பாடத்திட்டம்: முதல்நிலைத் தேர்வு அலகு IV - இந்திய அரசியலமைப்பு
இந்திய நாடாளுமன்றத்தில் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் தற்போதைய நிலை
- 25-40 வயதுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது
- 1952இல் மக்களவை உறுப்பினர்களில் சுமார் 30% பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
- 2024இல் வெறும் 10 உறுப்பினர்கள் மட்டுமே 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
- மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 1962இல் 46.5 ஆக இருந்தது 2024இல் 55.6 என்று அதிகரித்துள்ளது
- மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி வயது 63
உலகளாவிய சூழல்
- 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் சரிபாதி 30 வயதுக்கு உட்பட்டவர்கள்
- உலக அளவில், 30 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் 2.8% மட்டுமே
- ஜப்பான், பிரிட்டன், எகிப்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இளைஞர் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது
இந்திய மக்கள்தொகை சூழல்
- இந்தியாவின் சராசரி வயது 28 (2024 நிலவரப்படி)
- ஏறத்தாழ 65 கோடி இந்தியர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்கள்
- உலகிலேயே மிகப்பெரும் இளைஞர் திரளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது
இளைஞர் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்
- வேட்பாளரை மையமாகக் கொண்ட தேர்தல் முறை நன்கு அறிமுகமான, சமூக செல்வாக்குமிக்க, பொருளாதார பின்புலம் கொண்ட மூத்த வேட்பாளர்களுக்கு சாதகமாக உள்ளது
- பொருளாதார பின்புலம் இன்மை, அனுபவமின்மை காரணமாக இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த அரசியல் கட்சிகள் தயங்குகின்றன
- குடும்ப அரசியல் பின்புலம் கொண்ட இளைஞர்கள் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர்
இளைஞர் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம்
- அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி சமூக இயக்கவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
- இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய அரசியல் நடைமுறைகளை சவால் செய்யும் புதிய சிந்தனைகள் உருவாகியுள்ளன
- முதிய உறுப்பினர்களால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை
- காலநிலை மாற்றம், நவீன உற்பத்தி முறை, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் இளைஞர்கள் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்
பரிந்துரைக்கப்படும் சீர்திருத்தங்கள்
- வாக்களிக்கும் வயது (18) மற்றும் போட்டியிடும் வயது (25) இடையேயான இடைவெளியைக் குறைத்தல்
- தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை அறிமுகப்படுத்துதல்
- நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றக் குழுக்களில் இளைஞர் பங்கேற்பை அதிகரித்தல்
- அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு கட்சிப் பொறுப்புகளிலும் வேட்பாளர் பதவிகளிலும் முன்னுரிமை அளித்தல்
- மாணவர்/இளைஞர் அமைப்புகள் மூலம் அரசியல் பயிற்சி அளித்தல்
- இளைஞர்களுக்கான நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து ஆக்கபூர்வமான உரையாடலை ஊக்குவித்தல்