TNPSC · Group 2 · General Studies · 2025

TNPSC Group 2 Question Paper 2025: Official General Studies Paper with Answer Key

All 100 General Studies and Aptitude questions from the official TNPSC Group 2/2A Preliminary Examination 2025, in English and Tamil. Try each question first, then tap Show Answer - every answer follows TNPSC's official answer key.

1 student is reading now 22 read so far
Share WhatsApp Telegram My List
100Questions 75 + 25GS + Aptitude English + TamilBilingual OfficialTNPSC answer key
Question 1
Match the following and choose the correct option:
(a) Chloroform1. CCl₃NO₂
(b) Phosgene2. ClC₂H₄-S-C₂H₄Cl
(c) Tear gas3. CHCl₃
(d) Mustard gas4. COCl₂
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் சரியான விடையினைத் தேர்வு செய்க:
(a) குளோரோபார்ம்1. CCl₃NO₂
(b) பாஸ்ஜீன்2. ClC₂H₄-S-C₂H₄Cl
(c) கண்ணீர்ப் புகை3. CHCl₃
(d) கடுகு வாயு4. COCl₂
Correct answer: (C) 3 4 1 2
Question 2
Which of the following statements are true about the Nordics? (i) Indo-Aryans are the last immigrants into India (ii) This group was the next to come to India after the Negritos (iii) This group have come into India between 2000 and 1500 BC
நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது? (i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள். (ii) நெகிரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு. (iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
Correct answer: (B) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 3
Which of the statement(s) is/are correct? (i) Satakarni was First Satavahana King and not the powerful Satavahana ruler (ii) His achievements are not described in the Nanaghat inscription (iii) His name was inscribed on one of the gateways of Sanchi stupa and referred to as "Lord of Dakshinapatha"
கீழே கொடுக்கப்பட்ட கூற்று கூற்றுகளில் எது எவை சரியானவை? (i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல. (ii) அவருடைய சாதனைகள் நானாகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. (iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சினபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
Correct answer: (A) (iii) only / (iii) மட்டும்
Question 4
Which among the following statement(s) is/are true about Indian National Congress? (i) The Father of Indian National Congress is A.O. Hume (ii) The first President of Indian National Congress was S.N. Banerjee (iii) S.N. Banerjee founded Indian National Liberation Federation
பின்வருவனவற்றுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று கூற்றுகளைத் தேர்வு செய்க (i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார். (ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார். (iii) S.N.பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
Correct answer: (B) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 5
Incorporation of Fundamental Duties to the Constitution of India was done by
இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
Correct answer: (A) 42nd Constitutional Amendment Act 1976 / 42-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976
Question 6
Which of the following are true about Tamil Nadu Panchayat Act, 1994? (i) Chapter II of this Act deals with Gram Sabha (ii) Chapter VII deals with Taxation and Finance (iii) Chapter XII deals with Penalties
கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 தொடர்பானவற்றுள் சரியானவை எவை? (i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும். (ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும். (iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.
Correct answer: (B) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 7
Find out Incorrectly paired:
CommissionYear of Establishment
(1) NHRC1993
(2) Central Information Commission2005
(3) Central Vigilance Commission1963
(4) Central Bureau of Investigation1969
தவறான இணையை கண்டுபிடி:
ஆணையம்/அமைப்புஏற்படுத்தப்பட்ட ஆண்டு
(1) தேசிய மனித உரிமைகள் ஆணையம்1993
(2) மத்திய தகவல் ஆணையம்2005
(3) மத்தியக் கண்காணிப்பு ஆணையம்1963
(4) மத்தியப் புலனாய்வு அமைப்பு1969
Correct answer: (C) (3) and (4) only / (3) மற்றும் (4) மட்டும்
Question 8
Tamil Nadu Government celebrated April 29 to May 5 to mark Birth anniversary of
தமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளை கொண்டாடியது
Correct answer: (A) Pavendar Bharathidasan / பாவேந்தர் பாரதிதாசன்
Question 9
Which is/are the key feature(s) of the Women's Reservation Bill passed by the Lok Sabha on 20th Sept. 2023? (i) The Bill reserves 33% of all seats for women in Lok Sabha and State Legislative Assemblies (ii) It will not apply to the seats reserved for SC/ST in Lok Sabha and State Legislatures (iii) Reservation to be provided for 25 years (iv) To be effective after delimitation exercise
செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை? (i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது. (ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது. (iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். (iv) தொகுதி மறுவரையறைப் பயிற்சிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
Correct answer: (B) (i) and (iv) only / (i) மற்றும் (iv) மட்டும்
Question 10
Choose the right matches:
(1) NHSNational Health Service
(2) CBHICentral Bureau of Health Insurance
(3) PHCPrimary Health Center
(4) NRHMNational Rural Health Mission
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும்:
(1) NHSதேசிய சுகாதார சேவை
(2) CBHIசுகாதார காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
(3) PHCஆரம்ப சுகாதார நிலையம்
(4) NRHMதேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்
Correct answer: (A) (1) and (3) are correct / (1) மற்றும் (3) சரியானவை
Question 11
Assertion [A]: Quality of life of people living in rural areas of Tamil Nadu has improved Reason [R]: The Tamil Nadu state has introduced a flagship programme called Tamilnadu Village Habitations Improvement Scheme
கூற்று [A]: தமிழ்நாடு கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. காரணம் [R]: தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Correct answer: (B) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
Question 12
Match the following with the schemes:
(a) Mathi Bazar1. Clean energy
(b) Pasumai Veedugal Thittam2. Skill development
(c) Naan Mudalvan3. Poverty Eradication
(d) Anjeevika4. SHG
பின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும்:
(a) மதி பஜார்1. சுத்தமான எரிசக்தி
(b) பசுமை வீடுகள் திட்டம்2. திறன் மேம்பாடு
(c) நான் முதல்வன்3. வறுமை ஒழிப்பு
(d) அஞ்சீவிகா4. சுய உதவிக்குழு
Correct answer: (B) 4 1 2 3
Question 13
Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu? (i) Tamil Nadu ranks third in the country in Udyam Registrations (ii) 30% of the state's entrepreneurs are women (iii) Coimbatore has the greatest number of MSMEs in the state
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை? (i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள். (iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
Correct answer: (C) (i) and (ii) only / (i) மற்றும் (ii) மட்டுமே
Question 14
Which of the following statement(s) is/are true about Khilji building? (i) K.S. Lal observes that with the enthronement of Alauddin Khilji, a new era was ushered in architecture in the Hindu Muslim style (ii) Marshall writes "Hauz-i-Khas is one of the most treasured gems of Islamic architecture." (iii) Percy Brown remarks "the entrance gateway of the mosque of Alauddin Khilji occupies a key position in the evolution of Islamic architecture in India."
கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது எவை உண்மை? (i) அலாவுதின் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லிம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார். (ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார். (iii) அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்.
Correct answer: (C) (i) and (iii) only / (i) மற்றும் (iii) மட்டும்
Question 15
Arrange the following events in chronological order: (1) Civil disobedience movement (2) Sepoy Mutiny (3) Vellore Mutiny (4) South Indian Rebellion
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி முறைப்படுத்துக: (1) சட்ட மறுப்பு இயக்கம் (2) சிப்பாய் கலகம் (3) வேலூர் கலகம் (4) தென்னிந்தியப் புரட்சி
Correct answer: (D) (4), (3), (2), (1)
Question 16
Match correctly the books and the Author name:
(a) Thirukkural Uraivalam1. Va.Se. Kulanthai Samy
(b) Thirukkural nunporul malai2. Ki.Va. Jeganathan
(c) Thirukkural Araichi pathippu3. Kavirathina Kavirayar
(d) Vazhum Valluvam4. Thandapani Thesigar
புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்தவும்:
(a) திருக்குறள் உரைவளம்1. வ.செ. குழந்தை சாமி
(b) திருக்குறள் நுண்பொருள் மாலை2. கி.வா. ஜெகந்நாதன்
(c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு3. காவிரத்தினக் கவிராயர்
(d) வாழும் வள்ளுவம்4. தண்டபாணி தேசிகர்
Correct answer: (A) 4 3 2 1
Question 17
Arrange the major Pallava Kings in chronological order:
(1) Simhavishnu555 to 590 CE
(2) Mahendravarman I590 to 630 CE
(3) Narasimhavarman I630 to 668 CE
(4) Rajasimha695 to 728 CE
காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து:
(1) சிம்மவிஷ்ணு555 முதல் 590 CE
(2) மகேந்திரவர்மன் I590 முதல் 630 CE
(3) நரசிம்மவர்மன் I630 முதல் 668 CE
(4) ராஜசிம்மா695 முதல் 728 CE
Correct answer: (A) 1, 2, 3, 4
Question 18
Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as "Thondruvan Matho Porkalathane"?
சங்ககால தமிழ்ச் சமூகத்தில் "தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பால் புலவர் யார்?
Correct answer: (B) Kaval Pendu / காவல் பெண்டு
Question 19
3 men or 4 women or 12 boys can complete a work in one day. In how many days a man, a woman and 5 boys together can complete that work?
3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Correct answer: (A) 1 day / 1 நாள்
Question 20
Seats for Mathematics, Physics and Biology in a school are in the ratio 5:7:8. There is a proposal to increase these seats by 40%, 50% and 75% respectively. What will be the ratio of increased seats?
ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் 5:7:8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும்?
Correct answer: (A) 2:3:4
Question 21
The cost of 15 kg of sugar is Rs. 255, the cost of 17 kg of tea is Rs. 1,615 and the cost of 22 kg of rice is Rs. 572. What is the total cost of 18 kg of sugar, 21 kg of tea and 27 kg of rice?
15 கி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி தேயிலை விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை ரூ. 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி தேயிலை மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?
Correct answer: (C) Rs. 3,003 / ரூ. 3,003
Question 22
The income of a person is increased by 10% and then decreased by 10%. Find the change in his income in percentage.
ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது. எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
Correct answer: (A) reduced by 1% / 1% குறைகிறது
Question 23
Ravi ranks 9th in a class of 45 students. There are 18 students below Raj Rankwise. How many students are there between Ravi and Raj rankwise?
