromegaly
(d) Growth hormone4. Goitre
5. Diabetes Mellitus
ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக:
(a) இன்சுலின்1. குஷிங் சின்ட்ரோம்
(b) தைராக்சின்2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ்
(c) குளுக்கோகார்டிகாய்ட்3. அக்ரோமிகாலி
(d) வளர்ச்சி ஹார்மோன்4. கழலை
5. Diabetes Mellitus
Correct answer: (C) 5413
Question 3
Choose the right matches: (1) Carotenoid - C55H70O5N4Mg (2) Chlorophyll 'a' - C55H72O5N4Mg (3) Chlorophyll 'b' - C55H70O6N4Mg (4) Xanthophyll - C50H70O5Mg
சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்: (1) கரோடினாய்டு - C55H70O5N4Mg (2) பச்சயம் 'a' - C55H72O5N4Mg (3) பச்சயம் 'b' - C55H70O6N4Mg (4) சாந்தோஃபில் - C50H70O5Mg
Correct answer: (C) (2) and (3) are correct / (2) மற்றும் (3) சரியானவை
Question 4
The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery of
விக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
Correct answer: (B) Micro RNA / நுண் ஆர்.என்.ஏ. (micro RNA)
Question 5
Which of the following statements are true about crew selection and training for "Gaganyaan Mission"? (i) Crews are selected after clinical, psychological and aeromedical examination (ii) Mission-specific training will be conducted at ISRO, Trivandrum (iii) Selected astronauts will undergo their generic spaceflight training in Yuri Gagarin Cosmonaut training centre, Russia
பின்வரும் கூற்றுகளில், எவை "ககன்யான் விண்வெளித்திட்ட" வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பயிற்சி குறித்து சரியான கூற்றுகள்? (i) விண்வெளி பயண வீரர்கள், மருத்துவ, உளவியல் மற்றும் விமான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் (ii) விண்வெளிதிட்ட பயிற்சி, இஸ்ரோ (ISRO), திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது (iii) தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள், பொது ரீதியான வான்வெளிப் பயண பயிற்சியினை ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் அண்டவெளிப் பயணி பயிற்சி மையத்தில் பெறுவார்கள்
Correct answer: (D) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 6
Which of the following statements are correct about PFAS? (i) PFAS is per and poly fluoro alkyl substances (ii) It is used in paint industries (iii) PFAS are endocrine disrupters
கீழ்க்காணும் கூற்றுக்களில் PFAS பற்றிய சரியான கூற்றுக்களை தேர்ந்தெடுக்கவும். (i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும் (ii) இது வண்ணப்பூச்சு (பெயின்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது (iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 7
The biological oxygen demand is the amount of dissolved oxygen required by _____ in water.
உயிர்வேதியலில் ஆக்ஸிஜன் தேவை என்பது, நீரில் _____ பயன்பாட்டின் போது நுகரப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகும்.
Correct answer: (A) Microbes / நுண்ணுயிர்
Question 8
Which of the following is the first Indian Geo-Stationary Satellite?
பின்வருவனவற்றில் எது முதல் இந்திய புவிசார் செயற்கைக்கோள்?
Correct answer: (A) INSAT 3D
Question 9
Who among the following tribes act as cattle keepers?
பின்வரும் பழங்குடியினரில் யார் கால்நடை பராமரிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்?
Correct answer: (C) Rawats / ரவாட்ஸ்
Question 10
Assertion [A]: Development of a nation depends on infrastructure facilities. Reason [R]: Transport and communication are the back bone of economic development.
கூற்று [A]: நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது. காரணம் [R]: போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
Correct answer: (A) [A] and [R] is true and [R] is correct explanation for [A] / [A] மற்றும் [R] சரியே, [R] [A] க்கான மிகச் சரியான விளக்கம் ஆகும்
Question 11
Match the following type: Match correctly the river and its places of rises.
(a) The Krishna1. Garwal Tibet border
(b) The Alaknanda2. Central Himalayas
(c) The Gandak3. Tibet
(d) The Brahmaputra4. Sahyadris
பின்வரும் வகையைப் பொருத்து. ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து:
(a) கிருஷ்ணா1. கார்வால் திபெத் எல்லை
(b) அலக்நந்தா2. மத்திய இமயமலை
(c) கான்டக்3. திபெத்
(d) பிரம்மபுத்திரா4. சயாத்ரிஸ்
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 12
Arrange the following events in chronological order. (i) Ahemadabad Mill Strike (ii) Champaran Satyagraha (iii) Kheda Satyagraha (iv) Rowlatt Satyagraha
கால வரிசைப்படி அடுக்குக. (i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம் (ii) சம்பாரன் சத்தியாகிரகம் (iii) கேதா சத்தியாகிரகம் (iv) ரௌலட் சத்தியாகிரகம்
Correct answer: (A) (ii), (i), (iii), (iv)
Question 13
How did education contribute to the Indian Renaissance? (i) Contributed Growth of Money (ii) Promoting scientific learning (iii) Promoted social and cultural progress
இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வியின் பங்களிப்பு எவ்வாறு உதவி செய்தது? (i) பண வளர்ச்சியை கொடுத்தது (ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக (iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
Correct answer: (B) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
Question 14
Match the following:
(a) Peshwa1. Foreign Secretary
(b) Amatya2. Chief Minister
(c) Sachiva3. Finance Minister
(d) Sumant4. Superintendent
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) பேஷ்வா1. அயல்நாட்டு செயலர்
(b) அமாத்தியர்2. முதலமைச்சர்
(c) சச்சீவா3. நிதியமைச்சர்
(d) சுமந்த்4. கண்காணிப்பாளர்
Correct answer: (C) 2314
Question 15
Choose the right matches among type:
(a) 'Indian World' Journal1. J.S. Buckingham
(b) "Telegraph' Journal2. Charles MacLean
(c) 'Bengal Kirkaru' Journal3. Mekenly
(d) 'Calcutta' Journal4. Duane
சரியான விடையைப் பொருத்துக:
(a) 'இந்திய உலகம்' இதழ்1. ஜே.எஸ். பக்கிங்காம்
(b) 'டெலிகிராப்' இதழ்2. சார்லஸ் மெக்லீன்
(c) 'பெங்கால் கிர்க்காரு' இதழ்3. மெக்கன்லி
(d) 'கல்கத்தா' இதழ்4. டியூவான்
Correct answer: (A) 4321
Question 16
Assertion [A]: Cinema was becoming popular in 1940's. Reason [R]: Anna could achieve his ideals through Cinema Artists.
கூற்று [A]: 1940 களில் சினிமா பிரபலமாக இருந்தது. காரணம் [R]: சினிமா கலைஞர்கள் மூலம் அண்ணா தனது இலட்சியங்களை அடைய முடிந்தது
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
Question 17
Which one of the following is correctly matched?
கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்று சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Correct answer: (B) Ghadar Party / கதர்க் கட்சி - Lala Hardayal / லாலா ஹர்தயாள்
Question 18
In Tuticorin, Tamil Nadu, Subramaniya Siva Campaigned for strike in 1908.
1908 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடியில் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தார்.
Correct answer: (C) February - March / பிப்ரவரி – மார்ச்
Question 19
Which of the following statements are true? (i) The National population policy, was promulgated in April 1976 (ii) Included provisions for health care, nutrition and more stress on Education for girls (iii) The goal was an eventual average family size of two children
பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது? (i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது (ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது (iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது
Correct answer: (D) (i), (ii) and (iii) correct / (i), (ii) மற்றும் (iii) சரி
Question 20
Who founded the Satya Shodak Samaj in 1873?
சத்ய சோதக் சமாஜ்-ஐ 1873 இல் தோற்றுவித்தவர் யார்?
Correct answer: (A) Jyoti Rao Phule / ஜோதி ராவ் பூலே
Question 21
Which among the following was the first Christian Ashram established in South?
கீழ்காண்பனவற்றுள் எது தெற்கு பகுதியில் நிறுவப்பட்ட கிறிஸ்துவ அமைப்பின் முதல் ஆசிரமம்?
Correct answer: (B) Christukula Ashram at Tiruppatur / கிறிஸ்துகுல ஆசிரமம், திருப்பத்தூர்
Question 22
The Talaikota Battle was also called as
தலைக்கோட்டை போர் என்றும் அழைக்கப்படுகிறது
Correct answer: (B) Rakahasi-Tangadi Battle / ராகஹாசி -தங்காடி போர்
Question 23
Shivaji was crowned as an independent king at
சிவாஜி சுதந்திர அரசராக முடிசூட்டப்பட்ட இடம்
Correct answer: (A) Raigad / ராய்காட்
Question 24
In the Indus Valley civilization the major commodities in Internal trade consist of (1) Cotton (2) Lumber (3) Grain and food stuffs (4) Livestock
சிந்து சமவெளி நாகரிகத்தில் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக உள்நாட்டு வாணிபத்தில் கருதப்படுவது (1) பருத்தி (2) மரம் (3) உணவு தானியங்கள் (4) கால்நடைகள்
Correct answer: (C) (1), (2), (3), (4) correct / (1), (2), (3), (4) சரி
Question 25
Which is/are the aims of a sound "Theosophical Society"? (i) Believes in Karma, Yoga and Indian Philosophy (ii) Universal spiritual brotherhood (iii) To protect the society from evil practices
பிரம்மஞான சபையின் நோக்கம் யாது? (i) கர்மா, யோகா, இந்தியத் தத்துவத்தின் மீது நம்பிக்கை (ii) உலகளாவிய ஆன்மீக சகோதரத்துவம் (iii) தீய நடைமுறைகளிலிருந்து சமுதாயத்தைப் பாதுகாப்பது
Correct answer: (C) (i) and (ii) only correct / (i) மற்றும் (ii) மட்டும் சரி
Question 26
Assertion [A]: The zonal councils owe their origin to the constitution. Reason [R]: The zonal councils are the logical outcome of the reorganisation of states on a linguistic basis.
கூற்று [A]: மண்டல மன்றங்கள் அவற்றின் தோற்றத்திற்கு அரசியலமைப்பிற்குக் கடமைப்பட்டுள்ளது. காரணம் [R]: மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.
Correct answer: (D) [A] is wrong; [R] is correct / [A] தவறு; ஆனால் [R] சரி
Question 27
Sexual Harassment of Women at Workplace Act was enacted in the year
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடைசட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Correct answer: (A) 2013
Question 28
Arrange the following events in chronological order: Golaknath v/s State of Punjab Keshvananda Bharati v/s State of Kerala Minerva Mills Ltd. v/s State of India A.K. Gopalan v/s State of Madras
கீழ்கண்டவற்றை காலமுறைப்படி வரிசைப்படுத்துக: கோலக்நாத் V/S பஞ்சாப் மாநிலம் கேசவானந்த பாரதி v/s கேரளா மாநிலம் மினர்வா மில்ஸ் லிமிட் v/s இந்திய அரசு A.K. கோபாலன் V/S மதராஸ் அரசு
Correct answer: (C) 4, 1, 2, 3
Question 29
Match correctly with the Suitable Act:
(a) Preventive Detention Act (PDA) in India1. 1971
(b) The National Emergencies Act was signed into law by President Gerald Ford2. 1974
(c) The Indo-Pakistan war3. 1950
(d) Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act4. 1976
சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க:
(a) இந்திய தடுப்பு காவல் சட்டம்1. 1971
(b) தேசிய அவசரகால சட்டத்திற்கு ஜெரால்ட் ஃபோர்டு கையெழுத்திட்ட ஆண்டு2. 1974
(c) இந்தோ-பாகிஸ்தான் போர்3. 1950
(d) வெளிநாட்டு பரிவர்த்தனை பாதுகாப்பு மற்றும் கடத்தல் செயல்பாடுகள் தடுப்பு சட்டம்4. 1976
Correct answer: (C) 3, 4, 1, 2
Question 30
Consider the following Statements, Choose the correct answer: (i) January 30th is the Death anniversary of Annal Gandhi Adigal (ii) January 23rd is the Birth Anniversary of Netaji Subash Chandra Bose (iii) April 14th is the Birth Anniversary of Annal Ambedkar (iv) October 13th is the Birth Anniversary of Sardar Vallabhai Patel
கீழ்கண்ட வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க: (i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும் (ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும் (iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும் (iv) சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
Correct answer: (D) (i), (ii), (iii) only correct / (i), (ii), (iii) மட்டும் சரி
Question 31
Consider the Assertion (A) and Reason (R) and choose the correct answer. Assertion [A]: A remarkable difference between China and India was observed regarding mass politics around air pollution control. Reason [R]: China employing the approach of Historical Institutionalism to control air pollution.
கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] விளாவை கருதுக. சரியான விடையை தேர்ந்தெடுக்க கூற்று [A]: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்கக்கூடிய வெகுஜன் அரசியலாகும் என்பதை காண முடிகிறது. காரணம் [R]: காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்
Correct answer: (A) Both [A] and [R] are correct statement; [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
Question 32
Which of the following are the objectives of Tamilnadu safe and Ethical Artificial Intelligence Policy, 2020? (i) To establish guidelines for the evaluation of AI systems before its rolled out for public use (ii) To provide restricted access to open data, data models and computing resources (iii) To promote investments in AI R & D in Tamilnadu
கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்? (i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் (ii) வெளிப்படையான தரவுகள் தரவு மாதிரிகள் மற்றும் இணையவழி ஆதாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல் (iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஈர்த்தல்
Correct answer: (B) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 33
Which is/are the objective/s of a Right to Information Act 2005? (i) RTI is empower to citizens, promote transparency and accountability in the working of Govt (ii) The Act is a big step towards making the citizens informed about the activities of Govt (iii) This Act provides right to access information from public authorities, which is guaranteed Art. 13 of constitution
பின்வருவனவற்றுள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் நோக்கங்களை தெரிவு செய்க. (i) இது குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பது ஆகும் (ii) அரசின் செயல்பாடுகள் குறித்து குடிமக்களுக்கு தெரியப்படுத்துவது (iii) இது அரசமைப்பின் உறுப்பு 13-ன் கீழ் உறுதியளிக்கப்பட்ட குடிமக்களுக்கு, பொது அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அளிக்கிறது
Correct answer: (C) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டும்
Question 34
Which among the following was the first state in India to constitute an institution of Lok Ayukta?
இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
Correct answer: (C) Maharashtra / மகாராஷ்டிரா
Question 35
Which of the following statements are true about Election Commission of India? (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக. (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோர்களுக்கு தேர்தல்கள் நடத்துவது (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ரமாதேவி ஆவார் (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்
Correct answer: (C) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டும்
Question 36
Match:
(a) Article 257(A)1. Grants-in-aid
(b) Article 1312. Judicial proceedings
(c) Article 245(1)3. Supreme Court
(d) Article 2754. State Jurisdiction
5. 42nd Amendment Act
பொருத்துக:
(a) சரத்து 257(A)1. மானிய உதவி
(b) சரத்து 1312. நீதித்துறை நடவடிக்கைகள்
(c) சரத்து 245(1)3. உச்ச நீதிமன்றம்
(d) சரத்து 2754. மாநில அதிகார வரம்பு
5. 42வது திருத்தச் சட்டம்
Correct answer: (A) 5, 3, 4, 1
Question 37
Choose the correct matches from the following:
(i) Fourth Finance CommissionA.K. Chanda
(ii) Tenth Finance CommissionShri K.C. Pant
(iii) Sixth Finance CommissionDr. Rajamannar
(iv) Ninth Finance CommissionShri N.K.P. Salve
சரியான இணையை தேர்வு செய்க:
(i) நான்காம் நிதி குழுஏ.கே. சந்தா
(ii) பத்தாம் நிதி குழுதிரு. கே.சி. பந்த்
(iii) ஆறாம் நிதி குழுடாக்டர். ராஜ மன்னார்
(iv) ஒன்பதாம் நிதி குழுதிரு. என்.கே.பி. சால்வே
Correct answer: (B) (ii) and (iv) are correct / (ii) மற்றும் (iv) சரி
Question 38
The Financial Position of the Panchayat is reviewed under
ஊராட்சிகளின் நிதி நிலைமைகளை சீராய்வு செய்யும் அதிகாரம் இந்த அரசியல் சாசன விதியின் கீழ் செய்யப்படுகிறது
Correct answer: (A) Article 243-I / அரசியல் சாசன விதி 243-I
Question 39
Which of the following statements are true about the qualifications for membership of the state legislature? (i) 25 years of age in the case of Legislative Assembly (ii) 30 years of age in the case of Legislative Council (iii) Possesses such other qualifications as may not be prescribed by law passed by parliament
மாநில சட்டமன்ற உறுப்பினர் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) 25 வயது நிரம்பியவர்கள் சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள் (ii) 30 வயது நிரம்பியவர்கள் சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள் (iii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
Correct answer: (B) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டும்
Question 40
The Madras Legislative Council was formed by the
சென்னை மாகாண சட்டப் பேரவை சட்டப்படி உருவாக்கப்பட்டது
Correct answer: (C) Indian Councils Act of 1861 / இந்திய கவுன்சில் சட்டம் 1861
Question 41
Arrange the following stages in the enactment of Budget in Ascending order 1. Voting on Demand for grants 2. Passing of Finance bill 3. Passing of Appropriation bill 4. Scrutiny by departmental committees
கீழ்க்காணும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குப்படுத்துக 1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு 2. நிதி மசோதா நிறைவேற்றம் 3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம் 4. துறைகள் குழுக்களின் ஆய்வு
Correct answer: (C) 4, 1, 3, 2
Question 42
Consider the following statements about the Electoral College of Presidential Election, which among the following statements is correct?
பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவருக்கான "வாக்காளர் குழாம்" குறித்தவற்றுள் சரியானது எது?
Correct answer: (C) The Elected members of both Houses of Parliament and elected members the State Legislature and Union Territories / மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
Question 43
Assertion [A]: Article 51-A does not expressly cast any fundamental duty on the state. Reason [R]: The duty of every citizen of India is the collective duty of the state.
கூற்று [A]: உறுப்பு 51-A ஆனது வெளிப்படையாக அரசிற்கு அடிப்படை கடமைகளை விதிக்கவில்லை. காரணம் [R]: குடிமக்கள் ஒவ்வொருவருக்குமுள்ள கடமைகளின் தொகுப்பே அரசின் கடமைகளாகும்.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி; மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி
Question 44
Which of the following articles on Fundamental Rights is incorrectly paired?
1. Article 12Definition of State
2. Article 21Right to Education
3. Article 34Power of the Parliament to modify the rights
4. Article 35Legislation to give effect to the provisions of the fundamental rights
கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
1. அரசமைப்பு விதி 12அரசின் வரையறை
2. அரசமைப்பு விதி 21கல்வி உரிமை
3. அரசமைப்பு விதி 34அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
4. அரசமைப்பு விதி 35அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்
Correct answer: (C) 2 and 3 only / 2 மற்றும் 3 மட்டும்
Question 45
The word "union" is the "Union of States" in our Constitution was inspired by the
'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற சொற்றொடரில் இடம்பெற்றுள்ள 'ஒன்றியம்' என்ற சொல் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது
Correct answer: (A) Canadian Constitution / கனடா அரசியலமைப்பு
Question 46
Choose the right matches:
1. Power of High Courts to issue certain writsArticle 226
2. Transfer of certain cases to High CourtArticle 178
3. Establishment of a common High Court for two (or) more statesArticle 231
4. Extension of jurisdiction of High Courts to Union TerritoriesArticle 320
பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்க:
1. உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம்விதி 226
2. குறிப்பிட்ட வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுதல்விதி 178
3. இரண்டு அல்லது அதிக மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் அமைத்தல்விதி 231
4. உயர்நீதிமன்றங்களின் அதிகாரப் பரப்பை ஒன்றியப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தல்விதி 320
Correct answer: (C) 1 and 3 only / 1 மற்றும் 3 மட்டும்
Question 47
Consider the following statements, and choose the correct answer: (i) The American Constitution was the first to begin with a preamble (ii) "Preamble" to the Indian Constitution, resembles "Independence of the United States" observes N.A. Palkhivala (iii) Justice M. Hidayatullah, called the preamble, as the Identity Card of the Constitution (iv) A Republic Includes all public offices being opened to every citizen without any discrimination
கீழ்கண்ட கூற்றுக்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க: (i) "முகப்புரையுடன்" துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும் (ii) 'இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார் (iii) நீதிபதி M. இதயத்துல்லா. முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார் (iv) குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்
Correct answer: (B) (i) and (iv) only correct / (i) மற்றும் (iv) மட்டும் சரி
Question 48
State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) was established by Tamil Nadu Government for the development of (i) Large Scale Industries (ii) Medium Scale Industries (iii) Small Scale Industries
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது (i) கனரகத் தொழிற்சாலை (ii) நடுத்தரத் தொழிற்சாலை (iii) சிறு தொழில் தொழிற்சாலை
Correct answer: (A) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டும்
Question 49
The Scheme "Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan" focuses on (i) To improve the socio-economic condition of tribal communities (ii) To empower tribal women and promote gender equality (iii) To provide high quality education for the tribal children
பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் நோக்கமானது (i) பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல் (ii) பழங்குடி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் (iii) பழங்குடி குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குதல்
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 50
From the following in the year 1962 in the wake of Chinese invasion which Act was passed? (i) Anti-Secession Act (ii) Anti-Immigration Act (iii) Anti-Trafficking Act
பின்வருவனவற்றுள் 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பை அடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் எது? (i) பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம் (ii) குடியேற்றத் தடுப்புச் சட்டம் (iii) கடத்தல் தடுப்புச் சட்டம்
Correct answer: (A) (i) only / (i) மட்டும்
Question 51
Assertion [A]: Social Justice basically does not deal with equal social opportunities. Reason [R]: Social Justice is non-proportional to either social equality or social rights.
கூற்று [A]: சமூக நீதி என்பது அடிப்படையில் சமமான சமூக வாய்ப்புகளைக் கையாள்வதில்லை. காரணம் [R]: சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
Correct answer: (D) Both [A] and [R] are false / [A] மற்றும் [R] இரண்டும் தவறானவை
Question 52
Assertion [A]: The overall policy framework for the social sectors in India is laid out by the Central Government. Reason [R]: The State governments have considerable flexibility in designing policies.
கூற்று [A]: இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது. காரணம் [R]: கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A] / கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
Question 53
Choose the right matches
(i) The first communal order for distribution of appointments among various castes1920
(ii) First Backward class commission of Tamilnadu was appointed1970
(iii) Ambasankar CommissionReservation totalling to 69%
(iv) Report on Tamilnadu Backward classes Commission justifying the existing reservation8th July 2011
சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
(i) பல்வேறு சாதியினரிடையே நியமனப் பகிர்வுக்கான முதல் வகுப்புவாத ஆணை1920
(ii) தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையம் நியமிக்கப்பட்டது1970
(iii) அம்பாசங்கர் ஆணையம்மொத்த இட ஒதுக்கீடு 69%
(iv) தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்திய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கை8 ஜூலை 2011
Correct answer: (D) (iii) and (iv) only / (iii) மற்றும் (iv) மட்டும்
Question 54
Match the following schemes with their respective beneficiaries
(a) Babu Jagjivan Ram Chhatravas Yojana1. Scheduled tribes
(b) Atal Vayo Abhyuday Yojana2. Minorities
(c) Pradhan Mantri Jan Vikas Karyakram Yojana3. Scheduled castes
(d) Pradhan Mantri Janjantiya Vikas Mission4. Senior citizens
பின்வரும் திட்டங்களை அந்தந்தத் திட்டங்களின் பயனாளிகளுடன் பொருத்துக
(a) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம்1. பட்டியலினப் பழங்குடியினர்
(b) அடல் வயோ அப்யுத்தே திட்டம்2. சிறுபான்மையினர்
(c) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம் திட்டம்3. பட்டியலினச் சாதிகள்
(d) பிரதம மந்திரி ஜன்ஜான்டியா விகாஸ் இயக்கம்4. மூத்த குடிமக்கள்
Correct answer: (D) 3, 4, 2, 1
Question 55
The Justice Party was established in the year 1916 by whom?
நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?
