பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு V - இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
- 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது.
- ஆரம்பத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1,14,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
- 25.08.2023 அன்று விரிவுபடுத்தப்பட்டு 30,992 பள்ளிகளில் 18,50,000 குழந்தைகள் பயனடைந்தனர்.
- 15.07.2024 அன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.
- தற்போது 34,987 பள்ளிகளில் 20,73,536 குழந்தைகள் பயனடைகின்றனர்.
காலை உணவுத் திட்டத்தின் தாக்கம்
- மாணவர்களின் குறித்த நேர வருகை அதிகரித்துள்ளது.
- கற்றல் ஆர்வம், வகுப்பறை கவனிப்பு மற்றும் விளையாட்டில் பங்கேற்பு மேம்பட்டது.
- 90% குழந்தைகளின் நினைவாற்றல் மேம்பட்டது.
- கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் மேம்பட்டது.
புதுமைப்பெண் திட்டம்
- 05.09.2022 அன்று சென்னை பாரதியார் மகளிர் கல்லூரியில் தொடக்கம்.
- அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது.
- பயனாளிகள் 2022-23ல் 2,09,365 லிருந்து 2023-24ல் 2,73,596 ஆக உயர்வு.
- தொடக்கம் முதல் மொத்த பயனாளிகள்: 3,28,280.
- 2024-25 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தமிழ் வழி மாணவிகளுக்கும் விரிவாக்கம்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
- 09.08.2024 அன்று கோவையில் தொடக்கம்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது.
- சுமார் 3,28,000 கல்லூரி மாணவர்கள் பயனடைகின்றனர்.
- ஆண்டு நிதி ஒதுக்கீடு: ₹360 கோடி.
புதுமைப்பெண் திட்டத்தின் தாக்கம்
- நகர்ப்புற மாணவிகளுக்கு விட கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளன.
- 90.2% பயனாளிகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
- 27.6% விவசாயக் குடும்பங்களிலிருந்தும், 39.3% விவசாயம் அல்லாத குடும்பங்களிலிருந்தும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம்
- 13.06.2022 அன்று தொடக்கம்.
- 2025க்குள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணித திறன்களைப் பெற இலக்கு.
- தொடக்கக் கல்வியின் தரம் உயர்வு.
- பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், ஆசிரியர் பயிற்சி, நேர மேலாண்மை, மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றில் மேம்பாடு.