45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார். இராஜ்க்கு கீழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர். ரவி மற்றும் ராஜ்க்கு இடைப்பட்ட தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
Correct answer: (B) 17
Question 24
If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code is
DANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால் அதே குறியீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
Correct answer: (D) 19-7-9-14-15-20-11
Question 25
Carbon serves for the following purpose/purposes in living organisms: (1) It's a structural component of organic molecule (2) Helps to bind with other molecules (3) Gives flexibility to the form and function of Biomolecules such as DNA and RNA
உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணிகளைச் செய்கிறது? (1) இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது. (2) இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. (3) இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு தெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
Correct answer: (D) (1), (2) and (3) / (1), (2) மற்றும் (3)
Question 26
Which of the following statements are true? Essential properties of Magnetic Materials to be an Electromagnet: I. Narrow hysteresis loop II. High permeability III. High coercivity IV. Low retentivity
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு. மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்: I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி II. மிகு ஊடுருவுதிறன் III. மிகு காந்த நீக்குத்திறன் IV. குறை தக்கவைப்புத் திறன்
Correct answer: (D) I, II and IV are correct / I, II மற்றும் IV சரி
Question 27
Consider the statements about the soil and choose the right answer: (1) The soils of northern plains are largely deposited by Himalayan Rivers (2) The presence of Iron Oxide is more in a soil popularly known as black soil (3) The soil derived from deccan trap is fertile and has high moisture holding capacity
மண் பற்றிய கூற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடு: (1) வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது. (2) கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகம் உள்ளது. (3) தக்காணப் பீடபூமியிலிருந்து உருவாகும் மண் வளமானது மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.
Correct answer: (B) (1) and (3) are correct / (1) மற்றும் (3) சரியானது
Question 28
Choose the right matches among type:
(1) Permanent SettlementLord Curzon
(2) Partition of BengalCornwallis
(3) Ryotwari SystemMunro
(4) Network of RailwaysDalhousie
சரியாகப் பொருத்தியுள்ளதைத் தேர்ந்தெடு:
(1) நிரந்தர நிலவரித் திட்டம்கர்சன் பிரபு
(2) வங்கப் பிரிவினைகார்ன்வாலிஸ்
(3) இரயத்துவாரி முறைமன்றோ
(4) இருப்புப்பாதை இணைப்புடல்ஹௌசி
Correct answer: (D) (3) and (4) are correct / (3) மற்றும் (4) சரி
Question 29
Arrange the following in chronological order: (1) The Indian National Army Trial (2) Formation of Indian National Army (3) The Royal Indian Air Force (4) C. Rajagopalachari's Formula
சரியான காலவரிசையில் அமைத்திடுக: (1) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை (2) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல் (3) இராயல் இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்படுதல் (4) சி. இராஜகோபாலாச்சாரி திட்டம்
Correct answer: (C) (3), (2), (4), (1)
Question 30
Choose the true statement(s) about the Fundamental Duties: (1) To protect the Sovereignty, Unity and Integrity of India (2) To protect and improve the Natural Environment (3) To preserve the rich heritage of our composite culture (4) To safeguard private property
அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடு: (1) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது. (2) இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது. (3) நம்முடைய பாரம்பரியங்களையும், பன்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது. (4) தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.
Correct answer: (C) (1), (2) and (3) only / (1), (2) மற்றும் (3) மட்டும்
Question 31
Identify the correct order of the table of Precedence
முன்னுரிமை அட்டவணை வரிசைப்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
Correct answer: (B) Vice-President, Speaker of the Lok Sabha, Chief Ministers of States, Ministers of State of the Union / துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்
Question 32
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only. A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.
கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைந்தால் குடும்பம், நாடு மற்றும் இந்த உலகம் வளர்ச்சி அடைவதற்கான திறமை மற்றும் அறிவினை பெண்கள் வெளிப்படுத்துவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுமைக் கட்டமைப்பிற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
Correct answer: (B) Importance has to be given to reduce gender discrimination / பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
Question 33
Consider the statements on the national co-operative development corporation (NCDC) and choose the correct answer (1) It is a statutory corporation (2) It is an autonomous organization (3) Now it is a public financial institution (4) Operating under the administrative control of ministry of agriculture and farmer welfare
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் (1) இது ஓர் சட்டப்பூர்வ கழகம் (2) இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும் (3) இன்று இது ஓர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது (4) வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
Correct answer: (B) (1) and (3) only / (1) மற்றும் (3) மட்டும்
Question 34
Match correctly the systems/ideologies with their corresponding names
(a) Report of Ryotwari System1. Thanthai Periyar
(b) Panchamer Schools as Adidravida Schools2. Thomas Munro and Francis Ellis
(c) Leader fought against Patriarchal Chauvinism3. John Rawls
(d) Theory of Justice4. Ayothidasar and Singaravelar
பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக
(a) ரயத்வாரி திட்ட அறிக்கை1. தந்தை பெரியார்
(b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிட பள்ளிகள் என அழைப்பது2. தாமஸ் மன்றோ மற்றும் பிரான்சிஸ் எல்லிஸ்
(c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர்3. ஜான் ரால்ஸ்
(d) நீதி கோட்பாடு4. அயோத்திதாசர் மற்றும் சிங்காரவேலர்
Correct answer: (D) 2 4 1 3
Question 35
The initiative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads to
இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
Correct answer: (C) Improve public health and foster a culture of cleanliness / பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது
Question 36
Which of the following is incorrectly paired in rural-urban migration?