Correct answer: (A) T.M. Nair and Thiyagaraya Chetty / T.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி
Question 56
Arrange the event in Chronological order (1) South Indian liberal Federation was formed (2) Madras United League was renamed as Madras Dravidian Association (3) Periyar E.V.R. transformed the Justice Party into Dravidar Kazhagam (4) The Ministry of A. Subbarayalu Reddiar fought against the Swarajya Party
நிகழ்வுகளைக் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும் (1) தென்னிந்திய தாராளவாதக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது (2) மெட்ராஸ் யுனைடெட் லீக், மெட்ராஸ் திராவிடர் சங்கம் என மறுபெயரிடப்பட்டது (3) பெரியார் ஈ.வெ.ரா. நீதிக்கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றினார் (4) ஏ. சுப்பராயலு ரெட்டியார் அமைச்சரவை சுயராஜ்யக் கட்சிக்கு எதிராகப் போராடியது
Correct answer: (B) (2), (1), (4), (3)
Question 57
The following statements are about the Tamil Nadu Government's initiatives: Find the correct statements. (a) Allocation of 5 crores to translate all the works of Annal Ambedkar into Tamil through Tamil Development Department (b) 10 crores for establishment of Tamil Parapurai Kazhagam (c) Allocation of 5 crore for creation of separate department of Tamil Literature in JNU, Delhi (d) 30 lakhs financial support for Theera Kaadhal Thirukural Project
தமிழ்நாடு அரசின் முன்முயற்சிகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எவை சரியானவை? (a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு (b) தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு (c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க 5 கோடி ஒதுக்கீடு (d) தீரா காதல் திருக்குறள் திட்டத்திற்கு 30 லட்சம் நிதியுதவி
Correct answer: (B) (a) and (c) only / (a) மற்றும் (c) மட்டும்
Question 58
"Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities. Despite this, there are too many people engaged in low productivity occupations, and a lot more work of better, predictable nature is needed to enable a better life for rural India's inhabitants, especially the young". What can be inferred from the above statement about the economic contribution of rural India to the overall GDP?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல் ஏறக்குறைய மூன்றில் இரண்டுப் பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், அதிக அளவு மக்கள் குறைந்த உற்பத்தி திறனுடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புற மக்கள். குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை, மேம்பட்ட தொழில்களை அளிக்கவல்ல வாய்ப்புக்கள் மூலம் கொடுக்க இயலும். மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார பங்களிப்பு குறித்து என்ன ஊகிக்க முடியும்?
Correct answer: (D) Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activities / இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்குகிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி பண்ணை அல்லாத நடவடிக்கைகளிலிருந்து வருகிறது
Question 59
Which of the following statements are true about "The Chief Minister's Breakfast Scheme"? (i) It has increased student attendance to high schools (ii) Primary school children benefit from the scheme (iii) The scheme has led to improvement in learning skills among children (iv) The scheme is limited to government schools only
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரித்துள்ளது (ii) தொடக்கப்பள்ளி குழந்தைகள் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள் (iii) இந்தத் திட்டம் குழந்தைகளிடையே கற்றல் திறன்களை மேம்படுத்தியுள்ளது (iv) இத்திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது
Correct answer: (B) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
Question 60
Match the four engines of development in the Budget 2025-2026: (a) 1st Engine - 1. MSMEs (b) 2nd Engine - 2. Export (c) 3rd Engine - 3. Agriculture (d) 4th Engine - 4. Investment in people
2025-2026 நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ள நான்கு இயந்திர வகைகளை பொருத்துக: (a) 1வது இயந்திரம் - 1. MSMEs (b) 2வது இயந்திரம் - 2. ஏற்றுமதி (c) 3வது இயந்திரம் - 3. விவசாயம் (d) 4வது இயந்திரம் - 4. மக்களில் முதலீடு
Correct answer: (B) 3, 1, 4, 2
Question 61
Which of the following statement(s) are correct about "Tamil Pudalvan" Scheme? (i) Launched on October 2024 (ii) Improve the financial status of all male students studying in government school after school education (iii) Monthly financial assistance of Rs. 1,000
முதலமைச்சரின் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் குறித்துச் சரியான சொற்றொடரை தெரிவு செய்க. (i) அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டது (ii) பள்ளிப்படிப்புக்குப் பிந்திய அரசுப் பள்ளி மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான நிதி நிலைமையை மேம்படுத்துகிறது (iii) மாத நிதியுதவியாக ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது
Correct answer: (C) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
Question 62
Why Business Firms choose Tamil Nadu as their preferred destination for investment?
வணிக நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டை முதலீட்டிற்கு விருப்பமான இடமாக தேர்வு செய்கின்றன?
Correct answer: (A) The State of the Art Infrastructure / நவீன உள்கட்டமைப்பு
Question 63
Name the scheme, a Tri-ministerial effort which includes Women and Child Development, Health and Family Welfare and Human Resource Development.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம்; சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; மனிதவள மேம்பாடு ஆகியனவற்றை உள்ளடக்கிய மூன்று அமைச்சரவைகளின் முயற்சித் திட்டம் எது?
Correct answer: (C) Beti Bachao Beti Padhao Scheme / பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்
Question 64
Assertion [A]: During 2001 to 2026, for the states Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh, the population is expected to increase by 45-55%. Reason [R]: More than half of demographic transition is expected during that period.
கூற்று [A]: பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள்தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் [R]: பெரும் பகுதியான மக்கள்தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.
Correct answer: (D) Both [A] and [R] are true and R is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
Question 65
Assertion [A]: The demographic dividend is defined as a rise in the rate of Economic growth due to a rising share of working age people in a population. Reason [R]: India is in the midst of process where it faces the window of opportunity created by Demographic Dividend.
கூற்று [A]: மக்கள்தொகைப் பிளவு என்பது ஒரு மக்கள்தொகையில் உழைக்கும் வயதுடைய மக்களின் பங்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பாக வரையறுக்கப்படுகிறது. காரணம் [R]: மக்கள்தொகைப் பிளவுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் சாளரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் நடுவில் இந்தியா உள்ளது.
Correct answer: (D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct / [A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி
Question 66
Match with the schemes and its main focus:
(a) PMGSY1. Focus on rural youth between the age of 15 to 35 years from poor families
(b) DDUGKY2. Sustainable livelihood opportunities
(c) NRLM3. Rural connectivity
(d) MGNREGA4. Livelihood security in rural areas
திட்டங்களை அதன் முக்கிய நோக்கத்துடன் பொருத்தவும்:
(a) PMGSY1. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல்
(b) DDUGKY2. நிலையான வாழ்வாதார வாய்ப்புகள்
(c) NRLM3. கிராமப்புற இணைப்பு
(d) MGNREGA4. கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு
Correct answer: (B) 3, 1, 2, 4
Question 67
Match the following: Water Conservation Programmes and States
StatesProgrammes
(a) Andhra Pradesh1. Jal Jeevan Hariyali
(b) Bihar2. Neeru Chettu
(c) Gujarat3. Jal Hi Jeevan Hai
(d) Haryana4. Sujalam Sufalam Jal Sanchay Abhiyan
பொருத்துக: நீர் பாதுகாப்புத் திட்டமும் மாநிலங்களும்
மாநிலங்கள்திட்டங்கள்
(a) ஆந்திரப் பிரதேசம்1. ஜல் ஜீவன் ஹரியாலி
(b) பீகார்2. நீரு -சீட்டூ
(c) குஜராத்3. ஜல் ஹய் ஜீவன் ஹாய்
(d) அரியானா4. சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம்
Correct answer: (A) 2, 1, 4, 3
Question 68
Assertion [A]: There has been a significant rise in the percentage of labour force engaged in Industrial sector during 1990s and 2000s. Reason [R]: There has been a significant rise in employment in the construction sector between 1991 and 2011.
கூற்று [A]: 1990கள் மற்றும் 2000களில் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. காரணம் [R]: 1991 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
Correct answer: (B) Both [A] and R are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமாகும்
Question 69
Which of the following is not the function of the Finance Commission in India?
கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக் குழுவின் பணி இல்லை?
Correct answer: (A) Preparation of Union budget / மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது
Question 70
Which of the following statement is true? (1) Increasing Bank rate policy reduces borrowing among businessmen (2) To control inflation RBI increases bank rate policy (3) Bank rate policy helps to control increasing price of goods
கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது? (1) உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது (2) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது (3) வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
Correct answer: (B) Statement (1) and (2) are correct / கூற்று (1) மற்றும் (2) சரி
Question 71
Match the following:
(a) Jawaharlal Nehru1. People's plan
(b) S.N. Agarwal2. Sarvodhaya plan
(c) J.P. Narayan3. Gandhian plan
(d) M.N. Roy4. National Planning Commission
பொருத்துக:
(a) ஜவஹர்லால் நேரு1. மக்கள் திட்டம்
(b) S.N. அகர்வால்2. சர்வோதயத் திட்டம்
(c) J.P. நாராயண்3. காந்தியத் திட்டம்
(d) M.N.ராய்4. தேசியத் திட்டக் குழு
Correct answer: (A) 4, 3, 2, 1
Question 72
Achieved growth rate of Eleventh Five Year plan is
11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அடைந்த வளர்ச்சி விகிதம்
Correct answer: (A) 8.2%
Question 73
According to Ragner Nurkse the starting point and continuation for development lies in
ராக்னர் நுர்க்ஸ் அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும் அவற்றைத் தொடருவதற்கான வழிமுறை என்பது ஆகும்
Correct answer: (B) Increasing the rate of capital formation / மூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது
Question 74
When one sees the person who taught not forgetting what they taught is dealt in the chapter
'தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்டாமை' - என்ற பொருளுடைய அதிகாரம் எது?
Correct answer: (D) Benignity (perspective) / கண்ணோட்டம்
Question 75
"Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Iladha Iyalpu". What is the meaning of the word "Azhukkaaru"?
"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு" எனும் குறளில் வரும் 'அழுக்காறு' என்பதன் பொருள் யாது?
Correct answer: (C) Jealous / பொறாமை
Question 76
Pick out the incorrectly paired from the following:
(1) 1962The Madras State (Alteration of Name) Act was passed by the Parliament
(2) 1967Perarignar Anna Sworn in as the Chief Minister of Tamil Nadu
(3) 1968Perarignar Anna was elected to the Rajya Sabha
(4) 1969The Madras State (Alteration of Name) Act came into force
பின்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்
(1) 1962சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
(2) 1967தமிழக முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா பதவியேற்றார்
(3) 1968பேரறிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
(4) 1969சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது
Correct answer: (C) (1) and (3) are incorrect / (1) மற்றும் (3) தவறானவை
Question 77
Find out the rightly matched pair/s from the following and choose the correct answer from the code given:
(1) 1925Periyar EVR started the periodical 'Kudi Arasu'
(2) 1928The English periodical 'Revolt' was started
(3) 1934Periyar published 'Viduthalai' as a Tamil Daily Newspaper
(4) 1937Periyar brought out the Tamil Weekly 'Pagutharivu'
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றிலிருந்து சரியாகப் பொருந்திய இணைகளைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்ட குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
(1) 1925பெரியார் ஈ.வெ.ரா. 'குடி அரசு' என்ற பருவ இதழைத் தொடங்கினார்
(2) 1928ஆங்கில பருவ இதழ் 'ரிவோல்ட்' தொடங்கப்பட்டது
(3) 1934பெரியார் 'விடுதலை' யைத் தமிழ் நாளிதழாக வெளியிட்டார்
(4) 1937பெரியார் 'பகுத்தறிவு' என்ற தமிழ்வார இதழை வெளியிட்டார்
Correct answer: (A) Only (1) and (2) are correct / (1) மற்றும் (2) மட்டுமே சரியானவை
Question 78
Assertion [A]: Tamilnadu Women Conference held 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar. Reason [R]: This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.
