TNPSC - Group 2 - General Tamil - 2025

TNPSC Group 2 General Tamil (பொதுத்தமிழ்) Question Paper 2025 with Answer Key

TNPSC Group 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு (28 September 2025) பொதுத்தமிழ் வினாத்தாள்: 100 வினாக்களும் TNPSC அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புடன். ஒவ்வொரு வினாவையும் முதலில் நீங்களே முயன்று, பிறகு Show Answer அழுத்துங்கள்.

3 students are reading now 19 read so far
Share WhatsApp Telegram My List
100Questions பொதுத்தமிழ்General Tamil SSLCStandard OfficialTNPSC answer key
Question 1
பொருத்துக:
அடிதாவரம்
(a) தட்டு1. வேம்பு
(b) கழி2. மூங்கில்
(c) கழை3. சோளம்
(d) அடி4. கரும்பு
Correct answer: (A) 3 4 2 1
Question 2
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
Correct answer: (B) பிளிறும்
Question 3
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
Correct answer: (C) கணம்
Question 4
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Correct answer: (B) உற்றார்
Question 5
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க
Correct answer: (C) கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
Question 6
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
Correct answer: (A) விறல்
Question 7
பிரித்து எழுதுக "வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக
Correct answer: (D) வேள் + நன்மை
Question 8
சேர்த்து எழுதுக "அது + அன்று" என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
Correct answer: (D) அதான்று
Question 9
சேர்த்து எழுதுக உள் + மனம்
Correct answer: (B) உண்மனம்
Question 10
கூற்று: ஏது? யாது? என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும். காரணம்: ஏ, யா என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
Correct answer: (D) கூற்று தவறு; காரணம் தவறு
Question 11
பொருத்துக
சொற்கள்இலக்கணம்
(a) அது, நாய்1. அஃறினை பன்மை
(b) அவர், அவர்கள்2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள்3. அஃறினை ஒருமை
(d) தங்கை4. உயர்திணைப் பன்மை
Correct answer: (A) 3 4 1 2
Question 12
ஒற்றுப்பிழையைச் சரி செய்க: வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
Correct answer: (D) வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
Question 13
பிழையற்ற தொடரைத் தேர்க
Correct answer: (A) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
Question 14
மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
Correct answer: (D) முகம் திரிந்து நோக்கினால்
Question 15
உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்
Correct answer: (C) என் சரிதம்
Question 16
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
Correct answer: (C) தேசபக்தன்
Question 17
"கனலி” என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.
Correct answer: (D) கரும்பு
Question 18
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடு நேற்றைப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது நாம் மீளவும் இளையோராகி பயிலத் தொடங்குகிறோம். புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும் அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம் முன் பக்கங்களாய் விரிந்து கிடக்கின்றன. மனிதன் இரு கால்களை ஊன்றி நடக்கப்பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புறநடை அதுபோல் இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி காலம் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வி மலர்கிறது என்பதை உணர்த்துகிறது. உள்ளத்தேவைகளுக்காக முன் இருப்பவை எவை?
Correct answer: (C) அற நூல்கள்
Question 19
இளமையாக இருக்க உதவும் கலை எது?
Correct answer: (D) கல்வி
Question 20
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
Correct answer: (A) புறநடைப்பயிற்சி
Question 21
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
Correct answer: (B) அகநடைப்பயிற்சி
Question 22
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?
Correct answer: (D) இளமையாக
Question 23
'இடியோசை கேட்ட நாகம்போல்' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Correct answer: (C) மிரட்சி
Question 24
'நீறு பூத்த நெருப்புப்போல்' - நீறு என்பதன் பொருள் என்ன?