(1) Rural to rural migrationReverse push back
(2) Rural to urban migrationPush-Pull activity
(3) Urban to urban migrationUrban turnover
(4) Urban to rural migrationRural turnover
பின்வருவனவற்றுள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக
(1) கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வுதலைகீழ் எதிர் நகர்வு
(2) கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வுநெருக்குதல் வெளியேற்றுதல் செயல்பாடு
(3) நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வுநகர்புற மறுசுழற்சி
(4) நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம்பெயர்வுகிராமப்புற மறுசுழற்சி
Correct answer: (A) (1) and (4) / (1) மற்றும் (4)
Question 37
Assertion [A]: Migration is the movement of people across regions and territories. Reason [R]: Migration can be external or international.
கூற்று [A]: இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடம்பெயர்தல் ஆகும். காரணம் [R]: இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
Correct answer: (C) Both [A] and [R] are true / கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
Question 38
Which of the following are correctly paired? (1) Kurinji (2) Mullai (3) Marudam (4) Neydal (5) Palai
பின்வருவனவற்றுள் எவை சரியாகப் பொருந்தியுள்ளன? (1) குறிஞ்சி - Parrot / கிளி (2) முல்லை - Wild-cock / காட்டுக் கோழி (3) மருதம் - Lark / வானம்பாடி (4) நெய்தல் - Owl / ஆந்தை (5) பாலை - Pigeon / புறா
Correct answer: (D) (1), (2), (5)
Question 39
Read the following assertion and reason and select the correct answer from the code given below. Assertion [A]: In 1801 the British attacked Sivagangai with a powerful army. Reason [R]: In 1801 the Marudhu brother Chinna Marudhu gave asylum to Oomaidurai.
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். கூற்று [A]: 1801 ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர். காரணம் [R]: 1801 இல் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
Correct answer: (C) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A] / கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம்
Question 40
Thirukkural is a compilation of the sublime, pure human thoughts according to M. Ariel. Based on this saying who has referred the Thirukkural as the Tamil's sacred book?
'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர் யார்?
Correct answer: (A) Mahatma Gandhi / மகாத்மா காந்தியடிகள்
Question 41
To arrange Valluvar's statement about Sageness (1) Modesty (2) Truth (3) Love (4) Obligation (5) Complaisance
சான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக: (1) நாணுடைமை (2) வாய்மை (3) அன்பு (4) ஒப்புரவு (5) கண்ணோட்டம்
Correct answer: (D) (3), (1), (4), (5), (2)
Question 42
"Iruppu Mugam Seriththa Aenthelil Maruppin" - Identify the figure of speech used in the above line
"இருப்பு முகம் செறிந்த ஏந்தெழில் மருப்பில்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
Correct answer: (A) Simile / உவமை அணி
Question 43
A, B and C can separately do a work in 12, 15 and 20 days respectively. They started to work together but C left after 2 days. Then A and B will finish the remaining work in ___ days.
A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகின்றனர் ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம் B-ம் மீதமுள்ள வேலையை ___ நாட்களில் முடிப்பர்.
Correct answer: (A) 4
Question 44
A square park is surrounded by a path of uniform width 2 metre all around it. The area of the path is 288 sq. metres. Find the perimeter of the park
ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்து பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க
Correct answer: (D) 136 m / 136 மீ
Question 45
A man spends Rs. 500 in buying 12 tables and chairs. The cost of one table is Rs. 50 and that of one chair is Rs. 40. What is the ratio of the numbers of the chairs and tables purchased?
ஒரு மனிதர் ரூ. 500 க்கு 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார். ஒரு மேசையின் விலை ரூ. 50 ம், ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் எண்ணிக்கையின் விகிதத்தைக் காண்க
Correct answer: (A) 5:1
Question 46
If LCM of 'a' and a + 2 is 1300. Find the LCM of "a" and a + 1
a மற்றும் a + 2 இவற்றின் மீ.பொ.மடங்கு 1300 எனில் a மற்றும் a + 1 இவற்றின் மீ.பொ.மடங்கு காண்க.
Correct answer: (C) 2550
Question 47
If \(\frac{a}{b} = \frac{4}{5}\) and \(\frac{b}{c} = \frac{15}{16}\) then \(\frac{c^2 - a^2}{c^2 + a^2}\) =
\(\frac{a}{b} = \frac{4}{5}\) மற்றும் \(\frac{b}{c} = \frac{15}{16}\) எனில் \(\frac{c^2 - a^2}{c^2 + a^2}\) =
Correct answer: (B) \(\frac{7}{25}\)
Question 48
The number 311 311 311 311 311 311 311 is
311 311 311 311 311 311 311 என்ற எண் ஆனது
Correct answer: (A) neither divisible by 3 nor by 11 / 3 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-ஆலும் மீதியின்றி வகுபடாது
Question 49
In a dice if 1 is opposite to 4 and 2 is opposite to 5, then
ஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்
Correct answer: (C) 2 is adjacent to 3 and 6 / 2 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது
Question 50
Modern man originated in which period and epoch of Geological Time scale:
PeriodEpoch
(i) TertiaryPaleocene
(ii) TertiaryPliocene
(iii) TertiaryOligocene
(iv) TertiaryMiocene
புவியியல் கால அட்டவணையில் நவீன மனிதன் எந்த பருவம் மற்றும் சிறு காலத்தில் தோன்றினான்:
பருவம்சிறுகாலம்
(i) டெர்ஷியரிபேலியோசீன்
(ii) டெர்ஷியரிபிலியோசீன்
(iii) டெர்ஷியரிஒலிகோசீன்
(iv) டெர்ஷியரிமையோசீன்
No final answer. TNPSC's official tentative answer key placed this question before the Expert Committee for final decision - no final answer was published.