கூற்று [A]: தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைப்பெற்றது. காரணம் [R]: இந்த மாநாட்டில் சாதிய வேற்றுமையை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்குப் "பெரியார்" பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Correct answer: (D) [A] is true and [R] is true / கூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி
Question 79
Match correctly books/journals with authors
(a) The Mirror of the year1. A.P. Patro
(b) History of the Justice Party2. N.S. Elango
(c) From Sir Theagarayar to Dr. Kalaignar3. Muthusami Pillai
(d) Justice Movement4. A.R. Mudaliar
ஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்தவும்
(a) தி மிர்ரர் ஆப் தி இயர்1. A.P. பேட்ரோ
(b) ஹிஸ்ட்ரி ஆப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி2. N.S. இளங்கோ
(c) சர் தியாகராயரிலிருந்து Dr. கலைஞர் வரை3. முத்துசாமி பிள்ளை
(d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட்4. A.R. முதலியார்
Correct answer: (C) 4, 3, 2, 1
Question 80
The members of the Justice Party were sent to meet Joint select committee in London for finalise Government India Act in 1919 (i) Arcot Ramasamy Mudaliyar (ii) Koka Apparao (iii) T.A. Ramalingam (iv) S.K. Thulasiram
1919 ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிக்கட்சி உறுப்பினர்கள் (i) ஆற்காடு இராமசாமி முதலியார் (ii) கோகா அப்பாராவ் (iii) டி.ஏ. ராமலிங்கம் (iv) எஸ்.கே. துளசிராம்
Correct answer: (D) (i), (ii), (iv)
Question 81
Choose the right matches among type:
(1) Krishnabai NimbkarMadras Youth League
(2) Rukmini LakshmipathiPresident of the Madras Women's Students Organisation
(3) Antony AmmalPankaja Textile Mill
(4) ManjubhashiniActing President of the Tamil Nadu Congress Committee during Quit India Movement
சரியான பொருத்த வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
(1) கிருஷ்ணாபாய் நிம்கர்மதராஸ் இளைஞர் சங்கம்
(2) ருக்மினி லக்ஷ்மிபதிமதராஸ் மகளிர் மாணவர் அமைப்பின் தலைவர்
(3) அந்தோனி அம்மாள்பங்கஜா ஜவுளி ஆலை
(4) மஞ்ஜுபாஷினிதமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் (பொறுப்பு) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது
Correct answer: (A) (1) and (3) are correct / (1) மற்றும் (3) சரியானவை
Question 82
Assertion [A]: The company asked the Collector of Ramnad to Summon Kattabomman to his office at Ramnad. Reason [R]: Kattabomman was asked to meet the Collector in connection with the arrears of tribute that he owed to the company.
கூற்று [A]: ஆங்கிலேய கம்பெனியாளர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மனை இராமநாதபுரத்து ஆட்சியாளரின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டார். காரணம் [R]: ஆங்கிலேய கம்பெனியாருக்கு கட்ட வேண்டிய கப்பம் நிலுவையில் இருப்பதால் ஆட்சியாளரை சந்திக்குமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
Correct answer: (C) Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A] / [A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் ஆகும்
Question 83
Arrange the following events in chronological order: (1) Salt Satyagraha (2) Swadeshi Movement (3) Quit India Movement (4) Non Co-operation Movement
பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படுத்துக: (1) உப்பு சத்தியாகிரகம் (2) சுதேசி இயக்கம் (3) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (4) ஒத்துழையாமை இயக்கம்
Correct answer: (D) (2), (4), (1), (3)
Question 84
Identify the person who uttered that, "Nothing can be done without shedding of blood. Japan was prepared to sacrifice 20,000 men and gained a victory over Russia. If 15 crores of Indians do the same, "Swaraj will be obtained".
'இரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், "சுயராஜ்யம்" கிடைக்கும் என்று கூறிய நபரை அடையாளம் காணவும்.
Correct answer: (B) Subramania Siva / சுப்ரமணிய சிவா
Question 85
Choose the right matches among type:
1. PorpanaikottaiA sangam age fort
2. Iron KnifePallavaram
3. Merchant Guild InscriptionMayiladumparai
4. SarcophagusMarungur
பின்வருபவைகளில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க:
1. பொற்பனைக்கோட்டைஓர் சங்க கால கோட்டை
2. இரும்புக் கத்திபல்லாவரம்
3. வணிகக்குழு கல்வெட்டுமயிலாடும்பாறை
4. கற்சவபெட்டிமருங்கூர்
Correct answer: (A) 1 and 3 are correct / 1 மற்றும் 3 சரியானவை
Question 86
Arrange the following with reference to different stages of human development: 1. The Nomadic stage 2. The pastoral stage 3. The hunting stage 4. The agricultural stage
மனித வளர்ச்சியில் பின்வரும் வெவ்வேறு நிலைகளை ஒழுங்கமைக்கவும்: 1. நாடோடி நிலை 2. ஆயர் நிலை 3. வேடன் நிலை 4. விவசாய நிலை
Correct answer: (C) 3, 1, 2, 4
Question 87
'The Ocean of birth swims, swims and does not join the Lord' - What is the philosophy of this Kural?
'பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தார்' -இக்குறள் உணர்த்தும் தத்துவம் என்ன?
Correct answer: (C) Surrender Philosophy / சரணாகதி தத்துவம்
Question 88
Thirukkural Uraiasiriarkal: (i) Pariperumal (ii) Dharumar (iii) Ki.Va.Ja (iv) Dhandapani Thesigar
திருக்குறள் உரையாசிரியர்கள் (i) பரிப்பெருமாள் (ii) தருமர் (iii) கி.வ.ஜா. (iv) தண்டபாணி தேசிகர்
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 89
Assertion [A]: That is the land or country which forces free from fierce famine, wasting plague and ravages of enemies Reason [R]: Poets consider it their primary duty to wish the country and wish for the development of its people. They want all countries to be special, not just their own.
கூற்று [A]: "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு" காரணம் [R]: நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாகக் கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடும் சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.
Correct answer: (C) Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
Question 90
Which of the following statements are true? 1. All the religions were accepted and appreciated in Thirukkural 2. Every religions ratified the views of Thiruvalluvar 3. Valluvar said that men with high principles deserved to live 4. He didn't believe morality
சரியான தொடரைக் கண்டறிக: 1. வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளைப் போற்றினார் 2. திருவள்ளுவர் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று சமயங்கள் சான்று காட்டின 3. உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டுமென்றார் 4. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கையற்றவர்
Correct answer: (C) 2 and 4 only correct / 2 மற்றும் 4 மட்டும் சரி
Question 91
Arrange the following in order: 1. The goodness of the help to domestic life 2. The possession of love 3. Domestic life 4. The obtaining of sons
வரிசைப்படுத்துக 1. வாழ்க்கை துணை நலம் 2. அன்புடைமை 3. இல்வாழ்க்கை 4. புதல்வரைப் பெறுதல்
Correct answer: (A) 3, 1, 4, 2
Question 92
Which book features the series "Pagaivar pull Aarga"?
'பகைவர் புல் ஆர்க' எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்
Correct answer: (C) Aingkurunuru / ஐங்குறுநூறு
Question 93
Who gave special importance to Village Administration?
கிராம நிருவாகத்துக்குச் சிறப்பிடம் கொடுத்தோர்
Correct answer: (B) Cholas / சோழர்
Question 94
Assertion [A]: Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend on prizes. Reason [R]: When poets who make a living out of their prizes get prizes of low value / below their expectation; they reject it.
கூற்று [A]: சிலரே புலவர்களில் பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர். காரணம் [R]: பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை துச்சமென மதித்து மறுத்தனர்.
Correct answer: (B) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct / [A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமல்ல
Question 95
One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it in
ஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர், பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர், எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகும்
Correct answer: (C) 43 7/11 hours / 43 7/11 மணி நேரம்
Question 96
The diagonal of a rectangle is thrice its smaller side. The ratio of the length to the breadth of the rectangle is
ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
Correct answer: (D) 2√2:1
Question 97
If x:7.5 = 8:y = 7:17.5 find x:y
X:7.5 = 8:y = 7:17.5 எனில் x:y காண்க
Correct answer: (C) 3:20
Question 98
If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5:3 then Q's share is
ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5:3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
Correct answer: (B) 600
Question 99
L.C.M. of (2x² - 3xy)², (4x - 6y)³ and (8x³ - 27y³) is?
(2x² - 3xy)², (4x - 6y)³ மற்றும் (8x³ - 27y³) ன் L.C.M.
Correct answer: (B) 2³x²(2x - 3y)³(4x² + 6xy + 9y²)
Question 100
Peter got 30% of the maximum marks in an examination and failed by 10 marks. However, Paul who took the same examination got 40% of the total marks and got 15 marks more than the passing marks. What were the passing marks in the examination?
பீட்டர் என்பவர் ஒரு தேர்வின் அதிக மதிப்பெண்களில் 30% பெற்று, 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். மேலும், பால் என்பவர் அதே தேர்வினை எழுதி, மொத்த மதிப்பெண்களில் 40% பெற்று, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணைக் காட்டிலும் 15 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். எனில் அந்தத் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் என்ன?
Correct answer: (C) 85
Question 101
Akila scored 80% of marks in an examination. If her score was 576 marks then find the maximum marks of the examination
அகிலா தேர்வில் 80% மதிப்பெண்களை பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில் அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்ணை காண்க.
Correct answer: (A) 720
Question 102
Find the next term 0.5, 0.6, 1.5, 4, 8.9,
அடுத்த உறுப்பு காண். 0.5, 0.6, 1.5, 4, 8.9,
Correct answer: (D) 17.0
Question 103
A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?
A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த தினம் சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
Correct answer: (D) F is 20 years old / F என்பவரின் வயது 20
Question 104
In a dice, if 2 is adjacent to 3, 5 and 6, then which of the following is necessarily true?
ஒரு பகடையில் 2க்கு அருகில் 3, 5 மற்றும் 6 உள்ளது எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் உறுதியான உண்மை எது?
Correct answer: (B) 1 is adjacent to 4 / 1 க்கு அருகே 4 உள்ளது
Question 105
Five girls are sitting in a row. Rosy is not adjacent to Sivanandhini and Abi. Anuradha is not adjacent to Sivanandhini. Rosy is adjacent to Monika. Monika is at the middle in the row. Then, Anuradha is adjacent to whom out of the following?
ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரோஸி என்பவர் சிவநந்தினி மற்றும் அபிக்கு அருகில் இல்லை. அனுராதா சிவநந்தினிக்கு அருகில் இல்லை. ரோஸி மோனிகாவிற்கு அருகில் இருக்கிறாள். மோனிகா வரிசையில் நடுவில் இருக்கிறாள். பின்னர், அனுராதா பின்வருவனவற்றில் யாருக்கு அருகில் இருக்கிறாள்?
Correct answer: (A) Rosy / ரோஸி
Question 106
One Rutherford is equal to
ஒரு ரூதர்ஃபோர்டு அளவு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Correct answer: (C) 10⁸ disintegrations per second / ஒரு செகண்டு நேரத்தில் 10⁸ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
Question 107
Kessler syndrome refers to
கேஸ்லர் சின்ட்ரோம் எனப்படுவது
Correct answer: (C) Accumulation satellite fragments, spent rocket stages and other discarded materials in space / விண்வெளியில் குவிந்துள்ள செயற்கை கோள்கள், ராக்கெட் மற்றும் மற்ற கழிவுகளால் ஏற்படும் விளைவு
Question 108
Assertion [A]: University students think more critically about the new subjects and situation they encounter. Reason [R]: University professors encourage conceptual learning and understanding of the new subject concepts at the primary levels.
கூற்று [A]: புதிய பாடங்கள் மற்றும் புதிய சூழ்நிலைகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் பொழுது பல்கலைக்கழக மாணவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திக்கின்றனர். காரணம் [R]: பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கருத்துசார் கற்றல் மற்றும் ஆரம்ப நிலையில் புதிய பாடங்களைக் கருத்துச் சார்ந்து புரிந்து கொண்டு கற்க ஊக்குவிக்கின்றனர்.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A] / கூற்று [A] வும் காரணம் [R] ம் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கு சரியான விளக்கமாகும்
Question 109
Match the following and find out the correct sequence.
(a) Abiotic component1. The crushed cane after extraction of juice
(b) Bagasse2. Animals that feed on other animals
(c) Carcinogen3. Non-living component in an eco-system
(d) Carnivorous4. Toxic organic compound causing cancer
கீழ்கண்டவற்றை பொருத்துக மற்றும் சரியான வரிசை முறையை காண்க.
(a) உயிரற்ற பொருள்1. சாறு பிரித்தெடுத்த பிறகு நொறுக்கப்பட்ட கரும்பு
(b) கரும்புச் சக்கை2. மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகள்
(c) கார்ஸினோஜன்3. சூழலியல் மண்டலத்தில் உள்ள உயிரற்ற கூறு
(d) மாமிசாகாரம்4. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக் கரிம கலவை
Correct answer: (C) 3 1 4 2
Question 110
Assertion [A]: Overloading of Nitrogen in the environment can cause an imbalance to the natural nitrogen cycle. Reason [R]: Nitrogen becomes a pollutant when it escapes into the environment and reacts with other organic compounds.
