பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு VI - தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம் மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்
தற்போதைய நிலை:
- தாய் இறப்பு விகிதம் (MMR) 39.46 ஆக குறைந்துள்ளது (ஏப்ரல்-நவம்பர் 2024)
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (47.29) ஒப்பிடும்போது 17% குறைவு
- மாநில அளவில் ஒட்டுமொத்த MMR: 45.5 (ஒரு லட்சம் பிறப்புகளுக்கு)
தாய் இறப்புக்கான முக்கிய காரணங்கள்:
- பிரசவத்திற்குப் பின் அதிக ரத்தப்போக்கு
- உயர் ரத்த அழுத்தம்
- கிருமித் தொற்று
- இதய சம்பந்தமான பிரச்சினைகள்
அரசின் முயற்சிகள்:
- மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தலைமையில் 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான செயலாக்கக் குழு
- மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட அளவிலான குழுக்கள்
- சிறப்பு செயலாக்கக் குழுக்கள் அமைப்பு
- மகப்பேறு தொடர்பான அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் தொடக்கம்
- 108 ஆம்புலன்ஸ் சேவை உடனடி கிடைப்பதை உறுதிப்படுத்தல்
- முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளை திட்டமிடல்
முக்கிய சாதனைகள்:
- மகப்பேறு சிகிச்சைக்கு செல்லும் வழியில் ஏற்படும் இறப்புகள் 15-லிருந்து 6 ஆக குறைந்துள்ளது
- அடுத்த ஆண்டில் தாய் இறப்பு விகிதம் மேலும் குறையும் என எதிர்பார்ப்பு