Question 51
Which of the following statements are correct in the context of carbon monoxide emissions? (1) Its mainly due to incomplete combustion of fuel (2) They are more evident in petrol engine (3) Long term exposure can cause nausea
கார்பன் மோனாக்ஸைடு உமிழ்வுகளைப் பற்றி கீழ்க்காணும் எந்தக் கூற்றுகள் சரி? (1) சரிவர எரிக்காத எரிபொருளால் வரக்கூடியது. (2) பெட்ரோல் எரிபொருள் வாகனங்களால் வருவது. (3) நீண்ட நேர உமிழ்வினால் குமட்டல் ஏற்படுத்தும்.
Correct answer: (C) (1), (2) and (3) / (1), (2) மற்றும் (3)
Question 52
Choose the right statement(s) about Malwa Plateau: (1) It has an average altitude of 600 m and slopes towards the east (2) The plateau region is mostly drained by chambal and its tributary rivers (3) The Malwa plateau is located in Rajasthan, Gujarat and Madhya Pradesh
மால்வா பீடபூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க: (1) சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது. (2) பீடபூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது. (3) மால்வா பீடபூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.
Correct answer: (C) (2) and (3) are correct / (2) மற்றும் (3) சரியானவை
Question 53
Assertion [A]: Besides being a political Leader, Gopal Krishna Gokhale was a great Social Reformer. Reason [R]: He was one of the founders of the distinguished organisation known as "The Servants of India Society".
கூற்று [A]: அரசியல் தலைவர் என்பதைத் தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி. காரணம் [R]: இவர் 'இந்திய சமுதாயத்தின் சேவகர்கள்' என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்.
Correct answer: (C) Both [A] and [R] are true / இரண்டும் கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி
Question 54
Arrange the events in chronological order: (1) Communal Award (2) Gandhi Irwin Pact (3) Chittagong outburst (4) Poona Pact
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக: (1) வகுப்புவாதத் தீர்வு (2) காந்தி - இர்வின் உடன்படிக்கை (3) சிட்டகாங் வெடிப்பு (4) பூனா ஒப்பந்தம்
Correct answer: (C) (3), (2), (1), (4)
Question 55
Consider the following pairs:
Famous PlaceRegion
(1) BodhgayaBaghelkhand
(2) KhajurahoBundelkhand
(3) ShirdiVidarbha
(4) NasikMalwa
(5) TirupathiRayalaseema
Which of the pairs given above are correctly matched?
கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக:
புகழ்பெற்ற இடம்பகுதி
(1) புத்தகயாபகல்கண்ட்
(2) கஜுராகோபண்டல்கண்ட்
(3) ஷீர்டிவிதர்பா
(4) நாசிக்மால்வா
(5) திருப்பதிஇராயலசீமா
கீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்துகின்றன?
Correct answer: (C) (2) and (5) only / (2) மற்றும் (5) மட்டும் சரி
Question 56
Identify the statement that is not correct with regard to President of India.
இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
Correct answer: (B) President cannot hold office beyond his term of five years / ஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது
Question 57
Match List I with List II and select the correct answer:
List IList II
ArticlesCouncils
(a) Art 2801. Inter-State Council
(b) Art 2632. Inter-State Water Dispute Tribunal
(c) Art 2623. Goods and Services Tax Council
(d) Art 279 A4. Finance Commission
கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக:
பட்டியல் Iபட்டியல் II
சட்டப்பிரிவுகள்குழு
(a) சட்டப்பிரிவு 2801. மாநிலங்களுக்கிடையிலான குழு
(b) சட்டப்பிரிவு 2632. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம்
(c) சட்டப்பிரிவு 2623. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு
(d) சட்டப்பிரிவு 279 A4. நிதிக்குழு
Correct answer: (B) 4 1 2 3
Question 58
Match the following:
ActsYear
(a) Tamilnadu Consumer Protection Act1. 1969
(b) Consumer Movement2. 1988
(c) Tamilnadu Consumer Protection Rules3. 1986
(d) The Monopolies and Restrictive Trade Practices Act4. 1974
சரியான விடையைப் பொருத்துக:
சட்டங்கள்ஆண்டு
(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்1. 1969
(b) நுகர்வோர் இயக்கம்2. 1988
(c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்3. 1986
(d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம்4. 1974
Correct answer: (A) 3 4 2 1
Question 59
Arrange the following states with respect to their Niti Aayog SDG India Index 2023-24 rankings (1) Tamil Nadu (2) Uttarakhand (3) Kerala (4) Goa
நிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும் மாநிலங்களை வரிசைப்படுத்துக. (1) தமிழ்நாடு (2) உத்திரகண்ட் (3) கேரளா (4) கோவா
Correct answer: (C) (2), (3), (1), (4)
Question 60
The Tamil Nadu Government implemented Kalaingar Magalir Urimai Thogai Scheme for the Welfare of Women. Which of the following is/are the rationale for the scheme? (i) Gender disparity in annual income according to the Global Gender Gap Report 2023 (ii) Changing the poor social status of women (iii) Upliftment of rural women (iv) Recognize the countless hours of silent work put in by women
பெண்களின் நலனுக்காக தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்? (i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு (ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற (iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு (iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
Correct answer: (D) (i) and (iv) only / (i) மற்றும் (iv) மட்டும்
Question 61
The objectives of National Agricultural Market (e-NAM) portal is to (i) Create a unified national virtual market for agricultural commodities (ii) Aid farmers in getting better prices (iii) Provide marketing options to the farmers
தேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்: (i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குவது (ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல் (iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
Correct answer: (D) (i), (ii) and (iii) / (i), (ii) மற்றும் (iii)
Question 62
The objectives of National Skill Development Council is / are (i) To empower women through economic independence (ii) To Organise Training Programmes for youths for skill development across the country (iii) To provide monetary awards for skill certification to boost employability (iv) To boost the productivity of the country's workforce
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்: (i) பொருளாதாரச் சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அடையச் செய்வது (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடையப் பயிற்சித் திட்டங்களை அளிப்பது (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல் (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
Correct answer: (B) (ii), (iii) and (iv) / (ii), (iii) மற்றும் (iv)
Question 63
The ceiling limit per individual for cashless treatment for the first 48 hours of the roadside accidents under "Nammai Kaakum-48" scheme is Rs.
நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ஆகும்.
Correct answer: (B) 2.00 lakh / 2.00 லட்சம்
Question 64
The Central Institute of Classical Tamil (CICT) is functioning in its own new dedicated premises from 2022 onwards in
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்
Correct answer: (D) Perumbakkam / பெரும்பாக்கம்
Question 65
Match the following:
(a) Symbol of wooing1. Kuruntogai
(b) Symbol of love2. Leaf of the Asoka tree
(c) Crow a good harbinger3. Natrinai
(d) Pandil game mentioned in4. White Lilly
பொருத்துக:
(a) ஆதரவு தேடுதலின் சின்னம்1. குறுந்தொகை
(b) அன்பின் சின்னம்2. அசோக மரத்தின் இலை
(c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான்3. நற்றிணை
(d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது4. வெள்ளை அல்லி மலர்
Correct answer: (B) 2 4 1 3
Question 66
Which of the following is incorrectly paired? (i) Gopala Nayak (ii) Dhoondaji Wagh (iii) Marudhupandyas (iv) Pulithevan
பின்வருவனவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (i) கோபால நாயக் - Dindugal / திண்டுக்கல் (ii) தூண்டாஜி வாக் - Madurai / மதுரை (iii) மருதுபாண்டியர்கள் - Ettayapuram / எட்டயபுரம் (iv) புலித்தேவன் - Nerkattanseval / நெற்கட்டாஞ்செவல்
Correct answer: (B) (ii) and (iii) only / (ii) மற்றும் (iii) மட்டும்
Question 67
Whose duties are implicitly taught in Thirukkural?
திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
Correct answer: (B) Women / மகளிர்
Question 68
What according to Valluvar is actually possessed by the people who are called as possessors?
உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
Correct answer: (A) Motivated / ஊக்கம் உடையோர்
Question 69
Match the following:
(a) Thalai sanga pulavanar thammul1. Kambar
(b) Akan podhiyil Thirumunivan Tamil sangam2. Chekilar
(c) Koodalinaintha ondeen Tamil3. Thirugana Sambandar
(d) Madurai Thokaiyakkinan4. Manikkavasakar
பொருத்துக:
(a) தலைச் சங்கப் புலவனார் தம்முள்1. கம்பர்
(b) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம்2. சேக்கிழார்
(c) கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழ்3. திருஞானசம்பந்தர்
(d) மதுரைத் தொகையாக்கினான்4. மாணிக்கவாசகர்
Correct answer: (D) 2 4 3 1
Question 70
The diameter of a sphere is 8 cm. It is melted and drawn into a wire of diameter 3 mm. The length of the wire is
8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருக்கப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால், அக்கம்பியின் நீளம்
Correct answer: (B) 37.9 m / 37.9 மீ
Question 71
A sum of money becomes Rs. 13,380 after 3 years and Rs. 20,070 after 6 years on compound interest. Find the sum
ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
Correct answer: (D) Rs. 8,920 / ரூ. 8,920
Question 72
A, B and C start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point?
A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?
Correct answer: (C) 46 minutes 12 seconds / 46 நிமிடங்கள் 12 வினாடிகள்
Question 73
Find the next term: 64, 32, 48, 120, 420, ___
அடுத்த உறுப்பு காண்க: 64, 32, 48, 120, 420, ___
Correct answer: (B) 1890
Question 74
Directions: Based on the digit-alphabets-symbols series given below, answer the following. @18HLI6K&?UE* How many numbers are there in the series which are preceded by a vowel and succeeded by a consonant?
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள்-எழுத்துக்கள்-குறியீடுகள் தொடரிலிருந்து கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும். @18HLI6K&?UE* எண்கள் உயிரெழுத்தை தொடர்ந்தும், உயிர்மெய் எழுத்துக்கு முன்னும் இத்தொடரில் எத்தனை அமைந்துள்ளது?