கூற்று [A]: சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது. காரணம் [R]: நைட்ரஜன் சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்
Question 111
Which of the following caused by earthquake? (i) Lightning (ii) Landslide (iii) Thundering (iv) Tsunami (v) Floods
பின்வருவனவற்றில் பூகம்பத்தால் ஏற்படுபவை எவை? (i) மின்னல் (ii) நிலச்சரிவு (iii) இடியோசை (iv) சுனாமி (v) வெள்ளம்
Correct answer: (A) (ii), (iv) and (v) / (ii), (iv) மற்றும் (v)
Question 112
Match the following:
Column I (Waste Disposal Method)Column II (Process)
(a) Sanitary landfills1. Burning of waste
(b) Incineration2. Deposit the refuse and compost it with bulldozers
(c) Pulverizing3. Combustion in absence of oxygen
(d) Pyrolysis4. Spreading the waste on fields
கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
நெடுவரிசை I (கழிவு அகற்றல் முறை)நெடுவரிசை II (செயல் முறை)
(a) திண்மக்கழிவு நிரப்புதல்1. கழிவுகளை எரித்தல்
(b) எரித்தல்2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல்
(c) தூளாக்குதல்3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல்
(d) வெப்பச்சிதைவு4. கழிவுகளை நிலங்களில் பரப்பிவிடுதல்
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 113
Choose the incorrect answer of forest types and their species in India.
(1) Evergreen forestRose wood, Toon, Ebony, Gurjan
(2) Monsoon forestSilver fir, Walnut, Deodar, White Willow
(3) Tropical forestChir, Blue Pine, Spruce, Cypress
இந்தியாவில் உள்ள வன வகைகள் மற்றும் அவற்றின் இனங்கள் பற்றிய தவறான பதிலைத் தேர்வு செய்யவும்.
(1) பசுமை மாறாக் காடுரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
(2) பருவமழைக் காடுவெள்ளி ஃபிர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
(3) பூமத்திய ரேகை காடுகள்சிர், ப்ளு பைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
Correct answer: (C) (2) only / (2) மட்டும்
Question 114
Consider the statements on monsoon and choose the right answer (i) Most monsoon rainfall is caused by the depression over Arabian Sea and Bay of Bengal (ii) The amount of rainfall increases with increasing distance from the sea shore (iii) The eastern coastal area of Tamil Nadu remains dry during South West monsoon
பருவக்காற்று பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு (i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது (ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது (iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்
Correct answer: (B) (i) and (iii) are true / (i) மற்றும் (iii) சரியானவை
Question 115
Match correctly the Nationalist Papers and its Authors:
(a) Subramaniya Bharathi1. Swadesamithran
(b) Mrs. Annie Besant2. Madras Mahajana Sabha
(c) G. Subramanya Iyer3. India
(d) P. Anandacharlu4. New India
தேசிய நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியரைப் பொருத்துக:
(a) சுப்பிரமணிய பாரதியார்1. சுதேசமித்திரன்
(b) Mrs. அன்னிபெசன்ட்2. சென்னை மகாஜன சபா
(c) G.சுப்பிரமணிய ஐயர்3. இந்தியா
(d) P. ஆனந்தசார்லு4. புதிய இந்தியா
Correct answer: (C) 3 4 1 2
Question 116
Match the following:
(a) Home Rule Movement1. S. Ambujammal
(b) Kudi Arasu2. Annie Besant
(c) Women's Swadeshi League3. Muthulakshmi Reddy
(d) Abolition of Devadasi system4. E.V. Ramasamy
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
(a) சுயாட்சி இயக்கம்1. S.அம்புஜ அம்மாள்
(b) குடியரசு2. அன்னி பெசன்ட்
(c) பெண்கள் சுதேசி சங்கம்3. முத்துலட்சுமி ரெட்டி
(d) தேவதாசி முறை ஒழிப்பு4. ஈ.வெ. ராமசாமி
Correct answer: (A) 2 4 1 3
Question 117
Arrange the Conquests of Iltutmish in Chronological order: (1) Bengal (2) Bilsa Fort (3) Gwalior (4) Ranthambhor
இல்டுமிஷின் வெற்றிகளைக் காலவரிசைப்படுத்துக. (1) வங்காளம் (2) பில்சா கோட்டை (3) குவாலியர் (4) ரான்தம்போர்
Correct answer: (C) (4), (1), (3), (2)
Question 118
Which of the following statements are true about the Houses at Mohenjo-daro? (i) It was discovered in Montgomery District of Punjab (ii) Mohenjo-daro the houses were made of Kiln-burnt bricks (iii) Kiln-burnt bricks in large quantities were used for drains
மொஹஞ்சதாரோவிலுள்ள வீடுகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) இது பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது (ii) மொஹஞ்சதாரோவில் வீடுகள் சுட்ட செங்கற்களால் ஆனவை (iii) சுட்ட செங்கற்கள் அதிக அளவில் வடிகால்களுக்குப் பயன்படுத்தப்பட்டன
Correct answer: (C) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
Question 119
Pick out the incorrectly paired from the following:
(1) Smoke and Ashes: Opium's Hidden HistoriesAmitav Ghosh
(2) The Golden RoadWilliam Dalrymple
(3) Twilight Prisoners: The Rise of the Hindu Right and the Decline of IndiaMinakshi Dewan
(4) The Final Farewell: Understanding the Last Rites and Rituals of India's Major FaithsSiddhartha Deb
கீழ்கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
(1) சுமோக் அண்ட் ஆஷஸ் ஒப்பியம்ஸ் ஹிடன் ஹிஸ்டர்ஸ்அமிதவ் கோஷ்
(2) தி கோல்டன் ரோடுவில்லியம் டேல்ரிம்பிள்
(3) ட்விலைட் பிரிஸனர்ஸ் : த ரைஸ் ஆப் த இந்து ரைட் அண்ட் த டிக்ளைன் ஆப் இந்தியாமீனாக்சி திவான்
(4) த பைனல் ஃபெயர்வெல்: அன்டர்ஸ்டேன்டிங் த லாஸ்ட் ரிட்ஸ் அன்ட் ரிச்சுவல்ஸ் ஆப் இந்தியாஸ் மேஜர் ஃபெய்த்ஸ்சித்தார்த்த தேப்
Correct answer: (D) (3) and (4) are incorrect / (3) மற்றும் (4) தவறானவை
Question 120
Assertion [A]: In 1946, the Muslim League withdrew its acceptance to the Cabinet Mission Plan. Reason [R]: The Muslim League joined the interim government formed in 1946.
வலியுறுத்தல் [A]: 1946இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை ஏற்றுக் கொண்டதை விலக்கிக் கொண்டது. காரணம் [R]: 1946இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் முஸ்லிம் லீக் இணைந்தது.
Correct answer: (D) [A] is false, but [R] is true / [A] தவறு, ஆனால் [R] சரி
Question 121
Assertion [A]: DMK played a leading role in the Anti-Hindi campaign. Reason [R]: It urged people to write under the Tamil identity.
கூற்று [A]: தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டது. காரணம் [R]: தி.மு.க. மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வற்புறுத்தியது.
Correct answer: (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது
Question 122
On 24th September 1932, Poona pact was signed between
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்
Correct answer: (C) Gandhi / காந்தி -Ambedkar / அம்பேத்கர்
Question 123
Choose the right matches:
(1) Ferosha MethaDisciple of Gokhale
(2) Gopala Krishna GokhaleServants of India Society
(3) Dadabhai NaorojiDrain Theory
(4) S.N. BanerjeeSafety Valve Theory
சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்க
(1) பிரோஷா மேத்தாகோகலேயின் சீடன்
(2) கோபால கிருஷ்ண கோகலேஇந்திய ஊழியர்களின் சங்கம்
(3) தாதாபாய் நௌரோஜிவடிகால் கொள்கை
(4) S.N. பானர்ஜிபாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு
Correct answer: (A) (2) and (3) are correct / (2) மற்றும் (3) சரி
Question 124
Match correctly the Excavated materials with their corresponding Excavation place:
(a) Shell Bangles1. Azhagankulam
(b) Ring Well2. Thulukkarpatti
(c) Roman Coins3. Kezhadi
(d) Silver Stamps4. Vembakottai
அகழாய்வில் கிடைத்தப் பொருட்களையும், அகழாய்வு செய்யப்பட்ட இடத்தையும் பொருத்துக.
(a) சங்கு வளையல்கள்1. அழகன்குளம்
(b) உறை கிணறு2. துலுக்கர்பட்டி
(c) ரோம் நாணயங்கள்3. கீழடி
(d) வெள்ளி அச்சு4. வெம்பக்கோட்டை
Correct answer: (B) 4 3 1 2
Question 125
Assertion [A]: Muhammad Ghur attacked the Fortress of Tabarhind, a strategic point for the Chauhans of Ajmer. Reason [R]: The Ruler of Ajmer Prithvi Raj Chauhan marched to Tabarhinda and faced the invader in the first Battle of Tarain (1191)
கூற்று [A]: அஜ்மீர் சௌஹான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார். காரணம் [R]: அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌஹான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரெய்ன் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.
Correct answer: (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் உண்மை. மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்
Question 126
Which of the following pairs are correctly matched?
Right to PrivacyJustice K.S. Puttaswamy Rtd. Vs. Union of India
Passive EuthanesiaCommon cause (Regd. Society) Vs. Union of India
Right to VoteMinistry of Defence Vs. Babita Puniya
NOTA in ElectionsSwapnil Tripathi Vs. Supreme Court of India
பின்வரும் இணைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
அந்தரங்க உரிமைஜஸ்டிஸ் கே.ஏ. புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
செயலற்ற கருணைக்கொலைகாமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
வாக்களிக்கும் உரிமைபாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா பூனியா
தேர்தல்களில் நோட்டாஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்சநீதிமன்றம்
Correct answer: (B) 1 and 2 are correct / 1 மற்றும் 2 சரி
Question 127
With reference to the functional items placed within the purview of municipalities, consider the following. (i) Regulation of slaughter houses and tanneries (ii) Safeguarding the interests of weaker sections of society (iii) Small-scale industries, including food processing industries (iv) Technical training and vocational education
நகராட்சிகளின் எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தலைப்புகளைப் பொறுத்தவரை, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க. (i) இறைச்சிக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல் (ii) சமூகத்தின் பலவீனமான பிரிவின் நலன்களைப் பாதுகாத்தல் (iii) உணவு பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்ட சிறு அளவிலான தொழில்கள் (iv) தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி
Correct answer: (D) (i) and (ii) are correct / (i) மற்றும் (ii) சரியானவை
Question 128
The Union Executive consists of the 1. Council of Ministers 2. President of India 3. Central Secretariat 4. Vice President
மத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது 1. அமைச்சரவை குழு 2. குடியரசு தலைவர் 3. மத்திய செயலகம் 4. குடியரசு துணை தலைவர்
Correct answer: (C) 1, 2 and 4 only / 1, 2 மற்றும் 4 மட்டும்
Question 129
What is the definition of a child under the POCSO Act?
POCSO சட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் வரையறை என்ன?
Correct answer: (C) Below 18 years of age / 18 வயதிற்கு உட்பட்டவர்கள்
Question 130
Assertion [A]: Every Citizen shall have the right to move freely throughout the Territory of India or to reside and settle in any part of the country. Reason [R]: This Right shall be subject to restrictions imposed by the state in the interests of the general public or for the protection of the interests of any Scheduled Caste.
கூற்று [A]: எந்த ஒரு குடிமகனுக்கும், இந்தியாவின் நிலப்பகுதியில் சுதந்திரமாக செல்லவும், அல்லது குடியமரவும், வசிக்கவும் உரிமை உண்டு. காரணம் [R]: இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
Correct answer: (A) [A] is true but [R] is false / [A] சரி, ஆனால் [R] தவறு
Question 131
Which of the following statements is incorrect about India's Act East Policy?