Correct answer: (A) சாம்பல்
Question 25
'மீதூண் விரும்பேல்' என்ற ஆத்திச்சூடிக்குத் தொடர்புடைய பழமொழியை கண்டறிக
Correct answer: (D) நொறுங்கத் தின்றால் நூறு வயது
Question 26
புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வு ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக
Correct answer: (A) இயற்கை வளங்கள் துறை
Question 27
"Assailant" என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
Correct answer: (A) தாக்குபவர்
Question 28
பொருத்துக
(a) Arete1. களிமண் பாறை
(b) Arenaceous rock2. சுத்திமுனைக் குன்று
(c) Argillaceous rock3. இடையாழ கிரானைட்டு பாறை
(d) Aplite4. மணற் பாறை
Correct answer: (D) 2 4 1 3
Question 29
சரியான தொடரைக் கண்டறிக
Correct answer: (C) குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
Question 30
பொருத்தமான காலத்தைச் சுட்டுக: "கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்"
Correct answer: (B) நிகழ்காலம்
Question 31
புல், வாய், நல்வி, உழை ஆகியவற்றின் பெண்பால் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
Correct answer: (A) பிடி
Question 32
'அடவி' என்ற சொல்லின் பொருள்
Correct answer: (C) காடு
Question 33
பரியது கூர்ங்கோட்டு தாயினும் யானை வெரூஉம் புலிதாக்குறின். (குறள்-559) இக்குறட்பாவில் "மிகுதி" என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.
Correct answer: (B) கூர்
Question 34
உதகை - என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.
Correct answer: (B) உதக மண்டலம்
Question 35
பிழை திருத்தும். மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தாள்.
Correct answer: (B) அஃது
Question 36
இவனுக்கு வீடு ஒன்று _____ இரண்டு இருக்கிறது.
Correct answer: (C) அல்லது
Question 37
____ நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு வேற்றுநாடு ஆகாதமவே ஆம் - ஆயினால் ஆற்றுணாவு வேண்டுவது இல் (பழமொழி நானூறு 41) இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?
Correct answer: (D) வேண்டுவது
Question 38
உறுதிக்கூற்று: சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம். காரணம்: அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
Correct answer: (D) இரண்டும் சரி
Question 39
தொல்காப்பியர் குறிப்பிடும் உவன், உவள், உவர், உது, உவை என்ன?
Correct answer: (B) இடைநிலைச் சுட்டு
Question 40
எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
(a) அணுகு1. தெளிவு
(b) ஐயம்2. சோர்வு
(c) ஊக்கம்3. பொய்மை
(d) உண்மை4. விலகு
Correct answer: (A) 4 1 2 3
Question 41
எதிர்ச்சொல்லைக் கண்டறிக: எந்தை
Correct answer: (A) நுந்தை
Question 42
பிழையான தொடரைக் கண்டறிக
Correct answer: (D) பெருமலையைக் கண்டதும் மக்கள் மலைத்துப் போய்விட்டனர்.
Question 43
[A]: திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார். [R]: புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைக்கேற்பத் தப்பாட்டத்தை ஆடுவர்.
Correct answer: (A) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு. [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
Question 44
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க தென் திராவிட மொழிகள்: (1) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் (2) தமிழ், கன்னடம், மலையாளம், குடகு (3) தமிழ், மலையாளம், குடகு, கூபி (4) தமிழ், குடகு, கூபி, குருக்
Correct answer: (B) (2) மட்டும்
Question 45
"EVILDOER" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக
Correct answer: (C) கெடுப்பவர்
Question 46
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுது "Omniscient"
Correct answer: (D) எல்லாம் அறிந்த நிலை
Question 47
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் ____ என்றழைப்பர்.
Correct answer: (C) Review Petition
Question 48
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்தும்
(a) கானல் நீர்1. விட்டுவிடுதல்
(b) கரையேறுதல்2. உறுதியாகப்பற்றுதல்
(c) கைகழுவுதல்3. கிடைக்காத ஒன்று
(d) குரங்குப்பிடி4. துன்பத்திலிருந்து மீளுதல்
Correct answer: (A) 3 4 1 2
Question 49
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
Correct answer: (B) ஏமாற்றுதல்
Question 50
போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடித குறிப்புக்களின் தனிப்பதிவேடு: விதிகள் மற்றும் விதிமுறைகள்: அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவற்றிற்குத் தாமதமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு 'ஆ' XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார், உடனுக்குடன் தாமதமில்லாமல் இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டுகளுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவனித்து வருவார். மாவட்ட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.
Correct answer: (C) கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு
Question 51
உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான கலைச்சொல் தருக.