Correct answer: (D) One / ஒன்று
Question 75
There are 9 color boxes Red, Black, White, Green, Yellow, Blue, Orange, Violet, Pink but not necessarily in same order. Only 5 boxes placed between Red and White. Yellow is placed immediate above White. Only three boxes are placed between Yellow and Green. As many boxes placed between Red and Green as between Black and Yellow. Blue is placed below black but not at bottom. More than 4 boxes are placed between Yellow and Blue. One box is placed between blue and orange. Pink box is placed above Violet. Which box is placed immediate above and immediate below Black?
ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையில் உள்ளது. நீலப்பெட்டி, கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும், கீழும் இருக்கும்?
Correct answer: (A) Pink and Green / இளஞ்சிவப்பு மற்றும் பச்சை
Question 76
If → stands for 'addition', ← stands for 'subtraction', ↑ stands for 'division', ↓ stands for 'multiplication', ↗ stands for 'equal to' then which of the following alternatives is correct?
→ என்பது கூட்டலையும், ← என்பது கழித்தலையும், ↑ என்பது வகுத்தலையும், ↓ என்பது பெருக்கலையும், ↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?
Correct answer: (D) 2 ↓ 5 ← 6 → 2 ↗ 6
Question 77
One of the following is a mismatch:
(1) Down's SyndromeAutosomal trisomy of 21st chromosome
(2) HaemophiliaSex Linked
(3) Klinefelter SyndromeXO Complement
(4) Turner SyndromeFemale with retarded growth
இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது:
(1) டவுனின் குறைபாட்டு நோய்21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
(2) ஹீமோபிலியாபால் இணைந்த தலைமுறை
(3) கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய்XO நிலை
(4) டர்னரின் குறைபாட்டு நோய்வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
Correct answer: (A) (3) only / (3) மட்டும்
Question 78
Match the following List I with List II SDGs (Sustainable Development Goals):
List IList II
(a) SDG 61. Life on Land
(b) SDG 112. Life Below Water
(c) SDG 143. Clean Water and Sanitation
(d) SDG 154. Sustainable Cities and Communities
கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் Iபட்டியல் II
(a) நிலையான வளர்ச்சி இலக்கு - 61. நிலத்தில் வாழும் உயிரிகள்
(b) நிலையான வளர்ச்சி இலக்கு - 112. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
(c) நிலையான வளர்ச்சி இலக்கு - 143. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
(d) நிலையான வளர்ச்சி இலக்கு - 154. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
Correct answer: (D) 3 4 2 1
Question 79
Which of the following statement(s) about the Din-i-Ilahi is/are correct?
கீழ்காண்பனவற்றுள் தீன்-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள் எவை?
Correct answer: (C) To establish a national religion which would be acceptable to the Muslims and the Hindus / முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்
Question 80
_____ plate exposed that the Chola Queen Vanamadevi Committed Sati.
சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் பட்டயம்
Correct answer: (B) Tiruvalangadu Plate / திருவாலங்காடு பட்டயம்
Question 81
Match the following:
(a) Bharathiar1. Pandian Parisu
(b) Kavimani Desiga Vinayagam Pillai2. Tamilan Ithayam
(c) Bharathidasan3. Kannan Pattu
(d) Ramalingam Pillai4. Asia Jothi
பொருத்துக:
(a) பாரதியார்1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன்3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை4. ஆசிய ஜோதி
Correct answer: (C) 3 4 1 2
Question 82
Match the Column (A) with Column (B):
Column (A)Column (B)
ThemeYear
(a) Judicial Activism1. 1976
(b) Ethical Governance (SARC)2. 1997
(c) Restatement of Values of Judicial life3. 1947
(d) Administrative Tribunal4. 2007
கீழ்கண்ட வரிசை (A) உடன் வரிசை (B) யை பொருத்துக:
வரிசை (A)வரிசை (B)
கருப்பொருள்ஆண்டு
(a) நீதித்துறை செயற்பாடு1. 1976
(b) ஆளுமையில் அறநெறி (SARC)2. 1997
(c) நீதித்துறை வாழ்வின் மாண்புகளின் மறு அறிக்கை3. 1947
(d) நிர்வாகத் தீர்ப்பாயம்4. 2007
Correct answer: (B) 2 1 4 3
Question 83
Choose the correct answer by using Reason [R] and Assertion [A]: Assertion [A]: The Constitution of India specifically mentions the power of Judicial review. Reason [R]: The Judiciary has successfully expanded the scope of Judicial review over the years.
கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: கூற்று [A]: இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. காரணம் [R]: நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.
Correct answer: (C) [A] is false, [R] is true / [A] ஆனது தவறு, [R] ஆனது சரி
Question 84
Find out which of the following pairs is not correctly matched?
கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது?
Correct answer: (C) Prakash Singh Case (2006) - Judicial Reforms / பிரகாஷ்சிங் வழக்கு (2006) - நீதித்துறைச் சீர்திருத்தம்
Question 85
"No man shall be taken or imprisoned, disseized or outlawed, or exiled, or in any way destroyed save... by the law of the land". This famous clause is in...
"நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படுவதோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ" வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது. இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...
Correct answer: (C) Magna Carta / மகாசாசனம்
Question 86
Assertion [A]: HIV infection more often spreads due to conscious behaviour patterns. Reason [R]: The infection of AIDS in blood transfusion patients may occur due to poor monitoring
கூற்று [A]: எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது. காரணம் [R]: இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
Correct answer: (C) Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A] / கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
Question 87
Assertion [A]: Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels, creches and women-specific skilling programmes aim to enhance women's participation in the work force. Reason [R]: Removing barriers to women's participation in the economy, the Government is fostering a more inclusive and dynamic work force.