பின்வரும் கூற்றுகளில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் தவறான ஒன்றாகும்
Correct answer: (A) This policy promotes proactive diplomacy with political and military intervention to curb insurgency in the Asia-Pacific region / ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கிளர்ச்சியை கட்டுப்படுத்த அரசியல் மற்றும் இராணுவ தலையீட்டைக் கொண்ட முன்முயற்சி ராஜதந்திரத்தை ஊக்குவிக்கிறது
Question 132
The objective of the National Human Rights Commission is: (i) To strengthen the institutional arrangements through which human rights issues could be addressed in their entirety in a more focussed manner (ii) To look into allegations of excesses, independently of the government (iii) To contrast and strengthen the efforts that have already been made in this direction
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கங்கள்: (i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் (ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல் (iii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
Correct answer: (C) (i) and (ii) are correct / (i) மற்றும் (ii) சரி
Question 133
Match the following (Women Empowerment)
(a) Medical Termination of Pregnancy Act1. 2013
(b) National Food Security Act2. 2016
(c) Rights of persons with Disabilities Act3. 2017
(d) Mental Health Care Act4. 1971
கீழ்கண்டவற்றைப் பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்)
(a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம்1. 2013
(b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்2. 2016
(c) மாற்றுத்திறனுடையோருக்கான உரிமைகள் சட்டம்3. 2017
(d) மனநல பராமரிப்பு சட்டம்4. 1971
Correct answer: (B) 4 1 2 3
Question 134
Which of the following is correctly pair/pairs?
1. Fifth Law CommissionK.V.K. Sundaram
2. Tenth Law CommissionJustice K.K. Mathew
3. Nineteenth Law CommissionJustice M. Jagannadha Rao
4. Twentieth Law CommissionB.S. Chauhan
பின்வருவனவற்றில் எது/எவை சரியான இணை/இணைகள்?
1. ஐந்தாவது சட்ட ஆணையம்கே.வி.கே. சுந்தரம்
2. பத்தாவது சட்ட ஆணையம்நீதியரசர் கே.கே. மேத்யூ
3. பத்தொன்பதாம் சட்ட ஆணையம்நீதியரசர் எம். ஜகன்னாத ராவ்
4. இருபதாவது சட்ட ஆணையம்பி.எஸ். சௌகான்
Correct answer: (B) 1 and 2 / 1 மற்றும் 2
Question 135
Assertion [A]: Art. 121 prohibits any discussion in parliament with respect to the conduct of any Judge of the Supreme Court or of a High Court in the discharge of his duties. Reason [R]: The objective of Art. 121 is to ensure the independence and dignity of the Judiciary.
கூற்று [A]: அரசமைப்பின் பிரிவு 121 ஆனது உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிப் பணியாற்றுகின்ற போது அவர்களின் நடத்தை குறித்து, பாராளுமன்றம் விவாதிப்பதைத் தடை செய்கிறது. காரணம் [R]: பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A] / கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்
Question 136
Assertion [A]: Parliament has exclusive power to make any law with respect to any matter not enumerated in the concurrent list or state list Reason [R]: VIII schedule of the constitution contains union list, state list and concurrent list
கூற்று [A]: பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் ஆகியவற்றில் கூறப்படாத இனங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தினைப் பாராளுமன்றம் கொண்டுள்ளது. காரணம் [R]: அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
Correct answer: (A) [A] is true, but [R] is false / [A] சரி, ஆனால் [R] தவறு
Question 137
Match the Article:
(a) Audit and Accounts of Panchayats1. 243 A
(b) Reservation of seats2. 243 J
(c) Elections to the Panchayats3. 243 D
(d) Gram Sabha4. 243 K
சட்ட விதிகளைப் பொருத்துக:
(a) தணிக்கை மற்றும் கணக்கு பஞ்சாயத்து விதி1. 243 A
(b) இட ஒதுக்கீடு தொடர்புடைய பஞ்சாயத்து விதி2. 243 J
(c) பஞ்சாயத்துத் தேர்தல் விதி3. 243 D
(d) கிராம சபை விதி4. 243 K
Correct answer: (A) 2 3 4 1
Question 138
The False statements about the Legislative powers of the President are (i) The Punchhi Commission has recommended that whenever any state bill is sent to the President for his assent under Article 201, he should give his assent within a period of fifteen days (ii) Article 111 of the constitution gives details regarding the President's role in the law making (iii) The President is given the right to promulgate ordinances under Article 123
இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த தவறான கூற்றுகளானது (i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைவும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்ச் ஆணையம் பரிந்துரைத்தது (ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது (iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது
Correct answer: (A) (i) only / (i) மட்டும்
Question 139
Match the following:
(a) Justice should not be denied to anyone based on the grounds of Economic (or) financial setbacks1. Article 42
(b) Establishment of Gram Panchayat by providing needful powers to these self-governing units2. Article 43
(c) Favorable, Humanitarian situation to work and to provide maternity benefits to women3. Article 39 A
(d) To ensure work, pay, favourable climate to Agricultural (or) Skillful Labourers4. Article 40
சரியானவற்றைப் பொருத்துக:
(a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது1. உறுப்பு 42
(b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும் அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது2. உறுப்பு 43
(c) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது3. உறுப்பு 39 A
(d) வேளாண் அல்லது தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்வூதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது4. உறுப்பு 40
Correct answer: (C) 3 4 1 2
Question 140
Which of the following statements is true about Article 21? (i) This article reminds us of one of the famous clauses in Magna Carta (ii) The constitution does not confer right to die (iii) Custodial death is perhaps one of the worst crimes in a civilized society governed by Administrative Law
அரசியலமைப்பின் பிரிவு 21 ஐப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது (ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை (iii) நிர்வாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்
Correct answer: (B) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டும்
Question 141
Assertion [A]: Considering apart from, citizenship among in India, there are two types of Aliens, Friendly Aliens and Enemy Aliens. Reason [R]: The citizens of enemy Aliens also enjoy protection against arrest and detention under Article 22.
கூற்று [A]: இந்தியாவில் இருக்கும் குடியுரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர். காரணம் [R]: எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசுகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.
Correct answer: (C) [A] is correct; [R] is false / [A] என்பது சரி, [R] என்பது தவறு
Question 142
Match the following parts of the Indian Constitution with their corresponding subject-matter.
(a) Part XIV1. Elections
(b) Part XV2. Amendment of the Constitution
(c) Part XVIII3. Services under the Union and States
(d) Part XX4. Emergency provisions
கீழ்க்கண்ட இந்திய அரசமைப்பின் பகுதிகளை அவற்றின் துறைசார் பொருளுடன் பொருத்துக:
(a) பகுதி XIV1. தேர்தல்கள்
(b) பகுதி XV2. அரசமைப்பு சட்ட திருத்தம்
(c) பகுதி XVIII3. மத்திய மற்றும் மாநிலப் பணிகள்
(d) பகுதி XX4. நெருக்கடி நிலை அம்சங்கள்
Correct answer: (A) 3 1 2 4
Question 143
"Co-operative Societies" gave a constitutional status under
"கூட்டுறவு சங்கங்களுக்கு" இந்த அரசமைப்பு பிரிவின் கீழ் அரசியலமைப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது
Correct answer: (A) Article 243-ZH to 243ZT / சரத்து 243-ZH to 243-ZT
Question 144
Match the List I with List II:
(a) Jal Jeevan Mission1. 2014
(b) Beti Bachao Betipadhao2. 2019
(c) Swachh Bharat Abhiyan3. 1995
(d) National Social Assistance Programme4. 2015
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக:
(a) குடிநீர் வழங்கல் திட்டம்1. 2014
(b) மகளைக் காப்பாற்று மகளைப் படிக்க வை திட்டம்2. 2019
(c) தூய்மை இந்தியா திட்டம்3. 1995
(d) தேசிய சமூக உதவித் திட்டம்4. 2015
Correct answer: (A) 2 4 1 3
Question 145
Consider the following statements about Women Helpline. Which among the following statement is incorrect?
பெண்கள் உதவி எண் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் காண்க. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
Correct answer: (D) Provide integrated support and assistance to women affected by violence in public spaces only / பொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்
Question 146
What are the objectives of public distribution system? (i) It is based on income status (ii) It focuses on the families of Military Personnel (iii) It ensures by making available essential commodities of good quality at affordable Prices every month
பொது விநியோக முறையின் நோக்கங்கள் என்ன? (i) இது வருமான நிலையின் அடிப்படையில் அமைந்துள்ளது (ii) இது ராணுவ வீரர்களின் குடும்பங்களை மையமாகக் கொண்டுள்ளது (iii) இது ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் நல்ல தரமான அத்தியாவசியப் பொருள்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உறுதி செய்கிறது
Correct answer: (C) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 147
The amount given under the Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme has been increased since 2018 to Rs.
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின்கீழ் 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ள உதவித் தொகை ரூபாய்
Correct answer: (A) 18,000/-
Question 148
Match the welfare schemes with its beneficiaries.
(a) Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)1. Farmers (especially small and marginal farmers)
(b) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)2. Women from rural and remote areas
(c) Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)3. Low-income households and economically weaker sections
(d) Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)4. Rural households living Below the Poverty Line (BPL)
நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்
(a) பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்)
(b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA)2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்
(c) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள்
(d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள்
Correct answer: (A) 3 2 4 1
Question 149
Which of the following is incorrectly paired?
(1) CDIChild Development Index
(2) ABCAchievements of Basic Children Needs
(3) MPIMultidimensional Poverty Index
(4) HDIHuman Development Identification
பின்வருவனவற்றுள் எவை தவறாக பொருந்தியுள்ளது?
(1) CDIகுழந்தைகள் வளர்ச்சி குறியீடு
(2) ABCகுழந்தைகளின் அடிப்படைத் தேவைகளின் சாதனைகள்
(3) MPIபல பரிமாண வறுமை குறியீடு
(4) HDIமனித வளர்ச்சி அடையாளம் காணல்
Correct answer: (A) (2) and (4) / (2) மற்றும் (4)
Question 150
Who introduced the modified scheme of elementary education which provided part-time learning of hereditary occupations?
பரம்பரைத் தொழில்களைப் பகுதி நேரமாக கற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct answer: (B) C. Rajagopalachari / C. ராஜகோபாலாச்சாரி
Question 151
Choose the right matches:
(1) Shyama Prasad Mukherji Rurban MissionIntegrated Cluster Action Plans
(2) Saansad Adharsh Gram YojanaSkill training to global standards
(3) Rashtriya Gram Swaraj AbhiyanE-governance in Panchayats
(4) Deen Dayal Antyodaya YojanaPoverty alleviation through SHGs
சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்:
(1) ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
(2) சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனாஉலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
(3) ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான்பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
(4) தீன் தயாள் அந்த்யோதயா யோஜனாசுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு
Correct answer: (D) (1) and (4) are correct / (1) மற்றும் (4) சரி
Question 152
Which among the following is incorrectly paired?
(i) Babu Jagjivan Ram Chhatrawas YojanaConstruction of hostels for SC students
(ii) Atal Vayo Abhyuday YojanaImproving the quality of life of senior citizens
(iii) Pradhan Mantri Jan Vikas KaryakramSocio economic development of refugees
(iv) Pradhan Mantri Janjatiya Vikas MissionStrengthening tribal entrepreneurship
பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
(i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம்பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
(ii) அடல் வயோ அப்யுத்தேமூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
(iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யகிரம்அகதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி
(iv) பிரதம மந்திரி ஜன்ஜதிய விகாஸ் இயக்கம்பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்துதல்
Correct answer: (C) (iii) only / (iii) மட்டும்
Question 153
Find the elements of India's climate action: (i) Net-Zero Emissions by 2070 (ii) Increase Non-Fossil Energy Capacity and Renewable energy share (iii) Planting trees and stopping deforestation (iv) Reduce Carbon Intensity and Carbon Emissions
இந்தியாவின் காலநிலை நடவடிக்கையின் கூறுகள் யாவை? (i) 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு (ii) புதைபடிவமற்ற ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரித்தல் (iii) மரங்களை நடுதல் மற்றும் காட்டழிப்பை நிறுத்துதல் (iv) கரிம தீவிரம் மற்றும் கரிம உமிழ்வைக் குறைத்தல்
Correct answer: (D) (i), (ii) and (iv) only / (i), (ii) மற்றும் (iv) மட்டும்
Question 154
Assertion [A]: A recent study by the World Health Organization (WHO) commissioned by the Jal Shakti Ministry reported that Jal Jeevan Mission would succeed in averting close to 4,00,000 deaths from diarrheal diseases, saving approximately 14 million DALYS. Reason [R]: It is envisioned by the Department of Drinking water and sanitation to provide safe and adequate drinking water through individual household tap connections by 2024 to all households in rural India.
