பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு I - பொது அறிவியல்
விருது பெற்றவர்
- அமைப்பு: நிஹோன் ஹிடாங்கியோ (ஜப்பான் அணு மற்றும் ஹைட்ரஜன் குண்டு பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு).
- நாடு: ஜப்பான்.
நிஹோன் ஹிடாங்கியோ பற்றி
- நிறுவப்பட்ட ஆண்டு: 1956.
- நோக்கம்: ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக பணியாற்றுதல்.
- செயல்பாடுகள்:
- அணு ஆயுத ஒழிப்பு குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுதல்.
- அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்துதல்.
வரலாற்று பின்னணி
- ஆகஸ்ட் 1945: இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது.
- தாக்கம்: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு, பல தலைமுறைகளாக நீடிக்கும் கதிர்வீச்சு பாதிப்பு.
அமைதிக்கான நோபல் பரிசு விவரங்கள்
- ஆண்டு: 2024.
- அறிவிப்பு தேதி: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2024.
- பரிசு உள்ளடக்கம்:
- தங்கப் பதக்கம்.
- வண்ண ஓவியத்துடன் கூடிய பாராட்டுப் பத்திரம்.
- ரூ. 8.91 கோடி ரொக்கப் பரிசு.
சமீபத்திய அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
- 2023: நர்கீஸ் முகமதி (ஈரான்) - பெண்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக.
- 2014: கைலாஷ் சத்யார்த்தி (இந்தியா) மற்றும் மலாலா யூசுப்சாய் (பாகிஸ்தான்).
- குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும், குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்ததற்காகவும் அங்கீகரிக்கப்பட்டனர்.