கூற்று [A]: பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. காரணம் [R]: பெண்கள் பங்கேற்பதற்கான பொருளாதாரத்தில் தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
Correct answer: (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] / கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
Question 88
Tax Incentives for startup companies for a period of three years have been introduced in the
புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்ட நிதி சட்டம்?
Correct answer: (A) Finance Act, 2016 / நிதிச் சட்டம், 2016
Question 89
The major renewable energy source in Tamil Nadu
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
Correct answer: (A) Windmill / காற்றாலை
Question 90
Which of the following is incorrectly paired? (1) Coimbatore (2) Madurai (3) Namakkal (4) Thanjavur
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (1) கோயம்புத்தூர் - Manchester of South India / தென்னிந்தியாவின் மான்செஸ்டர் (2) மதுரை - Cultural capital of Tamil Nadu / தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம் (3) நாமக்கல் - Rice Bowl of Tamil Nadu / தமிழகத்தின் நெற்களஞ்சியம் (4) தஞ்சாவூர் - Egg city / முட்டை நகரம்
Correct answer: (D) (3) and (4) / (3) மற்றும் (4)
Question 91
Choose the right matches among type: (1) Kaverippakkam Inscription (2) Thirumukkudal Inscription (3) Tiruvalangadu Plates (4) Uthiramerur Inscription
சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்: (1) காவேரிப்பாக்கம் கல்வெட்டு - Varaguna / வரகுணா (2) திருமுக்கூடல் கல்வெட்டு - Virarajendra / வீரராஜேந்திரா (3) திருவாலங்காடு செப்பேடு - Rajendra I / முதலாம் ராஜேந்திரா (4) உத்திரமேரூர் கல்வெட்டு - Parantaka I / முதலாம் பராந்தகா
Correct answer: (C) (2), (3) and (4) are correct / (2), (3) மற்றும் (4) சரி
Question 92
Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.
மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
Correct answer: (B) Justice Party / நீதிக்கட்சி
Question 93
Find out the correct statement: (1) Thirukkural was translated in Hindi - Appathetsithar (2) Thirukkural was translated in German - Ariel (3) Thirukkural starts with alphabet 'அ' (Aa) and end with 'ன' (Na) (4) Friendship has 13 chapters
சரியான கூற்றினைக் கண்டறிக: (1) திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர் (2) திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல் (3) திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடிகிறது (4) நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
Correct answer: (B) (1), (3) only / (1), (3) மட்டும்
Question 94
Assertion [A]: "All opinions are here, There is nothing that is not in it". Reason [R]: Many of Thiruvalluvar's ideas were innovative and revolutionary compared to the prevailing policies of his time.
கூற்று [A]: "எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை" காரணம் [R]: திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
Correct answer: (D) Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A] / [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல
Question 95
Choose the right matches of the following places where Sangam period coins were found in Tamil Nadu. (1) Dharmapuri (2) Salem (3) Erode (4) Trichy
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க. தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்: (1) தர்மபுரி - Thoppoor / தொப்பூர் (2) சேலம் - Kanniyan Kuttai / கன்னியன் குட்டை (3) ஈரோடு - Mukkombu / முக்கொம்பு (4) திருச்சி - Vembavoor / வெம்பாவூர்
Correct answer: (D) (2) and (4) are correct / (2) மற்றும் (4) சரி
Question 96
A borrows Rs. 16,000 at 12% p.a. simple interest and B borrows Rs. 12,000 at 18% p.a. simple interest. In how many years will their amounts debt be equal?
தனி வட்டியில், A என்பவர் ரூ.16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகை சமமாக இருக்கும்?
Correct answer: (C) 16⅔ years / 16⅔ ஆண்டுகள்
Question 97
Two numbers are in the ratio of 15:11. If their HCF is 13. Find the numbers.
இரு எண்கள் 15:11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க.
Correct answer: (B) 195 and 143 / 195 மற்றும் 143
Question 98
The least number of square tiles required to pave the ceiling of a room 15 m 17 cm long and 9 m 2 cm broad is
15 மீ 17 செ.மீ நீளமும் 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் தளத்தை அமைக்கத் தேவையான சதுர ஓடுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
Correct answer: (B) 814
Question 99
P is elder than Q. R is elder than Q but younger than P. S is elder than P but younger than T. Who is the youngest?
P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் P ஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் T ஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?
Correct answer: (C) Q
Question 100
If A→1, B→2, C→3... Z→26, \(A^B + B^C + C^A\) will not be equal to
A→1, B→2, C→3... Z→26 எனில், \(A^B + B^C + C^A\) க்கு சமமாக இருக்காது:
Correct answer: (C) (B)(E)
Read next: All Group 2 Question Papers · TNPSC Group 2 & 2A Syllabus 2026 · Group 2 Exam Date 2026 · Group 2 Hall Ticket 2026
Want full-length practice at this exact standard?

Our Focus Group 2 test series follows the official syllabus and weightage - full 200-question papers, answer keys and video explanations for every test, built for the 1 November 2026 Prelims.

Group 2 Prelims Test Series 2026

Students Also Read