கூற்று [A]: ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வில், ஜல் ஜீவன் மிஷன் வயிற்றுப் போக்கு நோய்களால் ஏற்படும் 4,00,000 இறப்புகளைத் தடுப்பதில் வெற்றி பெறும் என்றும், சுமார் 14 மில்லியன் DALYS மிச்சப்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காரணம் [R]: 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
Correct answer: (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
Question 155
Match the following:
(a) Kalaignar Magalir Urimai Thittam1. Woman to travel in Govt. bus at free of cost
(b) Tamil Puthalvan2. Woman college students who studied in Govt. schools till 12th standard
(c) Vidiyal Payanam3. Woman head in a family
(d) Pudumai Penn Thittam4. College students who one studying in Government and Government aided colleges
பின்வருவனவற்றை சரியாக பொருத்திக் காட்டவும்
(a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம்
(b) தமிழ் புதல்வன்2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள்
(c) விடியல் பயணம்3. பெண் குடும்பத் தலைவி
(d) புதுமைப் பெண் திட்டம்4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு
Correct answer: (A) 3 4 1 2
Question 156
Assertion [A]: Tamil Nadu Government replaced Rupee symbol (₹) with Tamil letter (ரூ.) in its budget 2025-26. Reason [R]: To ensure the widespread development of Tamil Nadu to benefit all.
கூற்று [A]: தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் (₹) சின்னத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ. (ரூபாய்) மாற்றியுள்ளது. காரணம் [R]: அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.
Correct answer: (D) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்
Question 157
Match the following:
(a) District with highest sex ratio1. Theni
(b) District with lowest sex ratio2. The Nilgiris
(c) District with highest child sex ratio3. Cuddalore
(d) District with lowest child sex ratio4. The Nilgiris
சரியானவற்றை பொருத்துக:
(a) ஆண் பெண் விகிதம் அதிகம் உள்ள மாவட்டம்1. தேனி
(b) ஆண் பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்2. நீலகிரி
(c) அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம்3. கடலூர்
(d) குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம்4. நீலகிரி
Correct answer: (A) 2 1 4 3
Question 158
Tamil Nadu Chief Minister's Solar Powered Green House Scheme (CMSPGHS) was launched for the benefit of the
தமிழக முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடு திட்டம் தொடங்கப்பட்டது
Correct answer: (A) Poor in rural areas / கிராமப்புற ஏழை மக்களுக்காக
Question 159
Due to Global warming the following ______are badly affected. (i) Agriculture and Environment (ii) Agriculture and Industry (iii) Agriculture, Horticulture and Environment (iv) Industry
புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் _____மோசமாக பாதிக்கப்படுகிறது. (i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் (ii) விவசாயம் மற்றும் தொழில் துறை (iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல் (iv) தொழிற்துறை
Correct answer: (C) (iii) alone / (iii) மட்டும்
Question 160
Which of the following statements are true about Child Development Index (CDI)? (i) CDI was developed by the 'Save the Children' campaign (ii) Health, Nutrition and Education are the three indicators conventionally used for measuring CDI (iii) CDI is calculated in the same way as that of HDI
குழந்தை வளர்ச்சி குறியீடு (CDI) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) 'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது (ii) CDI ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும் (iii) HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது
Correct answer: (D) (i), (ii) and (iii) / (i), (ii) மற்றும் (iii)
Question 161
Assertion [A]: The poverty line is determined on the basis of calorie requirements. Reason [R]: The poverty line is the minimum income required to meet the basic needs of an individual which includes food, clothing and shelter.
கூற்று [A]: வறுமைக் கோடு என்பது கலோரி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. காரணம் [R]: வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.
Correct answer: (A) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A] / கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்
Question 162
Arrange the following programmes in chronological order: (1) Pradhan Mantri Awas Yojana Gramin (2) Deen Dayal Upadhayan Grameen Kaushalya Yojana (3) Pradhan Mantri Gram Sadak Yojana (4) Samagra Shiksha Abhiyan
பின்வரும் நிர்வேகங்களைக் காலவரிசைப்படி அமைக்கவும்: (1) பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமீன் (2) தீன் தயாள் உபாதாயான் கிராமீன் கௌசல்ய யோஜனா (3) பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா (4) சமக்ர சிக்ஷா அபியான்
Correct answer: (D) (3), (2), (1), (4)
Question 163
The main aim of MUDRA Bank is to (i) Provide financial assistance to develop Health Industry (ii) Provide credit to Micro, Small and Medium enterprises (iii) Provide Credit to develop Tourism Industry (iv) Provide financial assistance to rural development
MUDRA வங்கியின் முக்கிய நோக்கமானது (i) மருத்துவத் துறையை மேம்படுத்த நிதி உதவி செய்தல் (ii) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு கடன் வழங்குதல் (iii) சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடன் வழங்குதல் (iv) கிராமக வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல்
Correct answer: (B) (ii) alone / (ii) மட்டும்
Question 164
Arrange chronological order/event: (1) Mahalwari system (2) Ryotwari system (3) Zamindari system (4) Gramdan movement
கீழ்கண்ட நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக: (1) மஹல்வாரி முறை (2) ரயத்துவாரி முறை (3) ஜமீன்தாரி முறை (4) பூமிதானம் முறை
Correct answer: (C) (3), (2), (1), (4)
Question 165
Which of the following statements are true about the Fifteenth Finance Commission? (i) The criterion of demographic performance has been introduced (ii) The criterion of Fiscal Discipline is given 10% weightage (iii) The criterion of Forest cover is replaced with Forest and Ecology
பதினைந்தாவது நிதி ஆணையத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை? (i) மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (ii) நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது (iii) காடுகளின் பரப்பு எனும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் குழலியல் எனும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Correct answer: (C) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 166
Identify the correct statement (a) The rate at which the RBI is willing to borrow from the commercial banks is called reverse repo rate (b) If the RBI increases repo rate, it makes borrowing expensive for banks vice versa (c) Repo rate is a tool to control inflation (d) A lower reverse repo rate decreases inflation
சரியான வாக்கியத்தைக் கண்டறிக (a) வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம் (b) ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது (c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது (d) குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
Correct answer: (A) (a), (b) and (c) are correct / (a), (b) மற்றும் (c) சரி
Question 167
Which of the following statements are true about "Niti Aayog"? (i) Niti Aayog has been instituted to replace the Planning Commission (ii) It has no power to allocate funds (iii) Niti Aayog is a think-tank (iv) President of India is the Chairperson of Niti Aayog
"நிதி ஆயோக்" பற்றி பின்வருவனவற்றுள் எந்தக் கூற்றுகள் உண்மையானவை? (i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது (ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை (iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு (iv) இந்தியாவின் குடியரசுத் தலைவர் நிதி ஆயோக்கின் தலைவர்
Correct answer: (D) (i), (ii) and (iii) / (i), (ii) மற்றும் (iii)
Question 168
Choose the right answer among type: (i) The Ashoka's Inscription was found at Brahmagiri (ii) Chinnamanur Seppedu mentioned Thalaiyalanganathu Pandian Nedunchezhiyan (iii) Thirukkovilur Inscription mentions the death of Avvayar, which was published by T.A. Gopinathanayar (iv) Ancient inscriptions not available in Karnataka till AD 10
பின்வருவனவற்றுள் சரியானவற்றைக் கண்டறிக: (i) அசோகர் எழுத்துப் பொறிகள் மைசூர் பிராந்தியத்தில் பிரம்மகிரியில் கிடைக்கின்றன (ii) சின்னமனூர்ச் செப்பேடு தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது (iii) தி.ஆ. கோபிநாதநாயர் பதிப்பித்த திருக்கோவிலூர் எழுத்துப்பொறி ஔவை உயிர் துறந்ததைக் குறிப்பிடுகின்றது (iv) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் கன்னட நாட்டில் வீரக்கல் கிடைக்கவில்லை
Correct answer: (C) (i) and (ii) only right / (i) மற்றும் (ii) மட்டும் சரி
Question 169
Assertion [A]: C.N. Annadurai was fascinated by the self-respect movement, joined the Dravidar Kazhagam Party. Reason [R]: C.N. Annadurai treated Justice Party and Dravidar Kazhagam equally.
கூற்று [A]: சி.என். அண்ணாதுரை, சுயமரியாதை இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். காரணம் [R]: சி.என். அண்ணாதுரை, நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்தை சமமாக நடத்தினார்.
Correct answer: (A) [A] is true, [R] is false / [A] சரி, [R] தவறு
Question 170
Which of the following statements are true regarding Vellore Mutiny? (i) The Mutiny was lasted for eight hours (ii) The Mutiny was lost its importance due to local treachery (iii) After the Mutiny, the family of Tippu was transferred to Madras (iv) The British captured more than 2000 Indian Soldiers
பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றுகள் எவை? (i) அந்தக் கலகம் எட்டு மணி நேரம் நீடித்தது (ii) அந்தக் கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது (iii) அந்தக் கலகத்திற்கு பிறகு திப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது (iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்
Correct answer: (C) (i) and (iv) only / (i) மற்றும் (iv) மட்டும்
Question 171
Arrange the following events in their chronological order. (1) Periyar published the book Pen Yaen Adimaiyanaal (2) Periyar started the Tamil bimonthly Unmai at Tiruchirappalli (3) Periyar was arrested for publishing a Tamil translation of Bhagat Singh's pamphlet 'Why I am An Atheist' (4) The title Periyar was conferred by the Tamilnadu Women Conference held in Madras
பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி வரிசைப்படுத்தவும்: (1) பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார் (2) பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார் (3) பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற சிற்றுண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைது செய்யப்பட்டார் (4) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது
Correct answer: (A) (1), (3), (4), (2)
Question 172
Which of the following statement/s is/are true about the rationalist marriage system "Self-Respect Marriage', devised by Periyar? (i) The Self Respect Marriages were conducted without any priests or chanting of the rituals in Sanskrit (ii) They were often deliberately conducted in times considered auspicious (iii) They did away with thali-tying ceremony (iv) The couples took oaths promising to treat each other equally and as friends
பெரியார் வடிவமைத்த 'சுயமரியாதை திருமணம்' என்ற பகுத்தறிவுத் திருமணத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை? (i) சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன (ii) அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாகக் கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன (iii) அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர் (iv) தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்
Correct answer: (C) (i), (iii) and (iv) only / (i), (iii) மற்றும் (iv) மட்டும்
Question 173
Assertion [A]: Justice Party opposed the Home Rule Movement of Annie Besant Reason [R]: Justice Party feared that Dominion status would give more powers to the Brahmins.
கூற்று [A]: நீதிக்கட்சி ஆன்னி பெசன்ட்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது காரணம் [R]: டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என்று நீதிக்கட்சி அஞ்சியது
Correct answer: (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் உண்மை மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
Question 174
Arrange the following events in chronological order. (1) Kamarajar in Vaikam Agitation (2) Tirunelveli riot (3) Madras Mahajana Sabha (4) Swadesi Sangam
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக: (1) வைக்கம் போராட்டத்தில் காமராஜர் (2) திருநெல்வேலி கலவரம் (3) சென்னை மகாஜன சபை (4) சுதேசிச் சங்கம்
Correct answer: (B) (3), (4), (2), (1)
Question 175
Which of the following statements are true about Anjalai Ammal? (1) Anjalai Ammal was pregnant while in prison (2) Anjalai Ammal born in Chennai took active part in Neil Statue protest (3) Husband of Anjalai Ammal was not interested to participate in freedom movement (4) Anjalai Ammal served as Congress MLA from 1937 to 1946
அஞ்சலை அம்மாளைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை? (1) அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்த போது கர்ப்பமாக இருந்தார் (2) சென்னையில் பிறந்த அஞ்சலையம்மாள் நீல் சிலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார் (3) அஞ்சலையம்மாளின் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறுவதை விரும்பவில்லை (4) அஞ்சலையம்மாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 1937 முதல் 1946 வரை பணியாற்றினார்
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 176
Which of the following is incorrectly paired?