Correct answer: (D) மனநோய்
Question 52
"Presbyoesophagus" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
Correct answer: (B) உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்
Question 53
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக
(a) Barter1. வாராக் கடன்
(b) Bargaining2. பண்டமாற்று
(c) Bad debt3. கைப்பற்றப்பட்ட நிறுவனம்
(d) Acquiree4. பேரம் பேசுதல்
Correct answer: (C) 2 4 1 3
Question 54
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
Correct answer: (C) அவை அல்ல
Question 55
சரியான தொடரைத் தேர்வு செய்க.
Correct answer: (D) செடி கொடிகள் காற்றில் அசைந்தன
Question 56
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Correct answer: (C) மகடூ வந்தாள்
Question 57
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - இப்பாடல் வரியில் 'கேளிர்' என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
Correct answer: (B) பகைவர்
Question 58
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
(a) க1. உறுதி
(b) கா2. கொள்ளுகை
(c) தே3. பறவை
(d) நி4. பசு
Correct answer: (D) 3 4 2 1
Question 59
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
Correct answer: (A) வேர்குறு
Question 60
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
Correct answer: (C) புட்டம்
Question 61
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ______ என்றழைப்பது
Correct answer: (D) புன்கணீர்
Question 62
பொருத்துக:
(a) அநுராகம்1. பாவம்
(b) அனுராகம்2. மான்
(c) ஏணம்3. ஒத்த காதல்
(d) ஏனம்4. மிக்க ஆசை
Correct answer: (A) 4 3 2 1
Question 63
"அப்பாவி" எனும் சொல் பிழை எனில் அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க
Correct answer: (D) அற்ப ஆவி
Question 64
'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக
Correct answer: (C) போர்ச்சுகீசியம்
Question 65
சுருக்கக் குறியீட்டு விளக்கம் உத்தமம்
Correct answer: (A) உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
Question 66
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
Correct answer: (D) பிண்டம்
Question 67
"மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்" என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக
Correct answer: (D) நான்மணிக்கடிகை
Question 68
"ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
Correct answer: (B) முதுமொழிக்காஞ்சி
Question 69
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
Correct answer: (C) கொல்லாமை
Question 70
"இரவில் மாட்டிய இலங்குகடல் நெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை..." இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக
Correct answer: (C) உருத்திரங்கண்ணனார்
Question 71
BLOGGER - பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
Correct answer: (B) வலைப்பதிவர்
Question 72
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
Correct answer: (C) வாடகை
Question 73
பொருளறிந்து பொருத்துக
(a) ஓதுதல்1. திருத்தமாகச் சொல்லுதல்
(b) மொழிதல்2. பலர் அறியச் சொல்லுதல்
(c) விளம்புதல்3. காதில் மெல்லச் சொல்லுதல்
(d) உளறுதல்4. ஒன்றுக்கொன்று சொல்லுதல்
Correct answer: (D) 3 1 2 4
Question 74
பழமொழியினை நிறைவு செய்க: "மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை _____ ஆகாது"
Correct answer: (D) மாமனுக்கு
Question 75
பொருத்துக:
(a) Bracings1. பைஞ்சுதை
(b) Briquette2. மெல்லுறை
(c) Cement3. கட்டுச்சட்டங்கள்
(d) Veneer4. கட்டி
Correct answer: (A) 3 4 1 2
Question 76
சரியான திருக்குறளைக் கண்டறிக
Correct answer: (D) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்
Question 77
செயப்பாட்டுடன் வினைத் தொடரைக் கண்டறிக.
Correct answer: (D) தை கொண்டாடப் பெற்றது
Question 78
குமரன் நடந்தான் - இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக
Correct answer: (A) தன்வினை
Question 79
உறுதிக்கூற்று:ஆ, ஓ, எ, ஏ, யா ஆகிய எழுத்துகள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும். காரணம்: ஏனெனில் இவை வினாச்சொற்கள்.
Correct answer: (A) உறுதிக்கூற்று சரி; காரணம் சரி
Question 80
பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?
Correct answer: (D) பகர அடைப்புக் குறி
Question 81
தேவநேயப்பாவாணர் 'கூட்டுக்கிளவிப் புணர் வாக்கியம்' என்று எதனை கூறுகிறார்?