(1) Sir Thomas MunroLicensing Act of 1867
(2) Sir Charles MetcalfeLiberator of the Indian Press
(3) Lord WellesleyPrinters name at the bottom of the paper
(4) Lord CanningSystem of License and Censorship
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) சர் தாமஸ் மன்றோ1867 ஆம் ஆண்டு உரிமச் சட்டம்
(2) சர் சார்லஸ் மெட்காஃப்இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்
(3) வெல்லெஸ்லி பிரபுதாளின் கீழே அச்சுப்பொறியாளர் பெயர்
(4) கானிங் பிரபுஉரிமை மற்றும் தணிக்கை முறை
Correct answer: (A) (1) and (4) / (1) மற்றும் (4)
Question 177
Which of the following statement is/are correct about Vaikam Protest? (1) George Joseph of Kerala acted as the mastermind in the Vaikam Protest (2) Gandhi had difference of opinion about the involvement of Christian George Joseph in the untouchability issue (3) Statue of George Joseph was erected at Madurai (4) George Joseph and Karur Neelakandan were not interested to join Periyar on Vaikam Protest
கீழ்க்காண்பவற்றுள் எது/எவை வைக்கம் போராட்டம் பற்றிய சரியான கூற்று? (1) கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் வைக்கம் போராட்டத்தின் மூளையாக செயல்பட்டார் (2) தீண்டாமைச் சிக்கலில் கிறிஸ்துவரான ஜார்ஜ் ஜோசப் கலந்துகொள்வதில் காந்தி கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் (3) ஜார்ஜ் ஜோசப்பின் மார்பளவு சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது (4) ஜார்ஜ் ஜோசப்பும், கரூர் நீலகண்டனும் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை
Correct answer: (B) (1), (2), (3)
Question 178
Match correctly:
(a) Kolliporai coins1. Pandya Kings
(b) Peruvaluthi coins2. Chera Kings
(c) Bead Making Industry3. Kangayam
(d) Textile Industry4. Mohenjodaro
பின்வருவனவற்றைப் பொருத்துக
(a) கொல்லிப்பொறை நாணயங்கள்1. பாண்டியர்கள்
(b) பெருவழுதி நாணயங்கள்2. சேரர்கள்
(c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை3. காங்கேயம்
(d) துணி உற்பத்தித் தொழிற்சாலை4. மொகஞ்சதாரோ
Correct answer: (A) 2 1 3 4
Question 179
Assertion [A]: Archaeological excavations conducted in Pattanam, Ernakulam, Kerala unearthed signs of early Roman trade. Reason [R]: The excavation proved that Pattanam was a part of Muziris, the port city of the Sangam Cheras.
கூற்று [A]: கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டணம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தின் அடையாளங்களைத் தெரிவிக்கிறது. காரணம் [R]: சங்ககால சேரரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.
Correct answer: (B) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A] / [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்
Question 180
Match the following customs with literature:
(a) A custom performed by an unrequited Lover1. Kuruntogai
(b) A custom of mixing Palmyra, sugarcane juice with coconut water2. Manimegalai
(c) Custom of offering crow with white rice and Ghee3. Tholkappiam
(d) The custom of painting the walls of private houses4. Purananuru
பின்வரும் பழக்க வழக்கங்களை இலக்கியத்துடன் பொருத்துக:
(a) பழி வாங்காத காதலனால் செய்யப்படும் ஒரு வழக்கம்1. குறுந்தொகை
(b) இளநீரில் பனை மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றைக் கலக்கும் வழக்கம்2. மணிமேகளை
(c) வெள்ளை அரிசி மற்றும் நெய்யுடன் காக்கைக்கு நைவேத்யம் செய்யும் வழக்கம்3. தொல்காப்பியம்
(d) வீடுகளின் சுவர்களில் ஓவியம் தீட்டும் வழக்கம்4. புறநானூறு
Correct answer: (A) 3 4 1 2
Question 181
Which one is belonging to the Chapter Gratitude in Thirukkural? (i) Self-control of senses, like a tortoise, focussed on results, affords everlasting protection (ii) Equality is up rightness in thought and conduct always guided by a rational mind (iii) A friend in need is a friend indeed; do not forget him or forsake comrados
பின்வருவனவற்றுள் எந்தக் குறள் செய்யுள் நன்றியறிதல் அதிகாரத்தைச் சார்ந்தது? (i) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (ii) தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் (iii) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு
Correct answer: (B) (iii) only / (iii) மட்டும்
Question 182
Based on the verse of Thiruvalluvar, "Four ills eschew and virtue reach" arrange the following human qualities that will make you reach virtue: 1. Anger 2. Desire 3. Malice 4. Bitter Speech
'இழுக்கா நான்கெயும் கேடு' என்ற வள்ளுவர் குறளின்வழி பின்வரும் குணங்களை வரிசைப்படுத்துக: 1. சினம் கொள்ளுதல் (வெகுளி) 2. ஆசை கொள்ளுதல் (அவா) 3. பொறாமை கொள்ளல் (அழுக்காறு) 4. கடுஞ்சொல் கூறல் (இன்னாச்சொல்)
Correct answer: (D) 3, 2, 1, 4
Question 183
Assertion [A]: A person who thinks that he will not be despised by others. Reason [R]: He will refrain the thought of attaining any object with a forgery from entering his heart.
கூற்று [A]: பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். காரணம் [R]: யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக் கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்
Correct answer: (A) [A] is true [R] is true / கூற்று [A] சரி, காரணம் [R] சரி
Question 184
Choose the wrong pair:
1. ThodakkuThe ornaments on the neck
2. Andalai AduppuCock shaped
3. IyavithulamWeapons for gouging the eyes
4. Yeri ChiralThe equipment to stock Bow and arrows
தவறான இணையைக் கண்டறிக:
1. தொடக்குகழுத்திற் பூட்டியிருக்கும் சங்கிலி
2. ஆண்டலை அடுப்புசேவல் வடிவானது
3. ஐயவித்துலாம்கண்ணைக் கொத்தும் ஆயுதம்
4. எறிசிரல்அம்புகள் வைத்தெய்யும் எந்திரம்
Correct answer: (D) 3 and 4 incorrectly / 3 மற்றும் 4 தவறு
Question 185
Match the following: Excavated sites in Tamil Nadu
(a) Chennai1. Mallapadi
(b) Tanjore2. Kambar Medu
(c) Dharmapuri3. Kodumanal
(d) Erode4. Pallavaram
பொருத்துக: தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
(a) சென்னை1. மல்லபாடி
(b) தஞ்சாவூர்2. கம்பர்மேடு
(c) தர்மபுரி3. கொடுமணல்
(d) ஈரோடு4. பல்லாவரம்
Correct answer: (A) 4 2 1 3
Question 186
Choose the right matches among type: 1. In the ancient day, it was Tamil culture to conduct marriages on a spread of sand - Akananuru 2. The Groom fastened a thali upon the bride - Tholkappiyam 3. There was a practice among the people of the bride to give dowry to the groom's family - Nannul 4. There was the practice of conducting the marriage infront of fire - Silappadikaram
பின்வருவனவற்றுள் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க: 1. பழங்காலத்தில் தமிழர்கள் திருமணத்தில் மணல் பரப்பி விழா எடுத்தனர் – அகநானூறு 2. மணமகன் மணமகளுக்கு தாலி அணிவித்தல் வழக்கமாகும் – தொல்காப்பியம் 3. மணமகள் வீட்டினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கமிருந்தது – நன்னூல் 4. தீ நெறிப்பட்ட வேள்வித் திருமணம் - சிலப்பதிகாரம்
Correct answer: (A) 1 and 4 are correct / 1 மற்றும் 4 சரி
Question 187
8 Men working 9 hours a day complete a piece of work in 20 days. In how many days can 12 men working for 10 hours a day complete the same piece of work?
8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
Correct answer: (D) 12 days / 12 நாட்கள்
Question 188
Three circles of radius 3.5 cm are placed in such a way that each circle touches the other two. The area of the portion enclosed by the circles is
ஆரம் 3.5 செ.மீ உடைய மூன்று வட்டங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களை தொடுமாறு அமைக்கப்படுகிறது எனில் அவ்வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு
Correct answer: (A) 1.967 cm² / 1.967 செ. மீ²
Question 189
If the difference between S.I and C.I for 3 years at 5% is Rs. 183, then find the principal
3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183-ஆக, 5% ஆண்டு வட்டி வீதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
Correct answer: (C) 24,000
Question 190
Ramesh deposited Rs. 15,600 in a fixed deposit at 10% per annum simple interest. After every second year he adds his interest earning to the principal. The interest added at the end of 4th year is
ரமேஷ் ரூ.15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டின் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை
Correct answer: (C) Rs. 3,744 / ரூ. 3,744
Question 191
The salary of A, B and C together amounts to Rs.33,300. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 7:6:9. Find the salary of B.
A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ.33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7:6:9. எனில் B-ன் ஊதியம் என்ன?
Correct answer: (D) Rs.12,000 / ரூ.12,000
Question 192
Three numbers are in the ratio 3:4:5 and their L.C.M. is 2400. The H.C.F of these numbers is
3:4:5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில் அவற்றின் மீ.பொ.வ.
Correct answer: (A) 40
Question 193
If a, b are two-digit numbers such that HCF (a, b) =15. Then how many pairs are available?
(a, b) ன் மீப்பெரு பொது வகுத்தி 15 மற்றும் a, b ஆகியவை ஈரிலக்க எண்கள் எனில் இவ்வாறு எத்தனை இணை எண்கள் காணப்படுகின்றன?
Correct answer: (A) 11
Question 194
\(\dfrac{6}{5-\frac{5}{3}} \div \dfrac{4-\frac{2}{4-\frac{1}{2}}}{5-\frac{3}{2}} - \dfrac{2}{5}\) of \(\left\{\dfrac{6}{9} + \dfrac{2}{3}\right.\) of \(\left.\dfrac{1}{2}\right\} = \) ______
\(\dfrac{6}{5-\frac{5}{3}} \div \dfrac{4-\frac{2}{4-\frac{1}{2}}}{5-\frac{3}{2}} - \dfrac{2}{5}\) இல் \(\left\{\dfrac{6}{9} + \dfrac{2}{3}\right.\) இல் \(\left.\dfrac{1}{2}\right\} = \) ______
Correct answer: (C) \(1\frac{7}{16}\)
Question 195
In an A.P, t₇ - t₄ = 20. Which one of the following is false?
ஒரு கூட்டுத்தொடரில் t₇ - t₄ = 20 எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
Correct answer: (D) A.M. of 5th term and 30th term is 17th term / 5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு
Question 196
Mary is 16 years old. She is 4 times older than her brother. How old will she be when she is twice his age?
மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும் பொழுது, மேரியின் வயது என்ன?
Correct answer: (B) 24
Question 197
Pick the odd one from CGKO: BFJN: AEIM: FDKN
கொடுக்கப்பட்டவற்றுள் தொடர்பில்லாத எழுத்தைக் கண்டறியவும்? CGKO: BFJN: AEIM: FDKN
Correct answer: (D) FDKN
Question 198
There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?
5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
Correct answer: (A) 5 minutes / 5 நிமிடங்கள்
Question 199
When we write like this A1B4C9D16....Z676, what is total value of the numbers followed by P and Q?
A1B4C9D16...Z676 என எழுதும் போது P மற்றும் Q-ஆல் தொடரப்படும் எண்களின் மொத்த மதிப்பு என்ன?
No final answer. TNPSC's official answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 200
Given below are 4 pictures of a cube.
5 4 6 I 3 6 5 II 2 1 4 III 4 1 5 IV
Which number is on the face opposite to 3?
கீழே நான்கு கனசதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
5 4 6 I 3 6 5 II 2 1 4 III 4 1 5 IV
3 என்ற எண்ணிற்கு எதிரே உள்ள பக்கத்தில் வரும் எண்?
Correct answer: (C) 4
Read next: All Group 1 Question Papers · TNPSC Group 1 Syllabus · TNPSC Annual Planner 2026 · TNPSC Official Updates
Want full-length practice at this exact standard?

Writing Group 1 Prelims on 27 September 2026? Our test series follow the official syllabus and weightage - full papers, answer keys and video explanations for every test.

Browse TNPSC Test Series

Students Also Read