Correct answer: (D) ஒப்புமைப்படுத்துதலை
Question 82
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது - இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி
Correct answer: (B) உயர்ந்து ஓங்கிய
Question 83
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக:
(a) கறுத்து1. கொல்லல், கோளிழைத்தல்
(b) கிராய்2. கோபித்து, சினந்து
(c) கோறல்3. பிணக்கு, மாறுபாடு
(d) உறையல்4. கருஞ்சேற்று நிலம், புறகரடு
Correct answer: (D) 2 4 1 3
Question 84
பொருத்துக
(a) கடற்கரைச் சாலை1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும்
(b) புதுமனைப் பருவிழா2. பயனும் உடன்தொக்க தொகை
(c) உரிமைக் குரல்3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
(d) பருத்தித் துணி4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
Correct answer: (C) 3 1 4 2
Question 85
பொருள் கண்டறிக: ம, மா
Correct answer: (D) இயமன், வண்டு
Question 86
னகர, ணகர, நகர வேறுபாட்டில் பொருத்தும்
(a) அன்னாள்1. முற்காலத்தில்
(b) உன்னல்2. என்று சொல்லாள்
(c) முன்னாள்3. நினைத்தல்
(d) என்னாள்4. அவள்
Correct answer: (D) 4 3 1 2
Question 87
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் விகுதியணையும் பெயரைக் கண்டறிக.
Correct answer: (A) சொல்லாமை
Question 88
'அறியாத பையன்' என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
Correct answer: (D) தெரிநிலைப் பெயரெச்சம்
Question 89
'சிறிய கடிதம்' - இத்தொடரின் எச்ச வகை கண்டறிக
Correct answer: (C) குறிப்புப் பெயரெச்சம்
Question 90
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக
Correct answer: (D) உயில்
Question 91
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும். (1) அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல் (2) அன்பு இல்லாதது உயிரற்ற உடல் (3) அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர் (4) அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
Correct answer: (B) (2) மட்டும்
Question 92
"அன்றே யொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
Correct answer: (C) நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்
Question 93
கிளைஞரை அளக்கும் கோல் எது?
Correct answer: (A) நமக்கு வரும் துன்பம்
Question 94
கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு (i) 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியரானார். (ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார். (iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
Correct answer: (D) (i) மற்றும் (iii) மட்டும்
Question 95
வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக
Correct answer: (A) தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு
Question 96
தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக:
(a) Nautical mile1. மணல் தொடுவரை
(b) Natric horizon2. நெப்டியூனின் துணைக்கோள்
(c) Narbonnaise3. 1852.5 மீ
(d) Nalad4. மழை புயற்காற்று
Correct answer: (A) 3 1 4 2
Question 97
கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக:
(a) Nanotechnology1. அறிவாளர்
(b) Biotechnology2. விண்வெளித் தொழில்நுட்பம்
(c) Space technology3. உயிர்த் தொழில்நுட்பம்
(d) Intellectual4. மீநுண் தொழில்நுட்பம்
Correct answer: (A) 4 3 2 1
Question 98
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக
(a) ஆண்டிகள் மடம் கட்டியது போல்1. போலி
(b) ஆற்றில் கரைத்த புளி போல்2. மிக அரிது
(c) ஈரடி பிறை கண்டது போல்3. பயனற்ற செயல்
(d) உள்ளீடற்ற புதர் போல்4. உருவாகாத் திட்டம்
Correct answer: (A) 4 3 2 1
Question 99
"நீர்மேல் எழுத்துப்போல்" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க
Correct answer: (D) நிலையற்ற தன்மை
Question 100
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக. "எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்". (a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது. (b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களைக் குறிக்கிறது. (c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. (d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
Correct answer: (A) (b), (c), (d) - சரி
Same exam, other papers: Group 2 General English 2025, Group 2 General Studies 2025
Read next: All Group 2 Question Papers, TNPSC Group 2 Mock Test 2026, TNPSC Group 2 & 2A Syllabus 2026, Group 2 Exam Date 2026, Group 2 Hall Ticket 2026
Want full-length practice at this exact standard?

Our Focus Group 2 test series follows the official syllabus and weightage - full 200-question papers, answer keys and video explanations for every test, built for the 1 November 2026 Prelims.

Group 2 Prelims Test Series 2026

Students Also Read